ஐயங்களும் தெளிவுகளும்

0 1,009

குழப்பம் செய்­வது கொலையை விடவும் மிகப் பெரி­ய­தாகும். அவர்கள் சக்தி பெற்றால் உங்­களை உங்கள் மார்க்­கத்­தி­லி­ருந்து திருப்பும் வரை உங்­க­ளோடு ஓயாமல் போரி­டு­வார்கள். எனவே உங்­களில் எவரும் மார்க்­கத்­தி­லி­ருந்து மாறி நிரா­க­ரித்­த­வ­ரா­கவே இறந்து விட்டால் அத்­த­கை­யோரின் செயல்கள் இம்­மை­யிலும் மறு­மை­யிலும் அழிந்­து­விடும். அவர்கள் நர­க­வா­சிகள், அதில் நிரந்­த­ர­மாக இருப்­ப­வர்கள். (2:217) என அல்­குர்ஆன் குறிப்­பி­டு­கி­றது.

இங்கு குழப்பம் பெரிய குற்றம் என்றால் கொலை அதை­விட சிறிய குற்றம் என்றால் என்ன அர்த்தம்-? கொலையை இஸ்லாம் எதிர்க்­கி­றது என்­பது தானே இங்கு குழப்பம் பெரிய குற்றம் எனக் கூறப்­படக் காரணம். அதனால் பல கொலைகள் நிக­ழலாம் என்­ப­தற்­கா­கத்தான், எனவே இஸ்லாம் கொலையைத் தூண்­டு­கி­றது என இஸ்­லாத்தின் விரோ­திகள் குறிப்­பி­டு­வது சுத்த அபத்­த­மாகும்.

அவர்கள் சக்தி பெற்றால் உங்­களை மார்க்­கத்­தி­லி­ருந்து திருப்பும் வரை உங்­க­ளோடு ஓயாமல் போரி­டு­வார்கள் என்றால் என்ன அர்த்தம்? குறை­ஷிகள் வலிமை பெறும் போதெல்லாம் ஓயாமல் போரி­டு­வார்கள் என்­ப­தே­யாகும். அவ்­வ­மயம் முஸ்­லிம்­களில் எவரும் மதம் மாறி அவர்­க­ளுடன் இணைந்து முஸ்­லிம்­க­ளுடன் போராடி களத்தில் இறந்­து­விட்டால் அவர்கள் முஸ்­லிம்­க­ளாக இருக்­கையில் புரிந்த நல்­ல­மல்கள் இம்­மை­யிலும் மறு­மை­யிலும் அழிந்து நிரந்­த­ர­மாக நர­கத்தில் இருப்­பார்கள். இது எதிர்த் தரப்­புக்கு மாறி களத்தில் முஸ்­லிம்­க­ளோடு போரிட்டுக் கொல்­லப்­ப­டு­ப­வ­ரையே குறிப்­பி­டு­கி­றது.

இனி இஸ்லாம் பாட­நூலில் உள்­ள­தாகக் கூறி­யது பற்றிப் பார்ப்போம். 1980 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை கற்­பிக்­கப்­பட்ட 10 ஆம் 11 ஆம் ஆண்டு பாடப்­புத்­த­கங்­களில் குற்­றமும் தண்­ட­னையும் என்னும் தலைப்பின் கீழ் குற்­ற­வா­ளிகள் பற்றி குறிப்­பி­டப்­பட்டு அது பற்­றிய தண்­ட­னையை விளக்­குமுன் இஸ்­லா­மிய தண்­ட­னையின் இயல்­புகள், அவற்றின் நோக்கம், அவற்­றுக்­கான பின்­னணி, நிபந்­தனை ஆகி­யவை பற்­றியும் விப­ர­மாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இஸ்­லா­மிய தண்­டனை முறை­யா­னது எச்­ச­ரிக்கை விடுப்­பதை மட்­டுமே இலக்­காகக் கொண்­டி­ருக்­கி­றதே தவிர அழி­வுக்­குட்­ப­டுத்­து­வ­தற்­கல்ல. இதன் மூலம் குற்றம் புரிய முற்­ப­டு­வோ­ருக்கு எச்­ச­ரிக்கை விடுத்து நேர்­வ­ழிக்கு உட்­ப­டுத்தும் நோக்­கத்­து­ட­னேயே தண்­டனை விதிக்­கப்­ப­டு­கி­றது எனக்­கா­ணப்­ப­டு­கி­றது.

