முகத்தை மூடுதல் : கண்மூடித்தனமாக மக்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்

0 1,823

ஒரு சில முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடு­வது இப்­போது முக்­கிய பேசு­பொ­ரு­ளாக உள்­ளது. பெண்கள் முகத்தை மூடு­வது மார்க்கக் கடமை, அது முஸ்­லிம்­க­ளது உரிமை, ஒருவர் விரும்­பி­ய­வாறு உடை­ய­ணி­வது அவ­ருக்­குள்ள மனித உரிமை என சிலர் வாதி­டு­கின்­றனர். ஜன­நா­யக நாட்டில் எமது குடையை எமக்கு விரும்­பி­ய­வாறு சுழற்­று­வ­தற்கு உரிமை உண்டு. ஆனால் அது அடுத்­த­வரின் முகத்தில் பட்டு காயங்­களை ஏற்­ப­டுத்­தி­வி­டக்­கூ­டாது. மனித உரி­மைகள் சமூகப் பின்­ன­ணி­யி­லி­ருந்து பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஆகவே நாட்டில் உள்ள சட்­டங்கள், அடுத்­த­வர்­களின் உணர்­வுகள் என்­ப­வற்றைக் கருத்­திற்­கொண்டே மனித உரி­மை­க­ளுக்­காக வாதிட வேண்டும். சிலர் நாட்டில் உள்ள சட்­டங்கள், அடுத்த சமூ­கத்தின் உணர்­வுகள் பற்றி கருத்தில் கொள்­வ­தில்லை. அது மாத்­தி­ர­மின்றி முஸ்லிம் மக்­களை உணர்ச்சி வசப்­ப­டுத்­தவும், முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களை தம்­பக்கம் இழுத்துக் கொள்­வ­தற்கும் பல­மான முயற்­சி­களை மேற்­கொள்­கின்­றனர். இதற்­கான ஒரு ஆரம்ப முயற்­சி­யாக சென்ற சில வாரங்­க­ளுக்கு முன் தெஹி­வளை பள்­ளி­வா­சலில் ஒரு கூட்டம் நடை­பெற்­றது. இந்தக் கூட்­டத்தில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற அங்­கத்­த­வர்கள், அமைச்­சர்கள், ஆளு­நர்கள் கலந்து கொண்­டனர். கூட்­டத்தில் கலந்து கொள்­ளா­விட்டால் தம்­மீது பழி வந்து விடுமோ என்­ப­தற்­காக அவர்கள் கலந்து கொண்­டார்­களா அல்­லது முகத்தை மூடு­வது நமது உரிமை என்­பதை வலி­யு­றுத்­து­வ­தற்­காக வருகை தந்­தார்­களா என்­பது தெரி­ய­வில்லை. இக்­கூட்­டத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்லிம் மக்­களும் கலந்து கொண்­டனர். இவர்கள் மே தின ஊர்­வ­லங்­க­ளுக்கு வரு­ப­வர்கள் போல் உணர்ச்­சி­யூட்­டப்­பட்டு வர ­வ­ழைக்­கப்­பட்­டார்­களா அல்­லது உண்­மையை விளங்­கிக்­கொண்­டுதான் கூட்­டத்தில் கலந்து கொண்­டார்­களா என்­பதை ஒரு பகுப்­பாய்வு நடத்­தித்தான் தெரிந்து கொள்ள வேண்டும். 

இப்­போ­தைய சூழ்­நி­லையில் உணர்ச்­சி­களை கக்கும் வீர­பு­ரு­ஷர்கள் நமக்குத் தேவை­யில்லை. அவர்கள் தமது நிகழ்ச்சி நிரல்­களை நிறை­வேற்றி தம்மை வளர்த்துக் கொள்ளும் முயற்­சியில் சமூ­கத்தை பலிக்­க­டா­வாக்க முயல்­கின்­றனர். இதற்­காக ஏதும் ஒரு சிறு­பி­ரச்­சினை தோன்­றும்­போது அதனைப் பெரி­து­ப­டுத்தி தானே முஸ்­லிம்­களின் தலைவன் என்ற பெயர் வாங்­கு­வ­தற்­காக முழக்­க­மி­டு­கின்­றனர். இனங்­க­ளி­டையே ஏற்­பட்­டு­வரும் முறுகல் நிலையை ஜனா­தி­ப­திக்கோ, பிர­த­ம­ருக்கோ, அர­சி­யல்­வா­தி­க­ளுக்கோ முற்­றாகத் தீர்க்க முடி­யாது. பெரும்­பான்மை மக்கள் பொங்கி எழும்­போது இவர்­களால் என்ன செய்ய முடியும். அவர்கள் பெரும்­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருப்­பதால் நமக்­குள்ள உணர்­வு­களே அவர்­க­ளுக்கும் இருக்கும். இந்த உணர்வு இயற்­கை­யா­னது, சர்­வ­சா­தா­ர­ண­மா­னது.

