கோத்தாபயவால் தன்னை மாற்றிக்கொள்ள முடியுமா?

0 1,436

ஜனா­தி­பதி தேர்தல் வேட்­பாளர், கோத்­தா­பய ராஜபக் ஷ வித்­தி­ச­மான ஒருவர் என்று வேறு எவ­ரு­மல்ல, பஷில் ராஜபக் ஷவே கூறி­யுள்ளார். அதே­வேளை, கோத்தா ஊழல், மோச­டி­களை ஒழித்துக் கட்­டுவார் என்று சொன்­ன­வரும் பஷில்தான். ‘ஒழித்துக் கட்­டுவார்’ என்ற வார்த்­தையின் பின்­னாலும் பயங்­கரம் ஒன்றே ஒளிந்­தி­ருக்­கி­றது.

கோத்­தா­பய ராஜபக் ஷவின் பத­விக்­கா­லத்­தி­லேயே வெள்ளை வேன் மூலம் பல­வந்­த­மாக காணா­ம­லாக்­கப்­பட்ட சம்­ப­வங்கள் நடந்­தே­றப்­பட்­ட­தாக சொன்­ன­வரும் வேறு­யா­ரு­மல்ல; ராஜபக் ஷ அர­சியல் அடி­வ­ரு­டி­களில் ஒரு­வ­ரான வாசு­தேவ நாண­யக்­கார தான்.

கோத்­தா­பய ராஜபக் ஷ அதி­கா­ரத்­திற்கு வந்தால் தனக்கும் பிரகீத் எக்­னெ­லி­கொ­ட­வுக்கு நடந்த கதியே நடக்கும் என்று சொல்­ப­வரும் இன்னும் மகிந்த ராஜபக் ஷ அணியில் இருக்கும் குமார வெல்­கம தான்.

கோத்­தா­பய ராஜபக் ஷ பத­விக்கு வந்தால் நிலைமை என்­ன­வாகும் என்­பது குறித்து அர­சியல் விமர்­ச­க­ரான அகிலன் கதிர்­காமர் கருத்­துத்­தெ­ரி­விக்­கையில்,

“கடந்த இரு வரு­டங்­க­ளாக ராஜபக் ஷ கம்­பனி, மீண்டும் ஆட்­சியைப் பிடிப்­ப­தி­லேயே காய்­களை நகர்த்தி வந்­தது. ஓய்­வு­பெற்ற படை அதி­கா­ரிகள், வர்த்­தக அதி­ப­திகள் மற்றும் உயர் அதி­கா­ரிகள் போன்­றோரைத் தந்­தி­ர­மாக அர­வ­ணைத்­துக்­கொண்டும் வந்­தனர். நுணுக்­க­மாக உரு­வாக்­கிய சிங்­கள பெளத்த இன­வா­தமும் வளர்க்­கப்­பட்­டது. புதிய எதி­ரி­யாக முஸ்­லிம்­களை இனம்­காண வைத்து சமூகம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டது. அரச பலத்­துடன் இணைந்து செயற்­பட்­டதால் இத்­தீய சக்தி உத்­வே­கத்­துடன் இயங்­கவே செய்­தது. இதன் மூலம் தமது அர­சியல் நகர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. தமது திட்­டங்­க­ளு­க் கு விரோ­த­மா­ன­வர்­களை மடக்­கு­வ­தற்கும் சந்­தர்ப்பம் உரு­வாக்கிக் கொள்­ளப்­பட்­டது. இதன் மூலம் எதிர்­காலம் இதனை விடவும் பயங்­க­ர­மான தோற்றம் பெறவும் முடியும்” என்று அவர் தெரி­வித்­துள்ளார்.