1988 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை கற்­பிக்­கப்­பட்ட 11 ஆம் வகுப்பில் குற்­றமும் தண்­ட­னையும் என்னும் தலைப்பின் கீழும் முன்­பி­ருந்த நூலில் காணப்­பட்­ட­வாறே குறிப்­பி­டப்­பட்டு அதற்கு தீர்ப்பு வழங்கும் அதி­காரம் நீதி­ப­திக்கே உண்டு எனவும் காணப்­ப­டு­கி­றது.

2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை கற்­பிக்­கப்­பட்ட 11 ஆம் ஆண்டு வகுப்பின் பாடப்­புத்­த­கத்தில் குற்­றமும் தண்­ட­னையும் என்னும் தலைப்பின் கீழும் முன்­பெல்லாம் வெளி­யா­ன­வாறே குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன. இஸ்­லா­மிய தண்­ட­னை­களின் நோக்கம் எச்­ச­ரிக்கை செய்து குற்­றத்தைத் தடுப்­ப­தே­யன்றி மக்­களை அழிப்­ப­தல்ல. குற்­றம்­பு­ரிய நினைப்­போரை தைரி­ய­மி­ழக்கச் செய்து இதன் மூலம் அவனைக் காப்­பாற்­று­வதே இஸ்­லா­மிய தண்­ட­னை­களின் எதிர்­பார்ப்பு என அதில் காணப்­ப­டு­கி­றது.

எனினும் 2016 ஆம் ஆண்டு முதல் தற்­போது வரை கற்­பிக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் பாடத்­திட்­டத்தில் குற்­றமும் தண்­ட­னையும் என்னும் விடயம் அகற்­றப்­பட்­டுள்­ளது. அதன்­படி தற்­போ­தைய பாடத்­திட்­டத்­திலும் ஆசி­ரி­ய­ருக்­கான வழி­காட்­ட­லிலும் பாடப்­புத்­த­கத்­திலும் அவை இல்லை.

இஸ்­லாத்தைப் பயிற்­று­விப்­பதில் முற்­கா­லத்தில் இருந்து கற்­பிக்­கப்­பட்ட இவ்­வி­டயம் பல்­வேறு கார­ணங்­க­ளுக்­கா­கவும் அகற்­றப்­ப­டு­வ­தாக பாடத்­திட்டக் குழு 2013 ஆம் ஆண்டு தீர்­மா­னித்­தி­ருந்­தது. அதற்கு பின்­வரும் விட­யங்­களை அது முன்­வைத்­தது.

* பாலர் பாடத்தில் இத்­த­கைய தலைப்பு பொருத்­த­மா­ன­தல்ல

* இஸ்­லா­மிய நாடு­க­ளிலும் கூட குற்றம் சம்­பந்­த­மான சட்டம் குறித்து அபிப்­பி­ராய பேதங்கள் இருக்­கவே செய்­கின்­றன. பல சந்­தர்ப்­பங்­களில் இது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­து­மில்லை. எனவே பல்­லின இலங்கை போன்ற நாட்டில் இதைக் கற்­பிப்­பது தேவை­யற்­றது.