இனங்­க­ளி­டையே ஏற்­பட்­டுள்ள வெறுப்­பு­ணர்வை நீக்­கு­வதற்கு நல்­லு­றவை வளர்த்து நல்­லெண்­ணத்தை வளர்ப்­பதே ஒரே­வழி அது­வன்றி ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்­களை கொழும்­புக்கு அழைத்து வந்து வீராப்பு பேசு­வது எம்­மீ­துள்ள வெறுப்பை மேலும் அதி­க­ரித்து இன வைராக்­கி­யத்தை இறுக்­க­ம­டையச் செய்யும். தெஹி­வளை பள்­ளி­வா­சலில் நடை­பெற்ற கூட்டம் மறை­மு­க­மாக இன உணர்­வு­களை அதி­க­ரித்­துள்­ளன என்­பதே உண்மை. ஆகவே நிதா­ன­மாகச் சிந்­திக்க வேண்­டிய அர­சி­யல்­வா­திகள், முஸ்லிம் அறி­ஞர்கள், மௌல­விகள், அர­சி­யல்­வா­திகள் நமக்குத் . தேவைப்­ப­டு­கின்­றனர்.

‘ஆடைக் கலா­சா­ரம்’­பற்றி அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா, சிங்­கள மொழியில் வெளி­யிட்­டுள்ள கைநூலில் பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
“முஸ்லிம் பெண்கள் மணிக்­கட்­டுக்கு வெளியே உள்ள பகுதி, முகம் என்­பன தவிர்ந்த ஏனைய பகு­தி­களை மறைக்க வேண்டும் என்­பது பெரும்­பான்­மை­யான முஸ்லிம் சட்ட நிபு­ணர்­களின் கருத்து ஆனால் ஒரு சிலர் முகத்­தையும் மறைக்க வேண்டும். எனக் கூறு­கின்­றனர். (பக்கம்20) ஆகவே ஜம்­இயத்துல் உலமா சபை, பெரும்­பான்மை அறி­ஞர்­களின் கருத்­துப்­படி முக­மூடி அணிய வேண்­டிய கட்­டாயம் இல்லை என்­பதை ஊட­கங்கள் மூலமும் கொத்­பாக்­கங்­க­ளிலும் அறி­வித்­தி­ருந்தால் முக­மூடும் பழக்கம் இலங்­கையில் ஏற்­பட்­டி­ருக்­காது.
ஜம்­மி­யத்துல் உலமா இது பற்றி மௌனம் சாதித்­தது ஏதோ ஒரு இயக்­கத்தின் செய­லுக்கு ஜம்­இயத்துல் உல­மாவின் முத்­தி­ரை­குத்தி இப்­போது அதனை ஒரு உரிமைப் போராட்­ட­மாக மாற்­றி­யுள்­ளது. அதே நேரம் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளையும் சகல முஸ்­லிம்­க­ளையும் இப்­போ­ராட்­டத்தில் இணைத்துக் கொள்­ளவும் முயல்­கின்­றனர். தெஹி­வளை, முஹி­யத்தீன் ஜும்ஆப் பள்­ளி­வா­சலில் நடை­பெற்ற கூட்­டத்தில் உரை­யாற்­றிய ஒரு மௌலவி “பெண்கள் முடி­யு­மான வரை தலை முக்­கா­டு­களை கண்­வரை தாழ்த்திக் கொள்ள வேண்டும். என்றே குர்ஆன் குறிப்­பி­டு­வ­தாயும் இஜ்மாஃ, கியாஸைப் அடிப்­ப­டை­யிலே முகம் மூடு­வது கட்­டாயம் என்ற முடி­வுக்கு வந்­த­தாயும் அவர் குறிப்­பிட்டார். இங்கு இஜ்மாஃ, கியாஸ் என்­பதை பயன்­ப­டுத்­து­வதன் நோக்கம் நிறை­வே­ற­வில்லை. தம்மால் வலிந்து அறி­முகம் செய்­யப்­பட்ட ஒரு செயலை தவிர்த்துக் கொள்­ளாது, பிடி­வா­த­மாக நின்று அதனை சரி கண்டு மக்­களை பலிக்­க­டா­வாக்கும் முயற்­சிக்கு இஜ்மாஃ, கியாஸ் பயன்­ப­டுத்­தப்­பட்டது. நல்ல விளை­வு­களைக் கருத்­திற்­கொண்டும், இலங்­கையில் வாழும் சிறு­பான்மை முஸ்லிம்களின் எதிர்­காலம் குறித்தும் நல்ல முடி­வு­களை எடுப்­ப­தற்கு இஜ்மாஃ, கியாசைப் பிர­யோ­கிப்­பதே சாலச்­சி­றந்­தது புத்தி சாதுர்­ய­மா­னது.

