ஹலால் சான்றிதழ் குறித்த குற்றச்சாட்டுகளை ஆராய சுயாதீன விசாரணை குழுவை அமைக்குக

உலமா சபை கோரிக்கை

0 637

ஹலால் சான்­று­றுதி கவுன்ஸில் ஹலால் சான்­றி­தழ்கள் வழங்­கு­வதன் மூலம் முஸ்­லி­மல்­லாத நுகர்­வோ­ரி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்­ளப்­படும் வரு­மானம் பள்­ளி­வா­சல்கள் நிறு­வு­வ­தற்குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கும் உப­யோ­கப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என ஓமல்பே சோபித தேரர் முறைப்­பாடு செய்­துள்­ளதை உலமா சபை வன்­மை­யாகக் கண்­டிப்­ப­துடன் இது தொடர்பில் ஆராய்­வ­தற்கு சுயா­தீன விசா­ர­ணைக்­கு­ழு­வொன்­றினை நிய­மித்து நாட்டு மக்­க­ளுக்கு உண்மை நிலை­யினைத் தெளி­வு­ப­டுத்­த­வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் உதவிச் செய­லாளர் எம்.எஸ்.எம். தாஸிம் மௌலவி கருத்து தெரி­விக்­கையில்;

மீண்டும் தற்­போது ஹலால் சான்­றி­த­ழுக்கு எதி­ராக கோஷங்கள் எழுப்­பப்­பட்டு வரு­கின்­றன. சுயா­தீன குழு­வொன்­றி­னாலே தற்­போது ஹலால் சான்­றி­தழ்கள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. ஹலால் சான்­றிதழ் வழங்­கப்­ப­டு­வ­தற்கு உலமா சபை வழி­காட்­டல்­களை வழங்­கி­வ­ரு­கி­றது.

இலங்­கையின் உணவு உற்­பத்திப் பொருட்கள் அரபு நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றன. அப்­பொ­ருட்­க­ளுக்கு ஹலால் சான்­றிதழ் கட்­டா­ய­மாகும். தேயிலை ஏற்­று­ம­திக்கும் சில நாடுகள் ஹலால் சான்­றிதழ் கோரு­கி­றது. இலங்­கை­யி­லி­ருந்து பெரும்­பா­லான முஸ்­லி­மல்­லாத பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளுக்குச் சொந்­த­மான நிறு­வ­னங்­களே ஏற்­று­மதி வர்த்­த­கத்தில் ஈடு­பட்­டுள்­ளன. ஹலால் சான்­றிதழ் தடை செய்­யப்­ப­டு­வதன் மூலம் இலங்கை கோடிக்­க­ணக்­கான வெளி­நாட்டு செலா­வ­ணியை இழக்­க­வேண்­டி­யேற்­படும்.

எனவே அர­சாங்கம் ஹலால் சான்­றி­தழின் அவ­சியம் குறித்து மக்­களைத் தெளி­வு­ப­டுத்த வேண்டும். ஹலால் சான்­றிதழ் மூலம் கிடைக்கும் வருமானம் பயங்கரவாதத்துக்கும் பள்ளிவாசல் நிர்மாணத்துக்கும் பயன்படுத்தப் படுகிறது என்ற பிரசாரம் தவறானது என்பதை நிரூபிப்பதற்காக சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.