தர்­மச்­சக்­கர ஆடை விவ­காரம்:  கைதான ஏழைப் பெண் பிணையில் விடு­விப்பு

0 830

தர்­மச்­சக்­கரம் பொறிக்­கப்­பட்ட ஆடையை அணிந்­த­தாக குற்­றம்­சாட்­டப்­பட்டு கைது செய்­யப்­பட்ட மஹி­யங்­கனை -ஹஸ­லக பிர­தே­சத்தைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண்ணை  பிணையில் விடு­விக்க மஹி­யங்­கனை நீதிவான் நீதி­மன்றம் நேற்று உத்­தர­விட்­டது. பாத்­திமா மஸா­ஹிமா எனும் குறித்த பெண்ணை ஒரு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சரீரப் பிணையில் செல்ல இதன்­போது மஹி­யங்­கனை நீதிவான் ஏ.ஏ.பி. லக் ஷ்மன் அனு­ம­தித்தார்.

குறித்த பெண் சார்பில் மன்றில் கடந்த தவ­ணையின் போதும் நேற்றும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சரூக் மற்றும் சட்­டத்­த­ரணி நுஸ்ரா ஆகியோர் சார்பில் முன்­வைக்­கப்­பட்ட வாதங்­களை கருத்­திற்­கொண்டும், அதனை மையப்­ப­டுத்தி ஹச­லக பொலிஸார் நீதிவான் நீதி­மன்­றுக்கு பிணை வழங்க முடி­யாத ஐ.சி.சி.பி.ஆர். என­ப்படும் சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்பட்டு சட்­டத்தின் கீழான குற்­றச்­சாட்­டுக்­களை  அகற்­றிக்­கொண்­ட­தாலும்   பிணையில் செல்ல இந்த அனு­மதி வழங்­கப்­பட்­டது.

தர்மச் சக்­கரம் பொறிக்­கப்­பட்ட ஆடையை அணிந்து பெளத்த  மதத்­துக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­தி­யதன் ஊடாக இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையில் இன முறு­கலை ஏற்­ப­டுத்த முயற்­சித்­த­தாக குறித்த பெண் மீது ஹஸ­லக பொலிசார் ஐ.சி.சி.பி.ஆர். சட்­டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்­தி­ருந்­தனர். நேற்­றைய தினம் அந்த குற்­றச்­சாட்டை திருத்­திய ஹச­லக பொலிசார்,  குற்­றச்­சாட்டை தண்­டனை சட்டக் கோவையின் 291 பீ பிரிவின் கீழ் மட்டும் பதிவு செய்­தனர். மத நிந்­தனை தொடர்­பி­லான குறித்த குற்­றச்­சாட்டு பிணை வழங்­கத்­தக்க குற்­றச்­சாட்டு என்­பதை சட்­டத்­த­ர­ணிகள் நீதி­வா­னுக்குத் தெளி­வு­ப­டுத்­திய நிலை­யி­லேயே குறித்த பெண் பிணையில் விடு­விக்­கப்­பட்டார்.

முன்­ன­தாக கடந்த தவ­ணையில்  பொலி­சாரின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க தர்ம சக்­கரம் பொறிக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­பட்ட குறித்த ஆடையை பௌத்த சமய ஆணை­யாளர் திணைக்­க­ளத்­திற்கும் தர நிர்­ணய சபைக்கும் அறிக்­கைக்­காக அனுப்பி வைக்­கவும் நீதி­மன்றம்  அனு­ம­தி­ய­ளித்­தி­ருந்­தது. எனினும் நேற்று அது தொடர்பில் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை.

எனினும், நேற்று மன்­றுக்கு கருத்து தெரி­வித்த ஹச­லக பொலிசார், பெளத்த  அலு­வல்கள் ஆணை­யா­ள­ருக்கும் தர­நிர்­ணய சபைக்கும் அனுப்­பப்­பட்ட ஆடை­யி­லுள்ள வடி­வத்தை ஒப்­பிட்டு நோக்­கு­வ­தற்கு தங்­க­ளிடம் சரி­யான தர்­மச்­சக்­க­ரத்தின் வடிவம் இல்லை என அறி­வித்­துள்­ளனர். ஒவ்­வொ­ரு­வரும் ஒவ்­வொரு வடி­வத்தைச் சொல்­வதால் நாம் சரி­யான முடி­வுக்கு வர­மு­டி­யா­ம­லி­ருப்­பதால் ஆடையின் வடிவம் தொடர்­பான இறுதி முடிவை எடுப்­ப­தற்கு குறிப்­பிட்ட இரு தரப்­பி­னரும் தர்­மச்­சக்­கரம் தொடர்­பான சட்­டமா அதி­பரின் பரிந்­து­ரையை எதிர்­பார்த்­தி­ருப்­ப­தாக தகவல் கிடைத்­துள்­ளது என குறிப்­பிட்­டனர்.

இத­னை­ய­டுத்து சந்­தேக நப­ரான பெண் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள், சட்­டமா அதி­பரின் வேலை வழக்கை தொடர்ந்து நடத்­து­வதா? இல்­லையா? என முடி­வெ­டுப்­பதே!

குறிப்­பிட்ட ஆடை­யி­லி­ருக்கும் வடிவம் தர்­மச்­சக்­க­ரமா ? இல்­லையா என முடி­வெ­டுப்­பது பெளத்த சமய  அலு­வல்கள் ஆணை­யா­ளரே! என சுட்­டிக்­க­ாட­்டினர்.

இத­னைய­டுத்தே பொலிசார் குற்­றச்­சாட்டை திருத்­திய நிலையில் பிணை கோரிக்கை முன்­வைக்­கப்­பட்டு குறித்த பெண்­ணுக்கு பிணை பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டது. குறிப்­பிட்ட வடிவம் பௌத்த மதத்தின் புனித சின்­ன­மா­கிய தர்­ம­சக்­கரம் அல்ல, அது கப்­பலின் சுக்­கா­னா­கு­மென இப்பெண் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணி­களால் நீதி­மன்­றத்தின் கவ­னத்­திற்கு ஏற்கனவே கொண்டு வரப்­பட்­ட­துடன் பிணை வழங்­கு­மாறும் அந்த கோரிக்கையில்  சுட்டிக்காட்டப்பட்டது.

ஆடையிலிருக்கும் வடிவம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக வழக்கை எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதிக்கு இதன்போது நீதிமன்றம் ஒத்திவைத்தது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.