மறு­வ­கையில் இலங்­கையில் இப்­போ­தைய சூழலில் முகத்தை மூடு­வது சாத்­தி­யமா என்­பது சிந்­திக்க வேண்­டிய ஒன்று. புலி­களின் காலத்தில் கூட நாம் முக­மூடிச் சென்றோம். ஏன் இப்­போது முக­மூ­டு­வது தடை செய்ய வேண்டும் எனச் சிலர் கேட்­கின்­றனர். புலிகள் வடக்­கிலும் கிழக்­கிலும் இரா­ணு­வத்­துடன் நேருக்கு நேர் போரிட்­டனர். தற்­கொலைக் குண்­டு­தா­ரிகள் கூட கருப்பு உடை­ய­ணிந்து முக­மூ­டி­ய­வாறு குண்டுத் தாக்­கு­தலில் ஈடு­ப­ட­வில்லை. சாதா­ரண மக்கள் போன்ற உடை­ய­ணிந்து சென்று பொது இடங்­களில் குண்­டு­களை வெடிக்கச் செய்­தனர். அப்­போது முஸ்­லிம்கள் மீது எந்த சந்­தே­கமும் இருக்­க­வில்லை. அவர்கள் சமா­தா­னத்­தையும் சக­வாழ்­வையும் விரும்பும் சமூ­க­மாக மதிக்­கப்­பட்­டனர். ஓய்­வு­பெற்ற, பரீ்ட்­சைகள் ஆணை­யாளர் ஒருவர் என்­னிடம் பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்டார். ‘முஸ்லிம் பெண்­பிள்­ளை­களை அதிகம் பரீட்சை மண்­ட­பங்­களில் சோத­னைக்­குட்­ப­டுத்த வேண்டாம். அவர்கள் அப்­பா­விகள், நேர்­மை­யா­ன­வர்கள் எனக் கூறு­வாராம். இப்­போது நிலைமை தலை­கீ­ழாக மாறி­யுள்­ளது. இதற்கு தீவி­ர­வா­தி­களின் குண்டு வெடிப்பு மட்­டும்தான் கார­ணமா? சென்ற பத்து/ இரு­பது வரு­டங்­க­ளுக்கு முன்­பி­ருந்தே இந்த சந்­தே­கங்கள் வளர்ந்து வரு­கின்­றன.

