ஹரீஸ் அமைச்சு பதவியை ஏற்கார்

0 836

தங்கள் அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­து­கொண்­டுள்ள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடந்த வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் ஒன்­று­கூடி தங்கள் முன்­னைய அமைச்சுப் பத­வி­களைப் பொறுப்­பேற்க தீர்­மா­னித்­தி­ருந்­தாலும் அதில் தற்­போது இழு­பறி நிலை நில­வி­வ­ரு­கி­றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மீண்டும் அமைச்சுப் பத­வியை ஏற்­ப­தில்லை எனத் தெரி­வித்­துள்­ள­தாகத் தெரி­விக்கப்படு­கி­றது.

நேற்று கல்­முனை மாந­கர சபை கட்­டடத் தொகு­தியில் இடம்­பெற்ற பள்­ளி­வாசல் களின் பிர­தி­நி­திகள் மற்றும் புத்­தி­ஜீ­விகள் கலந்து கொண்ட கூட்­டத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம். ஹரீஸ் இவ்­வா­றான ஒரு கருத்­தினை வெளி­யிட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

நாட்டில் முஸ்­லிம்­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் தொடரும் நிலையில் மற்றும் கல்­முனை தமிழ்ப் பிர­தேச உப செய­லகம் விவ­காரம் குழப்ப நிலையில் இருக்­கின்­றது. சாய்ந்­த­ம­ருது, வாழைச்­சேனை மற்றும் தோப்பூர் பிர­தேச மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எதுவும் மேற்­கொள்­ளாத நிலையில் அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் பிர­யோ­கிப்­ப­தற்­காக முன்­னைய அமைச்சுப் பத­வியை அவர் ஏற்­க­மாட்டார் என உறு­தி­யான தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. இந்தத் தீர்­மானம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினது அல்ல. அவரது தனிப்பட்ட தீர்மானமாகும் என ஹரீஸ் எம்.பி.யுடன் மிகவும் நெருங்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli 

 

Leave A Reply

Your email address will not be published.