மற்றோர் அர­சியல் விமர்­ச­க­ரான ஜய­தேவ உயன்­கொட இது­வி­ட­ய­மாகக் குறிப்­பி­டு­கையில், “கோத்­தா­ப­யவின் கருத்­திட்­டங்கள் இப்­போ­தி­ருந்தே முடுக்கி விடப்­பட்­டுள்­ளன. மனித உரி­மைகள், சிறு­பான்­மை­யி­னரின் உரி­மைகள், அர­சியல் சுதந்­திரம், லிப­ரல்­வாதம் போன்ற வச­னங்­களை இந்­நாட்டின் அர­சி­யலில் இருந்து இல்­லா­ம­லாக்­கு­வ­தற்கு சப­த­மெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நாட்டில் நீண்­ட­கா­ல­மாக மிகவும் மோச­மாக நலி­வுற்றும் பின்­ன­டைவு கண்டும் வரும் ஜன­நா­ய­கத்தை மட்டம் தட்­டு­வதில் இவர் அகங்­கா­ரத்­துடன் காரி­ய­மாற்றி வரு­கிறார். முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரிகள் மற்றும் கோடீஸ்­வர வர்த்­த­கர்கள் போன்­றோ­ருடன் இவர் கைகோர்த்துக் கொண்டு ஜன­நா­யகம், அர­சியல் சுதந்­திரம், மனித உரிமை போன்­ற­வற்றை இலங்­கை­யி­லி­ருந்து துடைத்­தெ­றி­வதை தனது அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­யாகக் கொண்­டுள்ளார்” என்று அந்த விமர்­சகர் எதிர்வு கூறி­யுள்ளார்.

கோத்­தா­பய ராஜபக் ஷ கடந்த காலங்­களில் லங்­கா­தீப பத்­தி­ரி­கையில் வழங்­கிய நேர்­கா­ணல்­களில் தனி­நபர் சுதந்­தி­ரத்­திற்குப் பதி­லாக பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கே முன்­னு­ரிமை கொடுப்­ப­தாகத் தெரி­வித்­துள்ளார். அவர் தனது கொள்கை கோட்­பாட்டுக் கருத்­தா­கவே இதனை வெளி­யிட்­டுள்ளார்.

கோத்­தா­பய, பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்­த­போதே அவர் ஒரு முன்­கோ­பக்­காரர் என்­பதைக் காட்டி வந்­துள்ளார். தான் சொல்­வதே சரி என்ற பிடி­வாதம் கொண்­டவர். தன்னை விமர்­சிப்­போரைத் தன்முன் கொண்­டு­வந்து அச்­சு­றுத்தல் விடுக்­கவும் செய்வார். சண்டே லீடர் பதிப்­பா­சி­ரியர் லசந்த என்­பவர் யார்? அவ­ரது பத்­தி­ரிகை எது என்று பகி­ரங்­க­மாக வின­வி­யவர் அவர். அதே போன்று கடத்திச் செல்­லப்­பட்டு பின்னர் விடு­விக்­கப்­பட்ட சுடர் ஒளி பதிப்­பா­சி­ரியர் வித்­தி­யா­தரன் ‘ஒரு புலி’ என்று எடுத்­து­ரைத்­தவர். வஞ்சம் தீர்க்கும் சுடு­மு­கத்­து­டனே தான் இவ்­வார்த்­தையைப் பகர்ந்தார். அக்­கோர முகம் இப்­போதும் பீதி­யூட்­டு­கி­றது. கோத்­தா­பய ராஜபக் ஷவினால் அச்­சு­றுத்­தப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் போத்­தல பின்னர் கோத்­தாவின் கையாட்­களால் கடத்திச் செல்­லப்­பட்டு கால் உடைக்­கப்­பட்ட நிலையில் சாகும் வகையில் கான் ஒன்­றுக்குள் தூக்கி எறி­யப்­பட்­டுக்­கி­டந்தார்.

மேற்­படி நட­வ­டிக்­கைகள் தவறு என்­பதை ஏற்­றுக்­கொள்­ளவோ, அல்­லது தன்னை இந்­நி­லை­யி­லி­ருந்து மாற்­றிக்­கொள்­ளவோ கோத்­தா­பய ராஜபக் ஷ தயாரா?

