முஸ்லிம் தனியார் சட்டம் ஷரீஆ சட்­ட­மல்ல காலத்­திற்கு காலம் மாற்­றப்­பட்டே வந்­துள்­ளது

சிரேஷ்ட சட்­டத்­த­ரணி எம்.எம்.பஹீஜ்

0 849

இலங்­கையில் இருக்­கின்ற முஸ்லிம் தனியார் சட்டம் ஷரீஆ சட்­ட­மாக அமை­யாது. அது ஷரீ­ஆவை தழு­விய முஸ்லிம் சமூக நட­வ­டிக்­கைகள், பாரம்­ப­ரியம், பழக்­க­வ­ழக்­கங்கள் போன்­ற­ன­வற்றை உள்­ள­டக்­கி­ய­தாகும். இது மாற்­ற­மு­றாமல் இருந்து வரு­கின்ற ஒன்­றல்ல. அது காலத்­திற்குக் காலம் மாற்றம் பெற்றே வந்­துள்­ளது என சிரேஷ்ட சட்­டத்­த­ரணி எம்.எம்.பஹீஜ் தெரி­வித்தார்.
29 ஆவது தேசிய சுஹ­தாக்கள் தினத்தை முன்­னிட்டு காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் ஏற்­பாடு செய்த ‘சுதந்­திர இலங்­கையில் முஸ்­லிம்கள் இழந்­ததும், பெற்றுக் கொண்­டதும்’ எனும் கருப்­பொ­ரு­ளி­லான கருத்­தாடல் நிகழ்வு காத்­தான்­குடி பீச்வே கூட்ட மண்­ட­பத்தில் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்­றது.

காத்­தான்­குடி பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ள­னத்தின் தலைவர் எம்.ஏ. சீ.எம். சத்தார் தலை­மையில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் ‘நெருக்­க­டிக்­குள்­ளா­குமா இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம்?’ எனும் தலைப்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி எம்.எம். பஹீஜ் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்.

இலங்­கையில் முஸ்லிம் தனியார் சட்டம் எப்­படி திருத்­தப்­பட வேண்டும், எதன் அடிப்­ப­டையில் திருத்தம் செய்ய வேண்டும் என்­பதை தீர்­மா­னிக்­கின்ற முழு உரி­மையும் முஸ்லிம் சமூ­கத்­திற்கே வழங்­கப்­பட வேண்டும்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் இலங்­கையில் இருக்­கின்ற முஸ்­லிம்­களை பாரம்­ப­ரிய முஸ்­லிம்கள், பாரம்­ப­ரியம் அல்­லாத முஸ்­லிம்கள் என்றும், தௌஹீத்­வா­திகள், தௌஹீ­துக்கு எதி­ரா­ன­வர்கள் என்று இன்­னு­மொரு வகை­யி­ன­ருக்­குள்ளும் முஸ்­லிம்­களைப் பிரித்­தாள முற்­ப­டு­வ­துடன், முஸ்லிம் அர­சியல் தலை­மை­களின் பத­வி­களைப் பறித்து, முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் மற்றும் செயற்­பாட்­டா­ளர்­களை கட்­டுப்­ப­டுத்தி வைத்­தி­ருக்­கின்ற இச் சூழ்­நி­லையில் முஸ்லிம் தனியார் சட்ட திருத்­தத்தை தற்­போது அனு­ம­திக்க வேண்­டுமா என்­ப­துதான் கேள்­வி­யாக உள்­ளது.

கடந்த 10 ஆண்டு கால­மாக முஸ்லிம் தனியார் சட்ட விடயம் தொடர்­பாக விவா­திக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அது தொடர்­பான முன்­மொ­ழி­வுகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. முஸ்­லிம்­களும் இந்த நாட்டின் பிர­ஜைகள் என்ற அடிப்­ப­டையில் எங்­க­ளுக்­கான இறைமை உள்­ளது. எங்­களை ஆளு­வ­தற்­கான சுய­நிர்­ணய உரித்தும் இருக்­கின்ற சந்­தர்ப்­பத்தில் இலங்­கையில் முஸ்லிம் தனியார் சட்டம் எப்­படி திருத்­தப்­பட வேண்டும், எதன் அடிப்­ப­டையில் திருத்தம் செய்ய வேண்டும் என்­பதை தீர்­மா­னிக்­கின்ற முழு உரி­மையும் முஸ்லிம் சமூ­கத்­திற்கே வழங்­கப்­பட வேண்டும்.

மாற்று மதத்­த­வர்கள் எங்­களை நோக்கி விமர்­ச­னங்­களை முன்­வைக்­கின்ற நிலை­யிலும், எங்­க­ளு­டைய சமூ­கத்­தி­லுள்ள சில குழுக்கள் மாற்றம் வேண்டும் என கேட்­கின்­றனர். அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்டு சிபா­ரி­சு­களை முன்­வைத்­துள்ள இரு ஆய்வுக் குழுக்­களும் வேறு­பட்ட சிபா­ரி­சு­க­ளையும், ஆலோ­ச­னை­க­ளையும் முன்­வைத்­துள்ள நிலையில் திருத்­தங்­களை மேற்­கொள்­வதில் உடன்­பாடு தெரி­வித்­துள்­ளார்கள்.

12ஆம் நூற்­றாண்டில் இந்­நாட்டில் நடை­மு­றையில் இருந்த சிங்­கள நீதி­மன்­றங்­களில் கூட முஸ்­லிம்­களின் வழக்­கா­டல்கள், இஸ்­லா­மி­யர்­களின் அடிப்­படை பழக்க வழக்­கங்கள் மதிக்­கப்­பட்டு அதற்கு சட்ட அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தனால் இலங்­கையில் முஸ்லிம் தனியார் சட்­டத்­திற்­கான அங்­கீ­காரம் இருந்­துள்­ள­தனை அறிய முடி­கின்­றது.

தற்­போது முஸ்லிம் சமூ­கத்­தி­னு­டைய அச்சம் முஸ்லிம் தனியார் சட்டம் முழு­மை­யாக நீக்­கப்­ப­டுமா அல்­லது மாற்றம் செய்­யப்­ப­டுமா என்­ப­துதான்.
முஸ்லிம் சட்டத்தை நீக்குவதானால் கண்டிச் சட்டத்தையும், தேச வழமைச் சட்டத்தையும் நீக்க வேண்டும். இவைகளை நீக்குவதற்கான சாத்தியம் இலங்கையில் இல்லை. இந்த நாட்டிலுள்ள சட்ட சூழ்நிலையிலும் நீக்குவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்றார்.

(ரீ.கே.றஹ்­மத்­துல்லா)

vidivelli

Leave A Reply

Your email address will not be published.