திகிலூட்டும் பகிடிகள் வேண்டாம்

0 2,889

தூங்­கு­ப­வனை எழுப்­பலாம். தூங்­கு­வ­துபோல் நடிப்­ப­வனை எழுப்ப முடி­யாது. இந்­நாட்­களில் நடந்து கொண்­டி­ருப்­பதோ அதுதான். டாக்டர் ஷாபி விவ­கா­ரத்தில் நடந்­து­வ­ரு­வதும் இது­வேதான்.மலட்­டுத்­தன்­மையை ஏற்­ப­டுத்தும் வித­மாக டாக்டர் ஒருவர் சத்­தி­ர­சி­கிச்­சைகள் செய்­தி­ருப்­ப­தாகப் பரப்­பப்­படும் கட்­டுக்­க­தை­யி­னால்தான் இன்­றைய குழப்­ப­நிலை உரு­வா­கி­யி­யுள்­ளது.

தேசி­ய­வாதப் பத்­தி­ரிகை எனத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஓர் இன­வாதப் பத்­தி­ரி­கையின் வாயி­லா­கத்தான் இந்தக் கட்­டுக்­கதை இட்­டுக்­கட்­டப்பட்டுள்ளது. விஞ்­ஞானம் படித்­தி­ருப்­ப­தாகச் சொல்லிக் கொள்ளும் – முழுக்க முழுக்க மூட­நம்­பிக்­கை­களைப் பின்­பற்­றி­வரும் ஒரு­வரின் மூல­மா­கவும் இக்­கட்­டுக்­கதை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அதை மேலும் மெய்ப்­பிக்கும் கைங்­க­ரி­யத்தைப் பொலிஸ் உய­ர­தி­காரி ஒரு­வரும் செய்­துள்ளார். இப்­போது மகா­நா­யக்க தேரர் ஒரு­வரும் தனது அறி­யா­மையின் தரத்தை அப்­பட்­ட­மாக வெளிக்­காட்­டிக்­கொண்டு அவரும் தன்­பங்­குக்கு இக்­க­தையைப் பூதா­க­ர­மாக்கி விட்­டுள்ளார்.

அண்­மைய நாட்­களில் புத்­தி­ஜீ­விகள், சிந்­திக்கக் கூடி­ய­வர்கள் எல்­லோ­ருமே பயங்­க­ர­வா­தத்­துக்கும் தீவி­ர­வா­தத்­துக்கும் மூட­நம்­பிக்­கை­க­ளுக்கும் எதி­ரா­கவே குரல்­கொ­டுத்துக் கொண்­டி­ருந்­தனர். அதே­வேளை, அவர்கள் எல்­லோரும் தேசி­ய­வா­திகள் எனச் சொல்லிக் கொள்ளும் இன­வாத அனு­மார்­களை விட்­டொ­துங்கி, எந்த இனத்­தி­லி­ருந்தும், எந்தச் சமூ­கத்­தி­லி­ருந்தும் எழக்­கூ­டிய எல்­லா­வி­த­மான தீவி­ர­வா­தங்­க­ளுக்கும் எதி­ரா­கவே அவர்கள் பரந்த அடிப்­ப­டையில் எதிர்த்­தெ­ழுந்து நின்­றனர்.

‘தீவி­ர­வா­திகள்’ என்­பது முஸ்­லிம்­க­ளுக்கு மட்­டுமே உரித்­தா­னதோர் அடை­மொழி அல்­ல­வென்றும் தீவி­ர­வா­தத்தைக் கைக்­கொள்ளும் எச்­ச­மூ­கத்­துக்கும் அது பொருந்­து­மென்­றுமே அவர்கள் கருதி வந்­தனர்.