நான் அர­சியல் சட்­ட­வி­தி­களை மதிக்கும் ஒரு ஜனா­தி­பதி என்று கோத்­தா­பய தன்னைக் குறிப்­பிட்டுக் கொள்­கிறார். அப்­ப­டி­யென்றால், பாது­காப்புச் செய­லா­ள­ரா­க­வி­ருந்த அவர், கொலைக்­குற்­ற­வா­ளி­யாக நீதி­மன்­றத்தில் தீர்ப்பு வழங்­கப்­பட்ட துமிந்த சில்­வாவின் அர­சியல் கூட்­டத்தில் எந்தச் சட்­டத்­தையும் மதிக்­கா­ம­லேயே கலந்து கொண்­டுள்ளார். 2011 ஒக்­டோபர் மாதம் இடம்­பெற்ற மாகாண சபை தேர்­தலின் போதே இவ்­வாறு கலந்து கொண்­டுள்ளார். அத்­துடன் அரச சேவை­யா­ள­ரான கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு அப்­போது அர­சி­யலில் ஈடு­ப­டு­வ­தற்கு உரி­மை­யில்லை. அந்த வகையில் தன் பத­வியை துஷ்­பி­ர­யோகம் செய்­துள்ளார்.

தற்­போது அவ­ருக்­கெ­தி­ராக வழக்கு விசா­ரணை நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது. அதன்­போது அவர் சத்­தியச் சான்று ஒன்று வழங்­கி­யுள்ளார்.

அதில் “2005 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்ட தனது மூத்த சகோ­த­ர­னான மகிந்த ராஜபக் ஷவுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்­கா­கவே இந்­நாட்­டுக்கு வந்தேன்” என்று தெரி­வித்­துள்ளார். அமெ­ரிக்க பிர­ஜா­வு­ரிமை பெற்ற அவர், அப்­போது உல்­லா­சப்­ப­யண விசா பெற்றே இந்­நாட்­டுக்குள் பிர­வே­சித்­துள்ளார்.

வெளி­நாட்டு உல்­லா­சப்­ப­ய­ணிகள் எவ­ருக்கும் இந்­நாட்டின் எந்­த­வொரு தேர்தல் நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­ப­டு­வ­தற்கு எந்த வகை­யிலும் உரி­மை­யில்லை.
அந்த வகையில் நிலைமை இருக்­கையில், வழக்கு விசா­ர­ணையின் போது கோத்­தா­பய ராஜபக் ஷ தன் சுய­வி­ருப்­பத்தின் பேரில் அளித்­துள்ள சத்­தியக் கட­தா­சியில் தான் உல்­லா­சப்­ப­ய­ணி­யாக இந்­நாட்டில் பிர­வே­சித்­தது ஜனா­தி­பதி தேர்தல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தற்கே என்று அழுத்தம் திருத்­த­மாக உறு­தி­ய­ளித்­துள்ளார்.

கோத்­தா­ப­யவின் அதி­கா­ரத்தின் போது வெளி­நாட்­டி­லி­ருந்து உல்­லா­சப்­ப­யண விசாவில் வந்த இருவர் அர­சியல் ஈடு­பாட்­டுக்­கல்ல. ஊட­க­வியல் தொடர்­பான பயிற்­சி­யொன்­றுக்­கா­கவே வந்­தி­ருந்­தனர். இந்­நி­லையில் ஊட­க­வியல் பாட­நெறி யொன்றை நடத்­திக்­கொண்­டி­ருந்த சர்­வ­தேச ஊட­க­வி­ய­லாளர் சம்­மே­ள­னத்தின் ஆசி­ய–­ப­சுபிக் பிராந்­திய முக்­கி­யஸ்­தர்­க­ளான அவ்­வி­ரு­வ­ரையும் அவர்கள் தங்­கி­யி­ருந்த ஹோட்டல் அறை­யிலே தடுத்து வைத்து அவர்கள் நாட்­டி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­மையும் கோத்­தாவின் அதி­கா­ரத்தின் கீழே இடம்­பெற்ற நிகழ்­வாகும்.

அதே­போன்றே கனே­டிய பாரா­ளு­மன்ற குழு­வொன்றும் நாட்­டி­லி­ருந்து திருப்­பி­ய­னுப்­பப்­பட்­டதும், கோத்­தாவின் அதே அதி­கா­ரத்தில் அதே சட்­டத்தின் அடிப்­ப­டை­யிலே தான்.

