பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த உலமா சபையின் தலைவர் பொதுபலசேனா அமைப்பைப் பற்றியும் ஞானசார தேரர் பற்றியும் பொய்ச்சாட்சியம் வழங்கியிருக்கிறார். அது பொய்ச் சாட்சியம் என்பதை நிரூபிப்பதற்கு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் முன்னிலையில் சாட்சிமளிப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு பொதுபலசேனா அமைப்பு சபாநாயகர் கரு ஜயசூரியவிடமும் பாராளுமன்ற செயலாளரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பொதுபலசேனா அமைப்பு சபாநாயகருக்கும் பாராளுமன்ற செயலாளருக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
உலமா சபையின் தலைவர் ஐ.எஸ். அமைப்பு இலங்கையில் வேரூன்றுவதற்கு பொதுபலசேனாவின் வெறுப்புப் பேச்சுக்களே காரணம் என்று குற்றம் சுமத்தியுள்ளார். பொதுபலசேனா அமைப்பு 2012 இலே உருவாக்கப்பட்டது. ஆனால் இதற்கு முன்பே அடிப்படைவாதம் இலங்கையில் வேரூன்றியிருந்தது. இவ்வாறு பொய் வாக்கு மூலங்களை வழங்கும் உலமா சபையின் தலைவர் முஸ்லிம் சமூகத்தை வழி நடத்துவதற்குத் தகுதியற்றவர். முஸ்லிம் சமூகம் ஐ.எஸ். அமைப்புடன் மாத்திரமல்ல உலமா சபையின் தலைவர் தொடர்பிலும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலன்த விதானகே ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-Vidivelli