கருப்பு உடையும், முக­மூ­டியும் தீவி­ர­வா­திகள் அணியும் உடை என்­பதை எல்லா மக்­களும் ஊட­கங்கள் மூலம் காண்­கின்­றனர். இலங்­கை­யிலும் கொள்­ளைக்­கா­ரர்கள், திரு­டர்கள், கொலை­கா­ரர்கள் முகத்தை மூடிக்­கொண்டே குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­கின்­றனர். ஆகவே இலங்­கையில் முகம் மூடு­வதை அனு­ம­தித்தால் குற்ற செயல்­களில் ஈடு­ப­டு­வோரை அடை­யாளம் காண­மு­டி­யாது போகும். குண்டு வெடிப்பின் பின் குற்­ற­வா­ளி­களை கண்­ட­றி­வ­தற்கு முஸ்­லிம்கள் அர­சுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­யுள்­ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்­சாளர், இரா­ணுவ தள­பதி, பிர­தமர் மற்றும் எதிர்க்­கட்சி அர­சி­யல்­வா­திகள் குறிப்­பிட்­டுள்­ளனர். பயங்­க­ர­வா­தி­களின் உடல்­களை இஸ்­லா­மிய முறைப்­படி அடக்கம் செய்­யக்­கூ­டாது எனவும் ஜம்­இயத்துல் உலமா அறி­வித்­தது. இந்த செயல்­மு­றைகள் முஸ்­லிம்கள் மீதி­ருந்த வெறுப்பை ஓர­ளவு குறை­வ­டையச் செய்­தி­ருக்கும்.

பயங்­க­ர­வா­திகள் அனை­வரும் இப்­போது கைது செய்­யப்­ப­ட­வில்லை என புல­னாய்வு தக­வல்கள் தெரி­வித்­துள்­ளன. இன்னும் சிலர் கைது செய்­யப்­ப­டு­கின்­றனர். குற்­ற­மற்­ற­வர்­களும் சந்­தே­கத்தின் பெயரில் கைது செய்­யப்­பட்டு விடு­தலை செய்­யப்­ப­டு­கின்­றனர். குண்டு வெடிப்பில் உயிர் இழந்த ஓரிரு பயங்­க­ர­வா­தி­களும் கருப்பு உடை­ய­ணிந்து முகம் மூடி­ய­வாறு நட­மா­டி­யுள்­ள­தா­கவும் தக­வல்கள் கசிந்­துள்ளன. ஆகவே முஸ்லிம் சமூகம் முகம் மூடு­வதை அனு­ம­திக்­கு­மாறு தற்­போ­தைக்கு வலி­யு­றுத்­தாது பொறுமை காத்து, நாம் பாது­காப்பு நோக்­கங்­க­ளுக்­காக அர­சுக்கு வழங்­கிய ஒத்­து­ழைப்பை தொடர்ந்தும் வழங்­க­வேண்டும்.