கோத்­தா­பய ராஜபக் ஷ சட்­டத்தை தனக்கு வேண்­டி­ய­வாறு மாற்­றி­ய­மைத்துக் கொண்­ட­மைக்கு 2005 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலின் போது அவர் நடந்து கொண்ட முறைமை நல்­லதோர் உதா­ர­ண­மாகக் குறிப்­பி­டலாம். இது நீதி­மன்­றத்தால் தான் தீர்­மா­னிக்க வேண்­டி­ய­தொரு குற்றச் செய­லல்ல; சாதா­ர­ண­மா­கவே கண்டு கொள்­ளக்­கூ­டி­ய­தொரு சட்ட துஷ்­பி­ர­யோ­க­மாகும். இது ஒரு புற­மி­ருக்க, கோத்­தா­பய இது­வ­ரையில் சட்­டத்தை அனு­ச­ரித்து நடந்த ஒரு­வ­ரல்லர். அவர் வெளி­நாட்­ட­வ­ராக இருந்­த­போதே அவர் மெத­மு­லா­னையில் ராஜபக் ஷ குடும்­பத்தில் தேர்தல் வாக்­கா­ள­ராகத் தனது பெய­ரையும் பதிவு செய்­துள்ளார்.
இவர் விட­யத்தில் அண்­மையில் இடம்­பெற்ற மற்­றுமோர் உதா­ர­ணத்­தையும் முன்­வைக்­கலாம். சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் பிர­தம ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் கொலை தொடர்­பாக அவ­ரது மக­ளான அஹிம்சா விக்­ர­ம­துங்க கோத்­தா­வுக்­கெ­தி­ராக அமெ­ரிக்க நீதி மன்­றத்தில் தொடர்ந்­துள்ள வழக்கைக் குறிப்­பி­டலாம்.

மேற்­படி வழக்­கிற்கு கோத்­தா­பய ராஜபக் ஷவுக்­காக பதி­ல­ளிக்கஅமர்த்தப்படு­பவர் நாட்டின் முன்னாள் நீதி­ய­ர­ச­ரான அசோக்க சில்­வாவே. உயர் நீதி­மன்­றத்தில் நிய­மனம் பெறும் எந்­த­வொரு சட்ட நிபு­ணரும் தனது பத­வி­யி­லி­ருந்து ஓய்வு பெற்ற பின்னர் சட்­டத்­துறை தொழிலில் கட­மை­யாற்ற முடி­யாது. அவ்­வாறு ஈடு­ப­டா­தி­ருப்­பது சட்­ட­மு­றை­மையை விடவும் நீதி­மன்­றத்தை பதிக்கும் சம்­பி­ர­தா­ய­மாகும்.

மேலும் இந்த சட்­டதிட்­டங்­க­ளை­யெல்லாம் பொருட்­ப­டுத்­தாது இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக் ஷ பிர­தம நீதி­ய­ரசர் ஒரு­வரை விலை கொடுத்து வாங்­கி­யதன் மூலம் உணர்ந்­து­கொள்ள முடி­வது என்ன? நீதி­மன்ற சுயா­தீ­னத்­துக்கு அளிக்கும் மதிப்பா? அவ­ம­திப்பா?

இவ்­வாறு இவர் குறித்த பட்­டியல் நீண்டு கொண்டே போகி­றது. அவை எவ்­வாறு இருந்­த­போ­திலும் எமது சிந்­தையைக் குடையும் கேள்வி என்­ன­வென்றால், அதி­கா­ரத்தில் இல்­லா­த­போது முன்னாள் உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­களை விலை கொடுத்து வாங்கும் அர­சி­யல்­வா­தி­யொ­ருவர் அதி­கா­ரத்­திற்கு வந்தால் எவ்­வா­றெல்லாம் நடந்து கொள்வார் என்ற ஐயமே எழுகிறது.

