கொட்டாரமுல்லையில் வன்செயலில் கொல்லப்பட்டவருக்கு நஷ்டஈடு வழங்குவதில் தாமதம்

0 755

நாத்­தாண்­டிய, கொட்­டா­ர­முல்லை பிர­தே­சத்தில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­களின் போது கூரிய வாளால் வெட்­டப்­பட்டு கொலை செய்­யப்­பட்ட நான்கு பிள்­ளை­களின் தந்­தை­யான பௌஸுல் அமீரின் (45) இறப்­புச்­சாட்சிப் பத்­திரம் இன்னும் இழப்­பீட்டு பணி­ய­கத்­துக்கு கைய­ளிக்­கப்­ப­டா­ததால் அவ­ருக்­கான முழு நஷ்ட ஈட்­டி­னையும் வழங்க முடி­யாத நிலை­யேற்­பட்­டுள்­ள­தாக இழப்­பீட்டு பணி­யகம் தெரி­வித்­துள்­ளது.

கடந்த மே மாதம் 13 ஆம் திகதி இரவு கொட்­டா­ர­முல்­லையைச் சேர்ந்த பௌஸுல் அமீர் பெரும்­பான்மை இன­வா­தி­களால் கூரிய வாளால் வெட்­டப்­பட்டு கொலைச் செய்­யப்­பட்டார். அவ­ரது மர­ணத்­துக்­கான நஷ்ட ஈடாக 10 இலட்சம் ரூபா வழங்க தீர்­மா­னிக்­கப்­பட்டு 3 இலட்சம் ரூபா முற்­கொ­டுப்­ப­ன­வாக வழங்­கப்­பட்­டது.

மிகுதி நஷ்ட ஈடு தொகை­யான 7 இலட்சம் ரூபாவை வழங்­கு­வ­தற்கு அவ­ரது இறப்புச் சாட்சிப் பத்­திரம் இது­வரை இழப்­பீட்டு பணி­ய­கத்­திற்கு கிடைக்­க­வில்­லை­யென இழப்பீட்டு பணியகத்தின் மேலதிகப் பணிப்பாளர் எஸ். எம். பதுர்தீன் தெரிவித்தார்.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.