அரச அலுவலகங்களில் அபாயா அணிய தடுத்ததாக முறைப்பாடுகள் இருப்பின் நடவடிக்கை எடுப்போம்

பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சர் மத்தும பண்டார

0 935

தங்­க­ளது கலா­சார ஆடை­களை அணிந்து கட­மைக்குச் சென்ற சில அரச ஊழி­யர்கள் அவர்க­ளது அலு­வ­ல­கங்­களில் தொல்­லை­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக எமக்கு அறிக்­கைகள் கிடைத்­தன.

அதற்­காக நாம் வருந்­து­கிறோம். இது தொடர்­பாக ஏதும் முறைப்­பா­டுகள் இருப்பின் அவற்­றுக்­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுப்போம் என பொது நிர்­வாகம் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார்.

ஆங்­கில ஊட­க­மொன்­றி­னது நேர்­கா­ண­லின்­போது அரச முஸ்லிம் பெண் ஊழி­யர்­க­ளது ஆடை தொடர்­பாக வின­வப்­பட்ட கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில், அமைச்­சினால் வெளி­யி­டப்­பட்ட அரச ஊழி­யர்­களின் ஆடை தொடர்­பான சுற்று நிரு­பத்தில் அமைச்­ச­ர­வையின் தீர்­மா­னத்­துக்கு அமை­யவே நாம் திருத்­தங்­களைச் செய்தோம். அமைச்­ச­ர­வையில் இது தொடர்பில் பல்­வேறு கருத்­துகள் தெரி­விக்­கப்­பட்­டன. இறு­தியில் எங்­களால் திருத்­தங்­களைச் செய்­வ­தற்­கான பொது­வான இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டது.

அரச ஊழி­யர்­களின் ஆடை தொடர்பில் முதன்­முதல் 1989 ஆம் ஆண்டே சுற்று நிருபம் ஒன்று வெளி­யி­டப்­பட்­டது. அரச ஊழி­யர்கள் எவ்­வா­றான ஆடை அணிய வேண்­டு­மென அந்தச் சுற்று நிருபம் துல்­லி­ய­மாகத் தெரி­வித்­துள்­ளது. இந்­தச்­சுற்று நிரு­பத்­துக்குப் பின்பு மேலு­மொரு சுற்று நிருபம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அச்­சுற்று நிரு­பத்தில் பெண் அரச ஊழி­யர்கள் ஆடை­யினை தைத்துக் கொள்­வ­தற்­கான கொடுப்­ப­ன­வொன்­றினை வழங்­கு­வ­தற்கும் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த சுற்று நிருபம் 2008 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்­டது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முகத்­தி­ரையைத் தடை­செய்து அண்­மையில் வர்த்­த­மானி அறி­வித்தல் ஒன்­றினை வெளி­யிட்டார். இதற்கு அமை­வா­கவே நாம் சுற்று நிரு­பத்தை அண்­மையில் வெளி­யிட்டோம். அதில் அரச பெண் ஊழி­யர்­களின் ஆடை சாரி (சேலை) அல்­லது ஒசரி என்று குறிப்­பிட்டோம்.

பாரம்­ப­ரிய கலா­சார உடை இவ்­வா­றான ஆடை சட்ட ஒழுங்­கு­க­ளுக்கு முரண்­ப­டலாம். அத்­தோடு நாட்டின் கலா­சா­ரத்­து­டனும் முரண்­ப­டலாம். ஆனால் அரச ஊழி­யர்­களைப் பொறுத்­த­வ­ரையில் நாம் இதனை வேறு­ப­டுத்­தியே பார்க்க வேண்­டி­யுள்­ளது.

அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்­து­டனே சுற்று நிரு­பத்தில் நாம் திருத்­தங்­களைச் செய்­துள்ளோம்.

பாரா­ளு­மன்ற தெரிவுக்குழு அங்­கத்­து­வர்­க­ளுக்கு அரச அதி­கா­ரி­களை கேள்­விக்குட் படுத்­து­வ­தற்கு உரிமை இருக்­கி­றது. அத­ன­டிப்­ப­டை­யிலே அமைச்சின் செய­லாளர் ஜே.ஜே. ரட்­ண­சிரி அரச ஊழி­யர்­களின் ஆடை தொடர்­பாக வெளி­யி­டப்­பட்ட சுற்று நிருபம் தொடர்பில் கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­பட்டார்.

கடந்­த­கால அர­சாங்­கத்தில் அரச அதி­கா­ரி­க­ளுக்கு சுதந்­தி­ர­மாக கருத்து வெளியிடுவதற்கும், பேசுவதற்கும் இடமளிக்கப்படவில்லை. ஆனால் அரச அதிகாரிகள் அச்சமின்றிப் பேசுவதற்கான வழியை நாம் திறந்து விட்டிருக்கிறோம். இந்த உரிமையை நாம் அனைத்து மக்களுக்கும் வழங்கியுள்ளோம். இதுவே நல்லாட்சி யாகும். நாட்டில் ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.