அருவக்காலு குப்பை விவகாரத்தை அமைச்சர் சம்பிக இனவாதமாக்குகிறார்

சூழலியலாளர் முபாரக் குற்றச்சாட்டு

0 636

புத்­தளம் அரு­வக்­காலு பிர­தே­சத்தில் குப்­பைகள் கொட்­டப்­ப­டு­வது தனி­யொரு இனத்தை மாத்­திரம் பாதிக்கும் பிரச்­சி­னை­யல்ல. இது நாட்டின் எதிர்­காலம் சார்ந்த பிரச்­சி­னை­யாகும். ஆனால், “கொழும்பில் முஸ்­லிம்­களே பெரு­ம­ளவில் வாழ்­வதால் அவர்­களே அதி­க­ளவில் குப்­பை­களை வெளி­யேற்­று­கி­றார்கள். எனவே, அந்தக் குப்­பை­களை முஸ்லிம் பிர­தே­ச­மொன்­றுக்கே கொண்­டு­செல்ல வேண்டும்” என்­று­கூறி அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக இப்­பி­ரச்­சி­னையை இன­வாத மயப்­ப­டுத்­து­கின்றார் என்று சூழ­லி­ய­லாளர் ஷஹீட் மொஹமட் முபாரக் தெரி­வித்தார்.

புத்­தளம் அரு­வக்­காலு பிர­தே­சத்தில் குப்­பை­களைக் கொட்­டு­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து தொடர்ச்­சி­யாகப் போரா­டி­வரும் சூழ­லி­ய­லா­ளர்கள் உள்­ள­டங்­கிய குழு­வி­னரால் கடந்த புதன்­கி­ழ­மை­யன்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த வழக்கு நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­துடன், எதிர்­வரும் 30 ஆம் திகதி பிர­தி­வா­திகள் தமது தரப்பு வாதங்­களை முன்­வைக்­கு­மாறும் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.
இவ்­வி­டயம் குறித்துத் தொடர்ச்­சி­யாகப் போராடி வரு­ப­வரும், வழக்கைத் தாக்கல் செய்­த­வ­ரு­மான சூழ­லி­ய­லாளர் ஷஹீட் மொஹமட் முபா­ரக்­கிடம் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். மேலும் அவர் கூறி­ய­தா­வது,

புத்­தளம் அரு­வக்­காலு பிர­தே­சத்தில் குப்­பைகள் கொட்­டப்­ப­டு­வது என்­பது குறித்­த­வொரு இனத்தை மாத்­திரம் பாதிக்கும் பிரச்­சி­னை­யல்ல. இது நாட்டின் எதிர்­காலம் சார்ந்த பிரச்­சி­னை­யாகும். ஆனால் பெரு­ந­க­ரங்கள் மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக, “கொழும்பில் முஸ்­லிம்­களே பெரு­ம­ளவில் வாழ்­கின்­றனர். எனவே, அவர்­களே அதி­க­ளவில் குப்­பை­களை வெளி­யேற்­று­கி­றார்கள். அந்தக் குப்­பை­களை முஸ்லிம் பிர­தே­ச­மொன்­றுக்கே கொண்­டு­செல்ல வேண்டும்” என்­று­கூறி இதனை இன­வா­த­ம­யப்­ப­டுத்­து­கின்றார். ஆனால் குப்­பை­களைக் கொட்­டு­வ­தற்குத் தீர்­மா­னித்­தி­ருக்­கின்ற பிர­தே­சத்தில் வாழ்­ப­வர்கள் 98 சத­வீ­த­மா­ன­வர்கள் சிங்­க­ள­வர்கள் என்­பதே உண்­மை­யாகும்.

தற்­போது அமைச்சர் சம்­பிக்க ரண­வ­கவின் உத்­த­ரவின் கீழ் செயற்­படும் சிலர் பணமோ அல்­லது வேறு வச­தி­களோ வழங்­கு­வ­தா­கக்­கூறி குப்­பை­களைக் கொட்­டு­வ­தற்கு எதி­ராகப் போரா­டு­ப­வர்­களை அடக்­கு­வ­தற்கு முற்­ப­டு­கின்­றார்கள். கொழும்­பி­லி­ருந்து நாளாந்தம் 26 கொள்­க­லன்­களில் சுமார் 1200 மெட்ரிக் தொன் கழி­வு­களை அருவக்காலு பிரதேசத்தில் கொட்டுவதற்குத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதனால் பல்வேறு சுற்றாடல் பிரச்சினைகளும், உடலியல் ரீதியான பிரச்சினைகள் மற்றும் நோய்களும் ஏற்படும்.

இந்நிலையிலேயே நாங்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். அவர்கள் எமக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.