4/21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க முஸ்லிம் லீக் 5 மில்லியன் டொலர் அன்பளிப்பு

0 634

உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும், அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ருக்கும் நிவா­ர­ணங்­களை வழங்­கு­வ­தற்­காக இலங்­கைக்கு 5 மில்­லியன் டொலர்கள் உத­வி­யாக வழங்­க­வுள்­ள­தாக உலக முஸ்லிம் லீக்கின் செய­லாளர் கலா­நிதி ஷேக் மொகமட் பின் அப்துல் கரீம் அல்­ஈசா தெரி­வித்­துள்ளார். மேல் மாகாண ஆளுநர் காரி­யா­ல­யமும், முஸ்லிம் சமய விவ­கார அமைச்சும் இணைந்து நேற்று முன்­தினம் கொழும்பு தாமரைத் தடாக கேட்போர் கூடத்தில் ஏற்­பாடு செய்­தி­ருந்த சமா­தானம், அமைதி, சக­வாழ்வு தொடர்­பான மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்­து­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் நடை­பெற்ற இம்­மாநாட்டில் எதிர்க்­கட்­சித்­த­லைவர் மஹிந்த ராஜபக் ஷ, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க, அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், மூவின மதத்­த­லை­வர்கள், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி, வெளிநாட்டுத் தூதுவர்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli  

Leave A Reply

Your email address will not be published.