பலஸ்தீன வீடுகள் இடிக்கப்பட்டமைக்கு அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகம் கண்டனம்

0 699

இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்புப் படை­யி­னரால் கிழக்கு ஜெரூ­ச­லத்தில் பலஸ்­தீ­னர்­களின் வீடுகள் இடித்து தரை­மட்­ட­மாக்­கப்­பட்ட சம்­ப­வத்­தினை அல்-­அஸ்ஹர் பல்­க­லைக்­க­ழகம் கண்­டித்­துள்­ளது.

உலகில் வாழும் சுன்னி முஸ்­லிம்­களின் அதி­யு­யர்­நிலைக் கல்­விக்­கூ­ட­மான அல்-­அஸ்ஹர் பல்­க­லைக்­க­ழகம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இச் சம்­ப­வத்­தினை பலஸ்­தீன மக்­களின் உரி­மை­களை மீறும் கொடூரச் செய­லாகும் என வர்­ணித்­துள்­ளது.

ஜெரூ­ச­லத்தின் சட்­ட­ரீ­தி­யான அந்­தஸ்த்தை பாது­காக்­கு­மாறும் அதன் அடை­யா­ளத்தை பேணிக் காக்­கு­மாறும் சர்­வ­தேச அமைப்­புக்கள் மற்றும் நிறு­வ­னங்­க­ளிடம் அல்­அஸ்ஹர் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

உள்ளூர் எதிர்ப்பு மற்றும் சர்­வ­தேச விமர்­ச­னங்­களை புறந்­தள்ளி சூர் பாஹர் பலஸ்­தீனக் கிரா­மத்­தி­லுள்ள வீடு­களை நூற்­றுக்­க­ணக்­கான இஸ்­ரே­லியப் படை­யினர் கடந்த திங்­கட்­கி­ழமை புல்­டோ­ஸர்­களைக் கொண்டு இடித்­துள்­ளனர்.

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள மேற்குக் கரையில் இஸ்­ரேலின் எல்­லைச்­சு­வ­ருக்கு அருகில் அமைந்­துள்ள இவ் வீடு­களை தனது பாது­காப்­பிற்­கான அச்­சு­றுத்­த­லாக இஸ்ரேல் இரா­ணுவம் கரு­து­கின்­றது.

அனு­ம­தி­யின்றி சட்­ட­வி­ரே­ாத­மாக இக் கட்­ட­டங்கள் கட்­டப்­பட்டுள்­ள­தாக இஸ்ரேல் தெரி­விக்­கின்­றது. 1967 ஆம் ஆண்டு இடம்­பெற்ற அரபு – இஸ்ரேல் யுத்­தத்­தின அடுத்து அல்-­அக்ஸா அமைந்­துள்ள கிழக்கு ஜெரூ­ச­லத்தை இஸ்ரேல் சட்­ட­வி­ரோ­த­மாக ஆக்­கி­ர­மித்­துள்­ளது.

சர்­வ­தேச சமூ­கத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத இந்த நகர்வில் 1980 ஆம் ஆண்டு முழு­மை­யான நகரை ஒன்­றி­ணைத்த இஸ்ரேல் யூத தேசத்தின் பிரிக்­க­மு­டி­யாத தலை­ந­கரம் என சுய பிர­க­டனம் செய்­தது.

முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை மக்கா மற்றும் மதீ­னா­வுக்கு அடுத்­த­ப­டி­யாக மூன்­றா­வது புனி­தத்­த­ல­மாக அல்-­அக்ஸா காணப்­ப­டு­கின்­றது. யூதர்­களைப் பொறுத்­த­வரை புரா­தன காலத்தில் இரு யூத வணக்கஸ்த்தலங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலம் என்பன ஆக்கிரமிக்கப்பட்ட ஆள்புலப் பிரதேசங்களாக சர்வதேச சட்டத்தினால் தொடர்ந்தும் கருதப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.