சிவப்பு அறி­வித்­த­லுக்­க­மை­யவே மில்ஹான் கைது செய்­யப்­பட்டார்

இன்­டர்போல் தெரி­விப்பு

0 733

இலங்­கையில் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நப­ராகக் கரு­தப்­படும் ஹயாத்து மொஹம்மட் அஹமட் மில்ஹான், இன்­டர்போல் என்­ற­றி­யப்­படும் சர்­வ­தேச பொலி­ஸினால் வெளியி­டப்­பட்ட சிவப்பு அறி­வித்­தலைத் தொடர்ந்தே மத்­திய கிழக்கில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதனை இன்­டர்போல் தனது இணை­ய­த­ளத்தில் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

மில்­ஹானின் கைதா­னது இலங்கை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் விசா­ர­ணை­களில் முக்­கிய நகர்­வாக கரு­தப்­ப­டு­வ­தாக இன்­டர்­போலின் செய­லாளர் நாயகம் ஜேர்கன் ஸ்டொக் தெரி­வித்­துள்ளார்.

பயங்­க­ர­வாதம் மற்றும் படு­கொ­லைகள்  குறித்த குற்­றச்­சாட்­டுக்­களின் கீழேயே மில்ஹான் தேடப்­பட்டு வந்­த­தாக குறிப்­பிட்­டுள்ள இன்­டர்போல், இவ­ருடன் சேர்த்து மேலும் நான்கு இலங்­கை­யர்கள் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் அவர்­களும் கடந்த வெள்ளிக்­கி­ழமை இலங்­கைக்கு அழைத்­து­வ­ரப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.

உயிர்த்த ஞாயி­றன்று இலங்­கையில் இடம்­பெற்ற தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ராக கரு­தப்­படும், குறித்த கொடூர தாக்­கு­தல்­களை நடாத்­திய தேசிய தெளஹீத் ஜமாஅத் எனும் அமைப்பின் ஸ்தாபகர் சஹ்ரான் ஹாஷிம் எனும் பயங்­க­ர­வா­தியின் கீழ் செயற்­பட்ட குழுவின் ஆயுதப் பிரி­வுக்கு  பொறுப்­பாக இருந்த அஹமட் மில்ஹான் என அறி­யப்­படும் 30 வய­தான ஹயாத்து மொஹம்மட் அஹமட் மில்ஹான், சவூதி அரே­பி­யாவில் கைது செய்­யப்பட்­டி­ருந்த நிலையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இலங்­கைக்கு அழைத்து வரப்­பட்டார்.

அத்­துடன் குறித்த பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் தொடர்பில் மிக அவ­சி­ய­மான, பயங்­க­ர­வாதி சஹ்­ரா­னுக்கு மிக நெருக்­க­மான தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் அனு­ரா­த­புர மாவட்ட தலை­வ­ராக கரு­தப்­படும் அபு­சாலி அபூ­பக்கர் உள்­ளிட்ட மேலும் நால்­வ­ரையும், அஹமட் மில்­ஹா­னுடன் சேர்த்து  சி.ஐ.டி. எனப்­படும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு சவூதி அரே­பி­யாவின்  ஜித்­தாவில் இருந்து இலங்­கைக்கு கைது செய்து அழைத்து வந்­தது. உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் ஒரு­வரின் கீழ்  சவூதி அரே­பி­யா­வுக்கு சென்ற சிறப்பு சி.ஐ.டி. குழு,  ஜித்­தாவில்  அவர்­களைப் பொறுப்­பேற்று வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை 4.00 மணிக்கு கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டைந்­த­தா­கவும்,  அங்­கி­ருந்து குறித்த 5 பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களும்  கொழும்பு – கோட்­டையில் உள்ள  சி.ஐ.டி. தலை­மை­ய­க­மான நான்காம் மாடிக்கு அழைத்து வரப்­பட்டு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