மஹிந்­தவின் ஆட்சி நில­வி­ய­போது சிங்­கள பெளத்த தீவி­ர­வா­தத்­துக்குத் துணை­போகும் போக்குக் காணப்­பட்­ட­தற்கு எதி­ராக நாட்­டிலே ஒரு நல்ல மாற்­றத்தைக் கொண்டு வரு­வ­தற்­கா­கவும் உண்­மை­யான தேசிய ஐக்­கி­யத்தைக் கட்­டி­யெ­ழுப்­பவும் எல்­லா­வி­த­மான தீவி­ர­வா­தத்­துக்கும் எதி­ரா­க­வுமே இவர்கள் கிளர்ந்­தெ­ழுந்­தனர். ஆயினும் இன்­றைய அரசின் வங்­கு­ரோத்து நிலை­யாலும் முது­கெ­லும்­பற்ற போக்­காலும் நாடு மீண்டும் சிங்­கள பெளத்த தீவி­ர­வா­தத்தை நோக்கி நகர்ந்து செல்­வ­தோடு அதற்கு எதிர்­வி­னை­யாக ஏனைய சமூ­கங்­க­ளிலும் தீவி­ர­வாதம் தலை­யெ­டுக்கும் அபா­யமும் ஏற்­பட்­டுள்­ளது.

ஏப்ரல் 21 தாக்­கு­த­லோடு நியா­யத்தை நேசிக்கும் புத்­தி­ஜீ­விகள் அனை­வ­ரதும் கோரிக்­கை­யாக இருந்­தது தீவி­ர­வா­தி­க­ளுக்கு சட்­டப்­படி உரிய தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்­ப­துடன், எல்­லா­வி­த­மான தீவி­ர­வா­தங்­களும் ஒடுக்­கப்­பட வேண்­டு­மென்­பதே ஆகும். ஆயினும் சந்­தர்ப்பம் பார்த்துக் காத்­தி­ருக்கும் – பெளத்­தர்­க­ளாகத் தம்மைக் காட்­டிக்­கொண்­டி­ருக்கும் இன­வாத சக்­தி­களும் அதி­கா­ரப்­பசி கொண்­ட­லையும் அர­சி­யல்­வா­தி­களும் தத்­த­மது போலி வேஷங்­களைக் களைந்­து­கொள்­வ­தற்­கான சந்­தர்ப்­பங்கள் உரு­வா­கும்­வரை விடப்­பட்டுப் பார்த்­துக்­கொண்­டி­ருக்கும் ஒரு சூழ்­நிலை தற்­போது உரு­வா­கி­யுள்­ளது. அதற்குத் துணை­யாக அமைந்­தி­ருப்­பது பெளத்த தர்­மத்­துக்கு எதி­ராக செயற்­படும் ஒரு­சில பெளத்த துற­வி­களின் வேலைத்­திட்­டங்­க­ளாகும். அத­னூ­டாக நாடு முழு­வதும் முஸ்லிம் விரோத வன்­முறைப் போக்­கொன்று கட்­ட­விழ்த்து விடப்­பட்­டி­ருப்­பதும் அத்­து­ர­லியே ரதன தேரர் போன்ற அர­சியல் அனா­தைகள் தமது சுய­லாப வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்துச் சென்று நாட்டின் எதிர்­கா­லத்­தையே அழி­வுக்குள் தள்­ளி­விடும் ஆபத்­து­நி­லையும் ஏற்­பட்டு வரு­கி­றது.

இத்­த­கைய எல்­லா­வி­த­மான குரோ­தத்­த­னங்­க­ளுக்கும் பலி­யாகி இருப்­பது டாக்டர் ஷாபி ஆவார். அவர் தொடர்பில் எழுந்த பிரச்­சி­னைகள் குறித்தும் நியா­ய­மான மக்­களின் கோரிக்­கை­யாக இருந்­தது – உரிய விதத்தில் விசா­ர­ணைகள் மேற்­கொண்டு உண்­மை­யான விட­யங்கள் வெளிக்­கொ­ண­ரப்­பட வேண்­டு­மென்­பதே. இது தொடர்பில் பொது­வாக மருத்­து­வர்கள் சமூகம் தாமாக முன்­வந்து பொது­வெ­ளியில் உண்­மை­யான நிலை­மை­களைப் பேசி­யி­ருக்க வேண்டும். ஆயினும் ஓரிரு துறைசார் மருத்­து­வர்கள் தவிர்ந்த அநேக மருத்­து­வர்கள் மெள­ன­மாக இருந்­து­விட்­ட­தோடு இலங்கை மருத்­துவ அதி­கா­ரிகள் சங்­க­மும்­கூடத் தனது தனிப்­பட்ட அர­சியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்­ப­டையில் இவ்­வி­ட­யத்தில் தமது பொறுப்பைச் செய்ய முன்­வ­ர­வில்லை.