தற்­போது பாவ­னையில் உள்ள பாடப்­புத்­த­கத்தில் ஈமானைப் பாதிக்கும் செயற்­பா­டுகள் என்னும் தலைப்பின் கீழ் இஸ்­லாத்தை விட்டும் மாறியோர் பற்றி குறிப்­பி­டப்­ப­டு­கையில் இவ்­வாறு காணப்­ப­டு­கி­றது. அதில் முஸ்லிம் சமூகம் அவரை சமூக விரோதி எனக் கணித்து செயற்­ப­டு­மாறு குறிப்­பிடப் பட்­டுள்­ளதே தவிர எந்த இடத்­தி­லா­வது தண்­டித்தல் எனும் விடயம் காணப்­பட வில்லை. 2007 ஆம்­ஆண்­டி­லி­ருந்து அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஆசி­ரி­யர்­க­ளுக்­கான வழி­காட்­டியில் 11 ஆம் வகுப்பில் குற்­றமும் தண்­ட­னையும் என்னும் விடயம் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.

என்­றாலும் கூட முர்தத் என்னும் மதம் மாறி­ய­வனை கொல்­லு­மாறு எங்கும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. 2015 ஆம் ஆண்­டி­லி­ருந்து கற்­பிக்­கப்­படும் பாடத்­திட்­டத்தின் ஆசி­ரி­ய­ருக்­கான வழி­காட்­டியில் குற்­றமும் தண்­ட­னையும் என்னும் விடயம் காணப்­ப­ட­வில்லை. ஈமா­னைப்­பற்­றிய விளக்­கத்­தி­லேயே மதம் மாறி­யவன் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கிறான். இஸ்­லா­மிய ஆட்­சியின் கீழ் அவன் தேசத்­து­ரோகி என மட்­டுமே குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கிறான். அதன்­படி இஸ்­லா­மிய ஆட்­சியில் அவனை தேசத்­து­ரோகி என மட்­டுமே கரு­த­வேண்டும் எனக் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. தண்­டனை பற்றி எதுவும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. அது மட்­டு­மல்ல பிரச்­சி­னைக்­கு­ரிய எதுவும் ஆசி­ரி­ய­ருக்­கான வழி­காட்டி நூலில் காணப்­ப­ட­வில்லை என்­பது உறு­தி­யாகும். (இது இஸ்­லா­மிய ஆட்­சியில் மட்­டு­மே­யாகும்)
அதுபோல் 2015 ஆம் ஆண்டு முதல் கற்­பிக்­கப்­படும் பாடத்­திட்­டத்தில் இலங்­கைக்குப் பொருத்­த­மான வகையில் பல்­வேறு மாற்­றங்­களும் செய்­யப்­பட்டு அதற்­கேற்­ற­வாறு பாடப்­புத்­தகம் எழு­தப்­பட்­டி­ருந்­தது. அந்த வகையில் அதில் இலங்­கைக்குப் பொருத்­த­மற்ற பல விட­யங்கள் அகற்­றப்­பட்­டுள்­ளன. அத்­தோடு பல பாடங்கள் இலங்­கைக்கு ஏற்­ற­வாறு மாற்றம் செய்­யப்­பட்டும் உள்­ளன. அதன்­படி பின்­வரும் விட­யங்கள் புதி­தாகச் சேர்க்­கப்­பட்­டுள்­ளன.

* இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஐக்­கியம் பற்றி இஸ்­லா­மிய வழி­காட்டல்

* ஏனைய மதங்­களை மதித்தல்

* ஏனைய மதத்­தி­ன­ரோடு ஐக்­கி­யத்­தையும் சக­வாழ்­வையும் பேணுதல்
* சமூக சக­வாழ்வு

* ஏனை­யோரின் நம்­பிக்­கை­க­ளையும் மதங்­க­ளையும் தெரிந்­து­கொள்ளல் (பௌத்த தர்மம், கிறிஸ்து மதம், ஹிந்து மதம்)

