டாக்டர் சாபியை தடுத்து வைத்திருப்பது நியாயமற்றது

பாதுகாப்பு செயலாளருக்கு சி.ஐ.டி கடிதம்

0 724

டாக்டர் சேகு சஹாப்தீன் மொஹமட் சாபி தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­பிலோ அல்­லது வேறு ஏதா­வது பயங்­க­ர­வாதக் குழு­விலோ அங்­கத்­த­வ­ராக உள்ளார் என்­பது தொடர்பில் எந்­தவோர் உள­வுப்­பி­ரி­வுக்கும், பாது­காப்புப் பிரி­வுக்கும் தக­வல்கள் கிடைக்­க­வில்லை. அதனால் டாக்டர் சாபியை பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தொடர்ந்தும் குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­க­ளத்தில் தடுத்து வைத்­தி­ருப்­பது நியா­ய­மற்­றது என குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­களம் பாது­காப்புச் செய­லா­ள­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­தி­ருப்­ப­தாக அத்­தி­ணைக்­க­ளத்தின் உய­ர­தி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார்.
டாக்டர் சாபி சஹாப்தீன் தற்­போது 1978 ஆம் ஆண்டு 49 ஆவது இலக்க பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் 9 (1) பிரிவின் கீழ் கடந்த மே மாதம் 27 ஆம் திக­தி­யி­லி­ருந்து 90 நாட்கள் தடுத்து வைத்­தி­ருக்கும் உத்­த­ர­வின்­படி தொடர்ந்தும் குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­க­ளத்­தினுள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.

அவர் தொடர்பில் எந்­த­வித பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களும் உறுதி செய்­யப்­ப­ட­வில்லை. அவர் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்பு பட்­டி­ரா­ததால் அவர் மீது விதிக்கப் பட்­டுள்ள தடுத்து வைக்கும் உத்­த­ர­வினை இரத்­துச்­செய்­யும்­படி குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­களம் பாது­காப்புச் செய­லா­ள­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் தெரி­வித்­துள்­ள­தெ­னவும் அந்த அதி­காரி தெரி­வித்தார்.

இந்தச் சம்­பவம் தொடர்­பாக கடந்த 27 ஆம் திகதி குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­களம் குரு­நாகல் நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­திக்கு அறி­வித்­துள்­ளது. குறிப்­பிட்ட சந்­தேக நப­ரான டாக்டர் சாபி எந்­த­வொரு பயங்­க­ர­வாதக் குழு­வு­டனோ அல்­லது பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளு­டனோ தொடர்­புள்­ளவர் என்­ப­தற்கு எந்தத் தக­வலும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை.

அதனால் சந்­தே­க­நபர் மீது விதிக்­கப்­பட்­டுள்ள தடுத்து வைக்கும் உத்­த­ரவு இரத்துச் செய்யப்பட்டால், அது தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவிப்புச்செய்து அவரை விடுதலை செய்யமுடியும் எனவும் பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.