எது எப்­ப­டியோ தற்­போது நியா­ய­மான எல்­லோரும் நினைத்­தி­ருந்­த­ப­டியே, டாக்டர் ஷாபிக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுகள் இன­வா­தி­களால் புனை­யப்­பட்­டவை, போலி­யா­னவை எனத் தெளி­வா­கி­வரும் ஒரு சூழ்­நிலை உரு­வாகி வரு­கி­றது. இந்­நிலை டாக்டர் ஷாபிக்கு மட்­டு­மன்றி நியா­யத்தை –- நாட்டின் அபி­மா­னத்தை நேசிக்கும் எல்­லோ­ருக்­குமே நம்­பிக்­கை­ய­ளிக்கும் ஒரு விட­ய­மாக உள்­ளது. குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­களம் மேற்­கொண்ட விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் உண்­மை­களைப் பொது­வெ­ளியில் முன்­வைக்க முன்­வந்­தி­ருப்­பதும், அவ்­வி­ட­யங்­களைத் தெளி­வாக முன்­வைத்­தி­ருப்­பதும் நில­வி­வரும் குழப்­ப­நி­லையைக் கட்­டுப்­ப­டுத்­தவும் சட்ட ஒழுங்கை நிலை­நாட்­டவும் நாட்டில் ஏற்­ப­ட­வி­ருந்த ஒரு பேர­ழிவைத் தடுத்து நிறுத்­தவும் வழி­ச­மைத்­துள்­ளது.

எனினும், முஸ்லிம் சமூ­கத்தைப் புறக்­க­ணித்து, பொது­வெ­ளி­யி­லி­ருந்து முஸ்­லிம்­களை அகற்­றி­வி­டு­வ­தையே தமது ஒரே இலக்­காகக் கொண்டு செயற்­படும் தீவி­ர­வா­தி­களோ தமக்கு முன்னால் விரிந்­தெ­ழுந்து நிற்கும் உண்­மை­களைக் கண்­டு­கொள்­ளவோ ஏற்­றுக்­கொள்­ளவோ தயா­ராக இல்லை. அவர்­க­ளுக்குத் தேவைப்­ப­டு­வ­தெல்லாம் உண்­மை­க­ளல்ல, மாறாக அவர்கள் உண்­மை­க­ளெனப் புனைந்து பரப்­பி­விட்­டி­ருக்கும் பொய்கள் எப்­ப­டி­யேனும் உண்­மைப்­பட வேண்­டு­மென்­பது மட்­டுமே. என­வேதான் குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் விசா­ர­ணை­க­ளையும் வெறுத்­தொ­துக்கி வரு­கின்­றனர்.

அவர்­களின் ஒரே இலக்கு, ‘டாக்டர் ஷாபி பெண்­க­ளுக்கு சட்­ட­வி­ரோ­த­மாக கருத்­தடைச் சத்­தி­ர­சி­கிச்­சை­களை மேற்­கொண்­டுள்ளார்’ என ஏற்­றுக்­கொள்ளும் ஒரு ‘சூழ்­நி­லையை’ எப்­ப­டி­யா­வது ஏற்­ப­டுத்­தியே ஆக­வேண்டும் என்­பது மட்­டுமே. அத­ன­டிப்­ப­டையில் நீதி­யை­வேண்டி ஷாபி மேற்­கொண்­டுள்ள மனித உரி­மைகள் வழக்கு நட­வ­டிக்­கை­க­ளைக்­கூட – ஷாபியின் தலையை மட்­டுமே வேண்டி நிற்கும் – இவர்கள் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ளப் போவ­து­மில்லை.