*தேசா­பி­மானம் என்னும் நாட்­டுப்­பற்று

* நாட்டின் அபி­வி­ருத்­திக்குப் பங்­க­ளித்தல்

* தாய­கத்தின் விட­யத்தில் விசு­வா­ச­மாக இருத்தல்

*இணைந்து வாழ்ந்து மற்­றோ­ருக்கு உதவி புரிதல்

*ஏனை­யோரின் தேவை­களை நிறை­வேற்­று­வதை முன்­னி­லைப்­ப­டுத்தல்

* அயல் வீட்­டா­ரோடு சக­வாழ்வை வளர்த்தல்

* சூழல் பாது­காப்­போடு உயி­ரி­னங்கள் மீதும் கருணை காட்­டுதல்

* சமூக சேவை­களில் ஈடு­ப­டு­வ­தோடு பொதுச்­சொத்­து­க­ளையும் பாது­காத்தல்

எனவே அந்­த­வ­கையில் இஸ்­லா­மிய பாட­வி­தா­னமும், ஆசி­ரியர் வழி­காட்­டியும், பாட­நூல்­களும் இலங்­கைக்குப் பொருத்­த­மா­ன­வை­யா­கவே அமைந்­தி­ருக்­கின்­றன. பாடத்­திட்­டத்தின் நோக்­கமும் கற்­பித்­தலின் பயனும் தீவி­ர­வாத, பயங்­க­ர­வாத, தேசத்­து­ரோக, அடிப்­ப­டை­வாத, இன­வாத அடிப்­ப­டை­களில் இல்லை என்­பது உறு­தி­யா­கி­றது.

எனவே மதத்தைக் கைவி­டு­ப­வரைக் கொல்ல வேண்டும் எனத் தற்­போ­தைய முஸ்லிம் பாட­நூலில் இருப்­ப­தாக கூறி­யி­ருப்­பது உண்­மைக்குப் புறம்­பா­ன­தாகும். குர்­ஆனில் இல்லை. ஹதீஸில் காணப்­ப­டு­கி­றது எனவும் குறிப்­பி­டு­கின்றனர். அதற்கு ஆதா­ர­மாக பின்­வரும் ஆதார பூர்வ ஹதீஸ்­க­ளையே அவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார் என நினைக்­கிறேன். (புகாரி 6922) (அஹ்மத் 1871) (திர்­மிதி 1458) (அபூ­தாவூத் 4351) (இப்னு மாஜா 2535) (நஸாஈ 4059) மேலும் சில ஹதீஸ்­களும் உள்­ளன.

இவை முஸ்­லி­மாக இருந்து கொண்டு எதி­ரி­க­ளோடு களத்தில் மதம்­மாறி அழிக்க வந்­தோ­ருக்கு விதிக்­கப்­பட்ட தண்­ட­னை­யையே குறிக்­கின்­றன. இவற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு சாதா­ரண சூழலில் நிகழ்ந்­தவை என இவற்றைக் கூற­மு­டி­யாது. தற்­போது பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக யுத்­தங்கள் நிகழ்­கின்­றன. யுத்­தங்­களின் நோக்கம் மத அடிப்­ப­டை­யி­லா­ன­தா­கவே நபி (ஸல்) அவர்­களின் காலத்தில் இருந்­தது. அதனால் தான் மதம் மாறியோர் பகி­ரங்க எதி­ரி­க­ளாக அப்­போது இனங்­கா­ணப்­பட்­டி­ருந்­தார்கள். எனவே தான் அந்த சூழலில் இஸ்­லாத்தை விட்டும் மதம் மாறியோர் எதி­ரி­களின் பக்கம் சேர்ந்து தமது மதத்­தையும் இருப்­பையும் வாழ்­வா­தா­ரங்­க­ளையும் சுய­நிர்­ணத்­தையும் இறை­மை­யையும் அழித்­து­வி­டலாம்.