நாம் சமூகப் பிரச்­சி­னைகள் தோன்றும் போது ஒரு பக்­கத்தை மாத்­திரம் பார்த்து நாம் செய்­வதை சரி­காண முய­லக்­கூ­டாது. அடுத்த பக்­கத்­தையும் புரட்டிப் பார்க்க வேண்டும். வேறொரு கோணத்­தி­லி­ருந்து பார்க்கும் போது முகம் மூடு­வது பல­பக்க விளை­வு­க­ளையும் கலா­சார சீர­ழி­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஒரு முஸ்லிம் ஆசி­ரியர், ஏற்­னவே திரு­ம­ண­மா­னவர். க.பொ.த. வகுப்பில் படிக்கும் ஒரு மாண­வியை காத­லித்தார். அவ­ரது மனைவி ‘சல்வார்’ அணிந்து தலைக்கு ‘ஸ்கார்ப்’ கட்டும் பழக்­க­மு­டை­யவர். திடீ­ரென அவர் தனது மனை­விக்கு கருப்பு ஹிஜாப் அணிந்து முகத்தை மூடு­மாறு கட்­ட­ளை­யிட்டார் .கண­வ­னுக்கு பக்தி மேலீட்டால் ஞானம் பிறந்து விட்­ட­தாக மகிழ்ச்­சி­ய­டைந்த மனைவி முகத்தை மூடினாள். அவர் தனது முதல் மனை­வியை மோட்டார் சைக்­கிளில் வைத்துக் கொண்டு பயணம் செய்தார். இப்­போது குறிப்­பிட்ட ஆசி­ரி­யரின் மனைவி முகம் மூடு­கிறார் என்­பது ஊருக்கு உறு­தி­யா­கி­விட்­டது. அதன் பின்தான் காத­லித்த மாண­வியின் முகத்தை மூடிக் கொண்டு தேவை­யான இடங்­க­ளுக்கு அழைத்துச் சென்­ற­தாக ஊர் மக்கள் பேசிக் கொள்­கின்­றனர். நான் நேர­டி­யாகக் கண்ட சம்­பவம் அல்ல. ஆகவே தேவை­யா­ன­வர்கள் தக­வலை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்­ளுங்கள். மற்­றொரு சம்­பவம் எனக்கு நேர­டி­யாகத் தெரிந்த விடயம். என்­னிடம் இலங்­கையில் உள்ள தலை­சி­றந்த முஸ்லிம் பெண் சட்­டத்­த­ரணி பின்­வ­ரு­மாறு கூறினார். ‘ஒரு முஸ்லிம் தன­வந்தர் என்­னிடம் வந்து எனது மனை­வியின் பெய­ருக்­குள்ள சில சொத்­துக்­களை என் பெய­ருக்கு மாற்ற வேண்­டி­யுள்­ளது எனக் கூறினார். நான் அவரை அழைத்து வரு­மாறு கூறினேன். அவர் வர­மாட்டார் முகம் மூடி­ய­வாறு வீட்­டில்தான் இருப்­ப­தாகக் கூறினார். நான் ஒரு பெண்­ணாக இருப்­பதால் நான் வீட்­டுக்கு வந்து கையொப்பம் வாங்­க­லாமா எனக் கேட்டார். அவர் என்னை வீட்­டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு முகத்தை மூடி­ய­வாறு ஒருவர் இருந்தார். ஆணோ/ பெண்ணோ தெரி­யாது) உயில் எழுத முன் அடை­யா­ளத்தை அறிந்து கொள்­வ­தற்­காக முகத்தை திறக்­கு­மாறு கூறினேன். அவர் மறுத்தார். நான் உயில் எழு­தாமல் திரும்பி விட்டேன். அவரின் உள்­நோக்கம் எதுவோ அல்லாஹ் அறிவான். முகம் மூடு­வதை கேலி செய்­வ­தற்­காக நான் இச் சம்­ப­வங்­களைக் குறிப்­பி­ட­வில்லை. புனி­த­மான ஒரு செயலை கேலிக்கு உள்­ளாக்கும் ஒரு சில முஸ்­லிம்கள் பற்றி விழிப்­பாக இருக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே இச் சம்­ப­வங்­களைக் குறிப்­பிட்டேன். 

முஸ்லிம் சமூகம் ‘பர்­தாவின்’ நோக்­கத்தை இன்னும் தெளி­வாக விளங்கிக் கொள்­ள­வில்லை. ‘ஆணும், பெண்ணும் தனது பார்­வையைத் தாழ்த்திக் கொள்­ளு­மாறும்; ஆபா­சத்தை அல்­லது பாலு­ணர்­வு­களைத் தூண்டும் ஆடை­களை ஆணும், பெண்ணும் அணியக் கூடாது என குர்ஆன் தெளி­வாகக் குறிப்­பி­டு­கி­றது. கடந்த 60 வரு­டங்­க­ளுக்கு முன் பெண்கள் ‘துப்­பட்டா’ அணிந்து நெட் துணியால் முகத்தை மூடி­ய­வாறே வெளியில் சென்­றார்கள். அவர்கள் பயணம் செய்­யும்­போது வாக­னத்தில் கண்­ணா­டி­களை சேலையால் மூடி­வி­டு­வார்கள். பாதையில் தென்­படும் காட்­சி­களை அவர்­க­ளுக்கு பார்க்க முடி­யாது. பாதை­யோ­ரங்­களில் உள்ளோர் அவர்­களைப் பார்க்­கவும் முடி­யாது. இப்­போது என்ன நடை­பெ­று­கி­றது. கறுப்பு அபாயா அணிந்து, முகத்தை மூடிக்­கொண்டு வாக­னங்­களின் பக்கக் கண்­ணா­டி­களை திறந்­த­வாறு பாதையில் காணும் அனைத்­தையும் ரசித்துக் கொண்டு செல்­கின்­றனர். கடற்­கரை வழியே போகும்­போது நீச்­ச­லு­டை­யுடன் உள்ள ஆண்­க­ளையும் பார்க்­கின்­றனர். அவர்கள் ஹோட்­டல்­களில் தங்­கும்­போது நீச்சல் தடாகங்­க­ளுக்கு பக்­கத்தே இருந்து முகத்தை மூடி­ய­வாறு கதைத்துக் கொண்­டி­ருக்­கின்­றனர். மெக்­டொனால்ட், கே.எப்.சி. மற்றும் உண­வ­கங்­க­ளுக்குச் சென்று சாப்­பி­டு­கின்­றனர். மாலை நேரத்தில் காலி முகத்­தி­ட­லுக்குச் சென்று அங்கு நடை­பெறும் எல்­லாக்­காட்­சி­க­ளையும் கண்டு களிக்­கின்­றனர். எனது கருத்­துக்­களை சீர­ணிக்க முடி­யாது ஆத்­தி­ர­ம­டை­கின்ற சில முஸ்லிம் சகோ­த­ரர்­க­ளுக்கு தயவு செய்து நேர­டி­யாகச் சென்று நிலை­மையை கண்­ட­றி­யு­மாறு அன்­போடு வேண்டிக் கொள்­கிறேன்.