தீர்க்­க­மா­ன­தொரு தரு­ணத்தை நாம் கடந்­து­கொண்­டி­ருக்­கிறோம். நாட்டின் எதிர்­கா­லத்தை இன­வா­தி­களின் கைக­ளுக்கா அல்­லது மானு­டத்தை நேசிப்போர் கைக­ளுக்கா நாம் தாரை­வார்க்கப் போகி­றோ­மென்­பதைக் கவ­ன­மாகச் சிந்­தித்துத் தீர்­மா­னிக்க வேண்­டிய ஒரு தருணம் இது. துர­திஷ்­ட­வ­ச­மாக, தமது அர­சியல் சுய­லா­பங்­க­ளுக்­காக இக்­கு­ழப்ப நிலையைப் பயன்­ப­டுத்தி வாக்­கு­களைக் கொள்­ளை­ய­டிக்க அர­சி­யல்­வா­திகள் முழு­மூச்­சோடு செயற்­பட்டு வரும் – தேர்­தல்கள் வந்­து­கொண்­டு­ருக்கும் ஓர் இக்­கட்­டான கால­கட்­டத்­தில்தான் நீதியை நேசிக்கும் நல்­ல­வர்கள் கடி­ன­மாகப் போராட வேண்­டி­யுள்­ளது.

ஆளும் தரப்பைப் போலவே எதிர்க்­கட்­சி­களும் ஏனைய அர­சியல் சக்­தி­களும் மேடை­களில் எப்­படி, எவற்றைப் பேசிக்­கொண்­டாலும் நாட்டில் உரு­வா­கி­யி­ருக்கும் குழப்­ப­நி­லையைத் தணிப்­ப­தற்­கான உண்­மை­யான, உருப்­ப­டி­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தாகத் தெரி­யவே இல்லை. மாறாக அவர்கள், நாட்டில் ஏற்­பட்­டி­ருக்கும் பிரி­வி­னை­க­ளுக்­கான கோடு­களை மேலும் மேலும் அழுத்திக் கீறி­வி­டு­வ­தி­லேயே கரி­ச­னை­காட்டி வரு­கின்­றனர். சமயத் தலை­வர்­களும் இதையே செய்து வரு­கின்­றனர் என்­பது இப்­போது மிகத் தெளி­வாகி விட்­டுள்­ளது. இத்­த­கை­ய­தொரு சூழ்­நி­லையில், ஆரம்­பத்தில் சிறந்­த­தொரு தேசிய ஆளு­மை­யாக வெளிப்­பட்­டி­ருந்த பேராயர் ரஞ்சித் ஆண்­டகை அவர்­களும் அத்­து­ர­லியே ரதன தேரரின் உண்­ணா­வி­ரதக் களத்­திற்கு வரு­கை­தந்து தனது சுய­ரூ­பத்தை வெளிக்­காட்ட வேண்­டிய தேவை ஏற்­பட்­டி­ருப்­பது நிலவும் சூழ்­நி­லையின் பேரா­பத்துக் குறித்த ஏரா­ள­மான செய்­தி­களை நமக்கு மறை­மு­க­மாக உணர்த்தி நிற்­கி­றது.

இன்­றுள்ள சூழ்­நி­லையில் நாட்­டி­லுள்ள புத்­தி­ஜீ­விகள் எல்­லோரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­வேண்­டிய தேவை பல­மாக உண­ரப்­பட்டு வரு­கி­றது. அந்த ஒன்­றி­ணை­வுக்கு சகல அர­சியல் வேறு­பா­டு­க­ளையும் புற­மொ­துக்கிச் செயற்­பட வேண்­டி­யுள்­ளது. அதே­போல பரந்­து­பட்ட ஒரு தேசிய ஐக்­கி­யத்தை நாடி­நிற்க வேண்­டி­யுள்­ளது. இதற்­காக மத­வாதப் போக்­கு­களைப் புறந்­தள்ள வேண்­டி­யுள்­ளது. இது கடும் சிர­ம­மான அர்ப்­ப­ணிப்பை வேண்டி நிற்­கி­றது. அந்த அர்ப்­ப­ணிப்­பா­னது குறு­கி­ய­கால வெற்­றியை அல்­லாமல் நீடித்து நிலைத்த இலக்கைக் கொண்­டி­ருக்க வேண்டும். இவை தவிர நமக்கு வேறு மாற்றுத் தெரி­வுகள் ஏது­மில்லை.