இந்­நிலை மிகவும் ஆபத்­தா­னது. முஸ்­லிம்­களின் அந்­த­ரங்க மற்றும் பாது­காப்பு விட­யங்கள் எதி­ரிகள் வசம் எளி­தாகச் சென்­று­விடும் என்­ப­தற்­கா­கவே அத்­த­கையோர் மீது இரா­ணுவ நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இந்­ந­ட­வ­டிக்கை சாதா­ரண சூழ­லுக்­கு­ரி­ய­தல்ல என்­பதை நாம் விளங்­கிக்­கொள்ள வேண்டும். எதிரி நாடு­க­ளுக்கு உளவு பார்ப்­போரும் யுத்த முனையில் எதிர்த்­த­ரப்­போடு இணைந்து சொந்தத் தரப்­பையே அழிக்க முனை­வோரும் கடும் தண்­ட­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்­லையா?

கடந்த காலங்­களில் இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் இஸ்­லா­மிய அடிப்­படை வாதம் எனக் கூறி வந்த ஏகா­தி­பத்­திய நாடுகள் இப்­போது சுரு­தியை மாற்றி இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம், இஸ்­லா­மிய மய­மாக்கல் என்னும் சொற்­களை சர்­வ­தேச ஊட­கங்­களில் பயன்­ப­டுத்தி இஸ்லாம் பர­வு­வதைத் தடை­செய்து வரு­கின்­றன.
அவை மத்­திய கிழக்கைச் சுரண்­டு­வ­தற்­காக இஸ்­ரேலைத் திணித்து வலுப்­ப­டுத்தி அரபு நாடு­களில் ஆயுதக் கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்­தின. பின்னர் அர­பிகள் தமது சுய­நிர்­ண­யத்­துக்­கா­கவும் வாழ்­வு­ரி­மைக்­கா­கவும் போரா­டு­வதை ஜிஹாத் எனக்­கூறி உலகை அச்­சு­றுத்­து­கின்­றன.

ஜிஹாத் என்னும் அரபுச் சொல்­லுக்கு முஸ்­லி­மல்­லா­தோரை அழித்தல் என்றே இஸ்­லாத்தின் எதிரிகள் அர்த்தம் கற்பிக்கிறார்கள். இதன் உண்மை அர்த்தம் அர்ப்பணித்தல் என்பதேயாகும்.

*முஸ்லிம்கள் மக்காவில் 13 ஆண்டுகள் குறைஷிகளால் கொடுமை இழைக்கப்பட்டும் கொள்கையைக் கைவிடவில்லை.

*-குறைஷிகள் ஆயுதமுனையில் அழித்தொழிக்க முயன்றபோதும் முஸ்லிம்கள் அஞ்சிப் பின்வாங்கவில்லை.

*நபிகளாரையும் இஸ்லாத்தையும் தம்மையும் பாதுகாக்க வெறுங்கைகளோடு நாடு துறந்து மதீனாவுக்குப் போக நபி (ஸல்) அழைத்தபோது சென்றார்கள்.

*அவ்வமயம் முஸ்லிம்கள் தாம் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக வீடு, வாசல், தோட்டம், காணி, கால்நடைகள், ஆபரணங்கள், வர்த்தக இடங்கள், பணம், பொருட்கள், பழம்தரும் மரங்கள் ஆகியவற்றையெல்லாம் விட்டுவிட்டு குடும்பங்களோடு போனார்கள்.

*அவ்வாறு போனோர்க்கு மதீனாவில் அன்சாரீன்கள் தமது வளங்களில் பாதியைப் பகிர்ந்து வழங்கினார்கள்.

*இஸ்லாத்துக்காகவும் நபி (ஸல்) அவர்களுக்காகவும் நபித் தோழர்கள் உயிர்களைப் பணயம் வைத்துப் போராடினார்கள். ஆக இவ்வொவ்வொன்றும் ஜிஹாத் என்னும் அர்ப்பணிப்பேயாகும். இத்தகைய உயரிய இலட்சியத்துக் குரிய சொல்லைத்தான் எதிரிகள் படுமோசமானதாக அர்த்தப்படுத்துகிறார்கள்.

ஏ.ஜே.எம். நிழாம்

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.