பிரித்தானிய கல்வியியலாளருக்கு ஐ.அரபு அமீரகம் பொது மன்னிப்பு

0 851

ஐக்­கிய அரபு அமீ­ரகம் உட­ன­டி­யாக செயற்­படும் வண்ணம் பிரித்­தா­னிய கல்­வி­யி­ய­லா­ள­ரான மத்­தியூ ஹெட்­ஜ­ஸுக்கு பொது மன்­னிப்பு வழங்­கி­யுள்­ளது.

ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் தேசிய தின கருணை அடிப்­ப­டை­யி­லான செயற்­பாட்டின் ஒரு பகு­தி­யாக 31 வய­தான மத்­தியூ ஹெட்­ஜ­ஸுக்கு பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அரச ஊடகம் கடந்த திங்­கட்­கி­ழமை அறி­வித்­தது.

கடந்த திங்­கட்­கி­ழமை ஐக்­கிய அரபு அமீ­ரகத் தலை­நகர் அபு­தா­பியில் அவ­ச­ர­மாகக் கூட்­டப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே மத்­தியூ ஹெட்­ஜ­ஸுக்கு பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் அறி­விக்­கப்­பட்­டது.

ஐக்­கிய அரபு அமீ­ரக ஜனா­தி­பதி ஹலீபா பின் ஸெயிட் அல்-­நஹ்யான் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று நூற்­றுக்­க­ணக்­கான ஏனை­யோ­ருடன் பிரித்­தா­னிய கல்­வி­யி­ய­லா­ள­ருக்கும் இப்பொது­மன்­னிப்பு வழங்­கப்­பட்­ட­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

வழக்­க­மான சில விதி­மு­றைகள் மேற்­கொள்­ளப்­பட்­டதன் பின்னர் ஐக்­கிய அரபு அமீ­ர­கத்­தி­லி­ருந்து செல்­வ­தற்கு பிரித்­தா­னிய கல்­வி­யி­ய­லா­ள­ருக்கு அனு­மதி வழங்­கப்­ப­டு­மென உத்­தி­யோ­க­பூர்வ அறிக்­கை­யொன்றில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பிரித்­தா­னிய புல­னாய்வுப் பிரிவின் தலை­வ­ராக தான் இருப்­ப­தாக வேண்­டு­மென்றே ஹெட்ஜஸ் தெரி­விக்கும் காணொ­லி­யொன்று ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்னர் இந்த அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டது.

கடந்­த­வாரம் மத்­தியூ ஹெட்­ஜ­ஸுக்கு ஆயுள் தண்­டனை வழங்­கப்­பட்­டதைத் தொடர்ந்து ஐக்­கிய அரபு அமீ­ரக அதி­கா­ரிகள் மீது சர்­வ­தேச அழுத்­தங்கள் அதி­க­ரிக்கத் தொடங்­கின.

கலா­நிதிப் பட்­டத்­திற்­கான கற்­கை­யினை துர்ஹாம் பல்­க­லைக்­க­ழ­கத்தில் மேற்­கொண்டு வரும் ஹெட்ஜஸ் இரு வார கால ஆய்வுப் பய­ணத்தின் பின்னர் துபாய் விமான நிலை­யத்தில் வைத்து கடந்த மே மாதம் 05ஆம் திகதி கைது செய்­யப்­பட்டார்.

அவர் கைது செய்­யப்­பட்­ட­போது 2011 ஆம் ஆண்டு அரபு வசந்தப் புரட்­சியின் பின்னர் ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு பாது­காப்புக் கொள்­கைகள் தொடர்பில் ஆய்­வினை மேற்­கொண்­டி­ருந்தார்.

வளை­குடா நாட்டில் உளவு பார்த்­தா­ரெனக் கடந்த ஒக்­டோபர் மாதம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக குற்­றம்­சாட்­டப்­பட்ட ஹெட்ஜஸ் கடந்த ஆறு மாதங்­க­ளாக தனிமைச் சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருந்தார்.

ஒரு காணொ­லியில் தான் எம்.ஐ.6 என்ற பிரித்­தா­னிய புல­னாய்வுப் பிரிவின் தலைவர் என தன்னை விப­ரிக்­கின்றார். மற்­று­மொரு காணொ­லியில் தான் மேற்­கொள்ளும் ஆய்வின் மூலம் இல­கு­வாக உள்­நு­ழைய முடி­வ­தாக அலு­வ­ல­க­மொன்றில் அவர் கூறு­கின்றார்.

அதன் பின்னர் அவர் தனது விரல்­களை சொடுக்கி அதுதான் எம்.ஐ.6 எனக் குறிப்­பி­டு­கின்றார்.

இந்த விடயம் எமது நீண்­ட­கால நட்­பு­றவின் அடிப்­ப­டையில் பொது­வான தளத்­தி­னூ­டாகத் தீர்க்­கப்­பட வேண்டும் என்­பதே ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் எதிர்­பார்ப்­பாகும் என  ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் கலா­நிதி அன்வர் கர்காஷ் பொது மன்­னிப்பு தொடர்பில்  வெளி­யிட்ட அறிக்­கையில் தெரி­வித்­துள்ளார்.

“இது மிகவும் நல்ல செய்தி, இப்­பி­ரச்­சினை தீர்ந்­துள்­ளமை தொடர்பில் ஐக்­கிய இராச்­சியம் மகிழ்­வ­டை­கின்­றது” என ஐக்­கிய இராச்­சி­யத்தின் வெளி­நாட்டு செய­லாளர் ஜெரமி ஹன்ட் தனது டுவிட்­டரில் தெரிவித்துள்ளார்.

அமீரகமல்லாத நாடொன்றைச் சேர்ந்த ஒருவருக்கு ஆயுள் தண்டனை என்பது 25 வருடங்களாகும். அதன் பின்னர் அவர் நாடுகடத்தப்படுவார் என

‘த நெஷனல்’ பத்திரிகை தெரிவித்துள் ளது. அவரது உபகரணங்களும் ஆய்வும் பறிமுதல் செய்யப்பட வேண்டுமென நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளதாகவும் அப்பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
-VIdivelli

 

Leave A Reply

Your email address will not be published.