தர்கா நகரில் ஒரு முஸ்லிம் ஆசி­ரியை கற்­பித்தார். அவர் வெள்ளை நிற சாரி அணிந்து வெள்ளை நிறப் பொப்­லினால் ஹிஜாப் அணிந்து வருவார். முகம் மட்டும் திறந்­தி­ருக்கும். நான் 20 வரு­டங்­க­ளாக அவரை அவ­தா­னித்­துள்ளேன். வெளியே செல்­லும்­போது வைப­வங்­களில் கலந்து கொள்­ளும்­போது எளி­மை­யான அந்த வெள்­ளு­டை­யி­லேயே செல்வார். உடை­யிலே ஆடம்­ப­ர­மற்ற தன்­மையும், நடத்­தை­யிலே ஓர் அடக்­கமும் காணப்­பட்­டது. இதைத்தான் நான் இஃலா­சுடன் கூடிய ‘பர்தா’ என அழைக்­கிறேன். அல்­லாஹ்வின் பார்வை எப்­ப­டி­யி­ருந்­ததோ அவ­னுக்கு மட்­டும்தான் தெரியும்.

இக்­கா­லத்தில் பெண்கள் அணியும் அபா­யாக்கள் சுமார் 10,000/= முதல் 20,000/= பெறு­ம­தி­யு­டை­யவை. அது மினு­மி­னுக்கும் எல்­லோ­ரது கவ­னத்­தையும் ஈர்க்கும் சிலர் உட­லோடு ஒட்­டிய அபா­யாக்­க­ளையும் அணி­கின்­றனர். நடக்­கும்­போது அவர்­க­ளது உடல் நலிவு, மெலி­வுகள் நன்­றாகத் தெரி­கின்­றன. இதனைப் பிற ஆண்கள் நன்­றாக உற்றுப் பார்க்­கின்­றனர். முகத்தை மூடு­வதால் மட்டும் அல்­லாஹ்­விடம் தப்ப முடி­யுமா? இன்னும் சிலர் முகத்தை மூடி­ய­வாறு கடைகள், சந்­தை­க­ளுக்குச் செல்­கின்­றனர். நடுத்­தெ­ருவில் தன்னந் தனியே நின்று கைய­டக்கத் தொலை­பேசி மூலம் ‘ஆட்­டாக்­களை’ (முச்­சக்கர வண்­டி­களை) வர­வ­ழைத்து துணை­யின்றிப் பயணம் செய்­கின்­றனர். முகம் மூட­வேண்டும் என உரிமைக் குரல் எழுப்பும் நாம் இந்தப் பின்­ன­ணிகள் பற்றி நன்கு கிர­கித்துக் கொள்­ள­வேண்டும்.

முஸ்­லிம்­க­ளுக்கு மிக­நெ­ருக்­க­மான ஒரு வைத்­தி­ய ­நி­புணர் டாக்டர் சரத் காமினி டி சில்வா. இவர் கடந்த 50 வரு­டங்­க­ளாக வைத்­தியம் செய்­கிறார். அவரிடம் வைத்­திய ஆலோ­சனை பெறு­வோர்கள் அதி­க­மானோர் முஸ்­லிம்கள். அவர் சென்ற வருடம் முஸ்லிம் நண்­பர்­க­ளுக்கு ஒரு மின்­னஞ்சல் அனுப்­பி­யி­ருந்தார். அதில் பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டி­ருந்தார்.

”முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­செ­யல்கள் தூண்­டி­வி­டப்­பட்ட போதெல்லாம் நாம் அதற்கு எதி­ராக குரல் கொடுத்தோம். சிங்­கள மக்கள் எல்­லோரும் இன­வா­திகள் அல்ல. அவர்கள் முஸ்­லிம்கள் மீது அனு­தாபம் காட்­டு­கின்­றனர். நாம் முஸ்­லிம்­க­ளுடன் நெருங்கி வாழ விரும்­பு­கிறோம். ஆனால் முஸ்லிம்கள் எங்­களை விட்டு தூர­மாகிச் செல்­கின்­றனர். தனித்­துவம் என்ற பெயரில் தனியே வாழ்­வ­தற்கு முற்­ப­டு­கின்­றனர். இலங்கை முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய பாரம்­ப­ரிய கலா­சா­ரத்தை விட்டு அரா­பிய கலா­சா­ரத்தை நாட்டில் புகுத்த முயற்­சிக்­கின்­றனர். இது சிங்­கள மக்கள் மத்­தியில் அச்­சத்­தையும் சந்­தே­கத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இந்த அச்­சத்­தாலும் சந்­தே­கத்­தாலும் ஏற்­பட்டு வரும் வெறுப்­பு­ணர்­வு­களை மாற்­று­வ­தற்கு முஸ்லிம்கள் தம்மை மாற்­றிக்­கொள்ள வேண்டும். அது­வன்றி இன­வா­திளை கண்­டிப்­பதால் அல்­லது பாரா­ளு­மன்­றத்தில் இன­வாத எதிர்ப்பு சட்­டங்­களைக் கொண்டு வரு­வதால் அவர்­க­ளிடம் வளரும் வெறுப்­பு­ணர்வை நீக்க முடி­யாது. ஜெனி­வாவில் முஸ்­லிம்­களின் உரி­மைக்­காக குரல் எழுப்­பு­வதன் மூலமும் இது சாத்­தி­ய­மா­காது. அது முஸ்லிம் மக்­க­ளுக்கு நாட்டைப் பற்­றிய நல்­லெண்ணம் இல்லை என்ற அபிப்­பி­ரா­யத்தை ஏற்­ப­டுத்தும். ஆகவே முஸ்­லிம்­க­ளுக்­குள்ள ஒரே வழி,பெரும்­பான்மை சமூ­கத்தின் வெறுப்­பு­ணர்வை நீக்கும். வகையில் தமது நடத்தைக் கோலங்­களை, செயற்­பா­டு­களை மாற்­றி­ய­மைப்­ப­தாகும். இல்­லா­விடில் முஸ்­லிம்கள் மீது அனு­தாபம் காட்டும் படித்த சிங்­கள மக்­களும் அவர்­க­ளி­ட­மி­ருந்து தூர­மா­கி­வி­டுவர்”.