தூங்­கு­வது போல நடித்துக் கொண்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராகத் திரண்­டெழும் மக்­களின் போராட்­டத்­தி­லி­ருந்து அப்பால் ஒதுங்கிச் செல்ல இந்த இக்­கட்­டான கட்­டத்தில் எவ­ருக்கும் உரி­மை­யில்லை! மாற்­ற­ர­சி­யலில் ஈடு­பட்­டி­ருப்­போ­ருக்கும் இதுவே பொருந்­தக்­கூ­டி­யது. இத்­த­கைய மாற்­ற­ர­சியல் சக்­திகள் தத்­த­மது தனிப்­பட்ட அர­சியல் நிகழ்ச்சி நிரல்­க­ளுக்­கான தருணம் வாய்க்கும் வரை, தம்மைப் போன்ற பிற மாற்றுச் சக்­தி­க­ளி­ட­மி­ருந்து தம்மைத் தொடர்ந்தும் தனி­மைப்­ப­டுத்திக் கொண்டே இருப்­பார்­க­ளெனில், அவர்­க­ளுக்கும் ஏனைய ஐ.தே.க., சு.க. மற்றும் மொட்டு அணி­யினர் போன்ற சரா­சரி அர­சியல் சக்­தி­க­ளுக்கும் இடையில் எந்த வேறு­பா­டு­களும் இல்­லை­யென மக்­களே தீர்­மா­னித்து விடு­வார்கள்.

இது மக்கள் விடு­தலை முன்­னணி, முன்­னிலை சோஷ­லிசக் கட்சி (Frontline Socialist Party) மற்றும் ஏனைய மாற்றுக் குழுக்­க­ளுக்கும் பொருந்தும். நாட்டின் எதிர்­கால நலனைக் கருத்தில் கொண்டு செயற்­படும் மக்கள் அனை­வ­ரி­னதும் பொது­வான ஒரே எதிர்­பார்ப்பு, அனைத்­துக்கும் முத­லாக – இன­வா­தத்தை நோக்கி நாடு தள்­ளப்­பட்டுக் கொண்­டு­செல்­வதைத் தடுக்க அனை­வரும் முன்­வர வேண்டும் என்பதேயாகும். சிங்களத் தீவிரவாதிகளைப் போலவே முஸ்லிம், தமிழ்த் தீவிரவாதிகளுக்கு எதிராகவும் ஏககாலத்தில் ஒன்றிணைவதன் ஊடாகவும் சிங்கள, தமிம், முஸ்லிம்கள் மத்தியில் இருக்கும் நடுநிலைச் சிந்தனை கொண்ட மக்களை ஒரே அணியாக ஒன்றுதிரட்டுவதின் ஊடாகவுமே இதைச் செய்ய முடியும்.

அரச பணியாளர்களின் சீருடை விடயத்தைக்கூட மிகப்பெரிய சிக்கலாக்கிக் கொண்டுள்ள ஓர் அரசாங்கமானது, நாட்டின் இதர பிரச்சினைகளைத் தீர்க்குமென நம்புதல் நகைப்புக்கிடமானது. அதைப் போலவே எதிர்க்கட்சியும் நாட்டின் பிரச்சினைகளை நாளையே தீர்த்துவிடுமென்று நினைப்பதும் இதுபோன்ற நகைச்சுவையே ஆகும்.

அனைத்து சந்தர்ப்பவாதிகளையும் அடித்து விரட்டிவிட்டு, மக்களே தமக்குள் ஓரணியில் திரள்வதற்கான தருணமே தற்போது வாய்த்திருக்கிறது! பல்வேறு முன்னணிகளில் இருக்கும் பொதுவான நோக்கத்தைக் கொண்டுள்ளவர்கள் அனைவரும் ஒன்றுசேர்வதனூடாகவே இதைச் செய்யமுடியும். அதற்காக அவர்கள் இப்போது பொதுவானதோர் உடன்பாட்டுக்கான உரையாடல்களைத் தொடங்க வேண்டும். இத்தருணத்தில் அவர்கள் இதைச் செய்யத் தவறுவதானது, வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தங்களையும் எடுத்தெறிந்து வீசிவிடுவதாகவே அமையுமென அனைவரும் புரிந்துகொள்வது நல்லது.

நுவன் உதய விக்­ர­ம­சிங்ஹ 

தமிழில்: சட்­டத்­த­ரணி அஜாஸ் முஹம்மத்

நன்றி: ‘ராவய’

Leave A Reply

Your email address will not be published.