காதி சபைக்கு செயலாளர் நியமிக்கப்படாததால் சிக்கல்

நீதி அமைச்சர் தலதாவிடம் முறைப்பாடு

0 749

காதிகள் சபைக்கு செய­லாளர் ஒருவர் கடந்த ஒரு வருட கால­மாக நிய­மிக்­கப்­ப­டா­ததால் அச்­ச­பை­யினால் புதிய வழக்­கு­களை ஏற்­றுக்­கொள்­ளவோ அல்­லது ஆவ­ணங்­க­ளுக்­கான கட்­ட­ணங்­களை அற­வி­டவோ

­மு­டி­யா­துள்­ள­தா­க நீதி அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­யிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­நி­லைமை கார­ண­மாக வழக்­குகள் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் பொது­மக்கள் பல அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளாகி வரு­வதால் தாம­த­மில்­லாது காதிகள் சபைக்கு செய­லாளர் ஒரு­வரை நிய­மிக்­கும்­ப­டியும் நீதி அமைச்­ச­ரிடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. நாடெங்கும் இயங்­கி­வரும் 60 க்கும் மேற்­பட்ட காதி­நீ­தி­மன்­றங்­களில் வழங்­கப்­படும் தீர்ப்­புக்­க­ளுக்கு எதி­ராக மேன்­மு­றை­யீடு செய்­வ­தென்றால் காதிகள் சபைக்கே அந்த மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டியுள்ளன. இதனால் பல வழக்குகள் நீண்டகாலமாக காதிகள் சபையில் தேங்கிக் கிடக்கின்றன.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.