ஒரு­வேளை தேர்தல் நெருங்­கு­வதால் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு அழுத்தம் கொடுத்து ‘முகத்­திரை’ இடு­வ­தற்கு அனு­மதி பெறலாம். இது தற்­கா­லி­க­மா­னது. ‘முகத்­திரை’. அனு­மதி பற்றி இலங்­கையில் உள்ள நான்கு பிர­தான பெரும்­பான்மை கட்­சி­களும் ஒரே நிலைப்­பாட்டில் உள்­ளன. ஆகவே நாட்டில் சம்­பூ­ர­ண­மாக பயங்­க­ர­வாதம் ஒழிக்­கப்­படும் வரை இது சாத்­தி­ய­மா­காது. பயங்­க­ர­வாதம் என்­பது தனியே முஸ்லிம் தீவி­ர­வா­தி­களால் மட்­டு­மின்றி போதைப்­பொருள் கடத்­துவோர், பாதாள உலக கோஷ்­டி­யினர் அல்­லது வேறு சில இனக்­கு­ழுக்­களால் தோற்­று­விக்­கப்­ப­டலாம். அல்­லது சர்­வ­தே­சங்­களின் சதி முயற்­சி­களால் தோன்­றலாம். இவை அனைத்தும் இல்­லாத ஒரு சூழ்­நிலை நாட்டில் தோன்­றுமா? அது­வரை ‘முகத்­திரை’ அணி­வது கேள்­விக்­கு­ரிய விட­ய­மா­கவே இருக்கும். இந்த யதார்த்­தத்தை முஸ்­லிம்கள் புரிந்து கொள்­ள­வேண்டும். மறு­புறம் மனித உரிமை என்ற ரீதியில் நீதி­மன்றம் சென்று முகத்­திரை அணி­வ­தற்கு அனு­ம­தி­பெ­றலாம். இந்த நட­வ­டிக்­கைகள் எதுவும் பெரும்­பான்மை சமூ­கத்தின் உள்­ளத்தை வெல்­வ­தற்கு உத­வாது. நீதி­மன்ற அனு­மதி பெற்று முகத்­திரை அணிந்து அரச காரி­யா­ல­யங்­க­ளுக்கு சென்றால் பெரும்­பான்மை சமூ­கத்தை சேர்ந்தோர் எழும்பி வெளி­ந­டப்பு செய்தால் நமக்கு என்ன செய்ய முடியும். இலங்கை போன்று முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள ஒரு நாட்டில் அதுவும் பயங்கரவாதம் ஊடுருவியுள்ள ஒரு நாட்டில், முகத்திரை அணிவது தொடர்பாக ஏகோபித்த ஒரு அபிப்பிராயம் மார்க்க அறிஞர்களிடையே இல்லாத சூழ்நிலையில் ஏதோ நாங்கள் முகம்மூடிப் பழகி விட்டோம். என்பதற் காக அதனை ஒரு உரிமையாகக் கருதி போராட்டம் நடத்துவது நீண்ட காலத்தில் நல்ல விளைவுகளைத் தரமாட்டாது.

‘அவசரகாலச் சட்டத்தின் கீழ் முகத்திரை’ தடை செய்யப்பட்டபோது, உலமாக்கள் கொத்பாக்களில் முஸ்லிம்களுக்கு இது பற்றி எந்த விளக்கத்தையும் கொடுக்காது, முகத்திரை இடுவது எமது உரிமை, தடை தற்காலிகமானது, அதற்கு எதிராக நாம் போராடுவோம் என மக்களை உணர்ச்சி வயப்படுத்தினார்களே தவிர முஸ்லிம்கள் சட்டத்தை மதித்து முகத்திரை அணிவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்ற அறிவியல் ரீதியில் விளக்கம் கொடுக்கவில்லை.

அதேபோன்று அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட பின் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் முகத்திரை அணிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதா? என்ற எந்த தெளிவும் இல்லாதபோது ஒரு சில பிடிவாதம் பிடித்தவர்கள் முஸ்லிம் பெண்களுக்கு ‘முகத்திரை’ அணியுமாறு அறிவுறுத்தினர். இதன் விளைவாகவே பல முகத்திரை அணிந்த பெண்கள் பொலிஸாராலும் இராணுவத்தாலும் கைது செய்யப்பட்டார்கள். ஆகவே இப்போது ‘ஜம்மியத்துல் உலமா’ பொறுமையைக் கையாண்டு நாட்டின் நிலைமைகளை கருத்தில் கொண்டு முகத்திரை அணிவதை தவிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது காலம் கடந்த ஞானம். எதனையும் செய்ய முன் சிந்திக்க வேண்டும்.

இதற்கு முஸ்லிம் அறிஞர்களின் ஆலோசனைகள் அவசியம். இனியாவது சிந்தித்து செயல்படுவோமாக. ஒரு சமூகம் தனது நிலையை அறிந்து திருந்திக் கொள்ளாதவரை அல்லாஹ் அந்த சமூகத்துக்கு உதவி செய்யமாட்டான்.
(அல்குர்ஆன்)

பேராசிரியர் ஏ.ஜி. ஹுஸைன் இஸ்மாயில்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.