மேலும் கோத்­தா­பய ராஜபக் ஷவின் பாது­காப்புக் கருதி ஒவ்­வொரு தேர்தல் தொகு­தி­யிலும் முன்னாள் படை வீரர்கள் தொகு­திக்கு 40 பேர் வீதம் உள்­ள­டக்­கப்­பட்ட பெரிய படை­ய­ணி­யொன்றும் அமர்த்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. கோத்தா பத­விக்கு வந்­ததும், அவ­ரது ‘வியத்­மக’ அமைப்பின் முக்­கி­யஸ்­தர்­களில் ஒரு­வ­ரா­க­வுள்ள இன­வா­தி­யான முன்னாள் ஜெனரல் ஒரு­வரே பாது­காப்புச் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­ப­டுவார் என்றும் அறிய முடி­கி­றது.

இவ்­வ­ளவு தூரம் தனது பெயர் போயுள்ள நிலை­யிலும் கோத்­தா­பய ராஜபக் ஷ தன்னை ஜன­நா­யக ஆட்­சி­யாளர் என்று காட்­டிக்­கொள்ள முன்­வ­ர­வில்லை. இவ்­வாறு தன்னை ஜன­நா­ய­க­வா­தி­யாக மாற்­றிக்­கொள்ள தான் தயா­ராக உள்­ள­தாக அவரால் காட்டிக் கொள்­வ­தற்­கு­ரிய ஒரே வழி முன்­னைய உண்­மை­க­ளை­ய­யெல்லாம் ஏற்­றுக்­கொள்வ தொன்­றே­யாகும்.

இவை எல்­லா­வற்­றையும் விட, தான் மாற்றம் ஒன்­றுக்குத் தயார் என்­பதை கோத்­தா­பய ராஜபக் ஷ இது­வரை எந்­த­வ­கை­யிலும் தெரி­விக்­க­வில்லை. அவ­ருக்­காக பெஷிலும் வாசு­தே­வவும் பேசு­கி­றார்கள். எனவே வாசு­தேவ குறிப்­பிடும் வெள்­ளைவேன் கடத்தல் சம்­ப­வங்­களை ஏற்றுக்கொள்வதற்கு கோத்தாபய தயாரா? வெல்கம சுட்டிக்காட்டும் அநீதி நடந்துள்ளதை ஏற்றுக்கொள்ளவும் கோத்தா தயாரா? குறைந்த பட்சம் தனது அரசியல் முன்னெடுப்பில் மாற்றம் மற்றும் ஜனநாயக மாற்றம் அவசியம் என்பதையாவது ஏற்றுக்கொள்வதற்கு கோத்தாபய தயாரா?

யார் ஜனாதிபதி வேட்பாளராக வருவாரோ அவரிடம் உள்ள பணிவு, பரந்த பார்வை, சட்டத்தை மதிக்கும் பண்பு போன்ற அருங்குணங்கள் குறித்து ஊடகங்களில் பகிரங்கப்படுத்த வேண்டும்.

அவர் முகம் கொடுக்க வேண்டிய தீர்க்கமான பரிசோதனை அதுவாகும். அரசியல்வாதிகளிடம் விசேடமாக தேர்தல் ஒன்றுக்கு களம் இறங்குவோரிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பும் எந்தச் சந்தர்ப்பங்களிலும் இவர்கள் தம் நிலைப்பாட்டை வெளியிட முன்வர வேண்டும். அதுவே ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பாகும்.

கோத்தாபய ராஜபக் ஷ இந்த வாய்ப்பை இதுவரையிலும் ஊடகங்களுக்கு வழங்கவில்லை. அவரிடம் வினா எழுப்புவது அவர் விடயத்தில் தடையாகவே உள்ளது. தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர் தயார் இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.

மேற்கண்ட அடிப்படைப் பிரச்சினை கோத்தாபய ராஜபக் ஷவுக்கு மாத்திரமல்ல; இதர வேட்பாளருக்கும் பொருந்தும் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

சிங்­க­ளத்தில் : சுனந்த
தேசப்­பி­ரிய தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்.

நன்றி: ராவய வார இதழ்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.