30 வய­தான புதிய காத்­தான்­குடி – 2  எனும் முக­வ­ரியைச் சேர்ந்த  ஹயாத்து மொஹம்மட் அஹமட் மில்ஹான், 34 வய­தான மரு­த­முனை – 3 ஐச் சேர்ந்த மொஹம்மட் மர்சூக் மொஹம்மட் ரிழா, வெல்­லம்­பிட்­டியைச் சேர்ந்த 47 வய­தான  மொஹம்மட் முஹிதீன்  மொஹம்மட் சன்வார் சப்றி,  29 வய­தான காத்­தான்­குடி – 1 ஐச் சேர்ந்த மொஹம்மட் இஸ்­மாயில் மொஹம்மட் இல்ஹாம், அனு­ரா­த­புரம் கெப்­பித்­தி­கொல்­லா­வையைச் சேர்ந்த 37 வய­தான அபு­சாலி அபூ­பக்கர் ஆகிய  ஐந்து பயங்­கர­வாத சந்­தேக நபர்­களே சவூ­தியில் இருந்து இவ்­வாறு  கைது செய்­யப்­பட்டு நாட்­டுக்கு அழைத்து வரப்­பட்­ட­வர்­க­ளாவர்.

இவ்­வாறு சவூ­தியின், ஜித்­தாவில் இருந்து அழைத்து வரப்­பட்ட பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­களில் பிர­தான சந்­தேக நப­ரான அஹமட் மில்ஹான், கடந்த 2018 நவம்பர் மாதம் மட்­டக்­க­ளப்பு – வவு­ண­தீவில் இரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களைக் கொலை செய்­து­விட்டு அவர்­களின் ஆயு­தங்­களை கொள்­ளை­யிட்ட சம்­ப­வத்தின் பிர­தான சந்­தேக நபர் என  சி.ஐ.டி.யினர் ஏற்­க­னவே தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ளனர். அந்த சம்­பவம் தொடர்பில்  பயங்­க­ர­வாதி சஹ்­ரானின்  சார­தி­யான கபூர் மாமா உள்­ளிட்ட இருவர் ஏற்­க­னவே சி.ஐ.டி.யால் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில், மில்­ஹா­னுக்கும் அது குறித்த குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது.

சவூ­தியில் இருந்து அழைத்து வரப்­பட்ட மில்ஹான் எனும் பிர­தான சந்­தேக நபர், தொடர்   தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர் சவூதி அரே­பி­யா­வுக்கு  உம்­ரா­வுக்­காக சென்­றி­ருந்தார்.   தொடர் தற்­கொலை தாக்­கு­தல்கள் அன்று அவர் மீள இலங்­கைக்கு திரும்ப ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த போதும் மீளத் திரும்­ப­வில்லை. அவரின் தலை­மை­யி­லேயே இரண்டாம் கட்ட தாக்­கு­தல்கள் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­த­தாக விசா­ர­ணை­யா­ளர்கள் சந்­தே­கிக்­கின்­றனர். எனினும் அவர் நாடு திரும்­பாத நிலையில் அவ­ரது பயணப் பொதி மட்டும் இலங்­கைக்கு வந்­துள்­ளது.  இந் நிலையில் சவூதி விமான நிலையம் ஒன்றில், 4/21 தாக்­கு­தலை அடுத்து தன்னை சி.ஐ.டி. தேடு­வதை தெரிந்­து­கொன்டு மில்ஹான் சவூ­தி­யி­லேயே ஒளிந்­தி­ருக்க முற்­பட்ட போது அந் நாட்டு பயங்­க­ர­வாத எதிர்ப்பு பிரி­வி­னரால் சர்­வ­தேச பொலி­ஸாரின் தலை­யீட்­டுடன் கைது செய்­யப்­பட்டார். இந் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திக­தியே சவூதி பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மில்ஹான் அப்போது முதல் ஜித்தாவில் உள்ள  பயங்கரவாத தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவரிடம் சவூதி முன்னெடுத்த விசாரணைகளின் கீழும்,  இலங்கையின் சிறப்பு பொலிஸ் குழு அங்கு சென்று நடாத்திய விசாரணைகளிலும் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய ஏனைய நால்வரும் பல்வேறு சந்தர்ப்பங்களில்  சவூதி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.