ஆளுநர் பதவியிலிருந்து சாலியும் ஹிஸ்புல்லாஹ்வும் இராஜினாமா

0 700

மேல்­மா­காண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் ஆகியோர் தமது ஆளுநர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­துள்­ளனர். நேற்று காலை தமது  இரா­ஜி­னாமா கடி­தத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு அனுப்பி வைத்­துள்­ளனர். இரு­வ­ரது இரா­ஜி­னாமா கடி­தங்­க­ளையும்  ஜனா­தி­பதி அங்­கீ­க­ரித்­துள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் மற்றும் ஆளு­நர்களுக்கு இடையில் நேற்று காலை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் முக்­கிய கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது. இதன்­போது தற்­போ­தைய முக்­கிய பிரச்­சி­னை­யாக தலை­தூக்­கி­யுள்ள மேல்­மா­காண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் ஆகி­யோரின் பதவி நீக்­கப்­பட வேண்டும் என்ற பெளத்த தேரர்­களின் கோரிக்கை குறித்து ஆரா­யப்­பட்­டது. குறிப்­பாக கடந்த 21ஆம் திகதி பயங்­க­ர­வாத தாக்­கு­தலை அடுத்து மேல்­மா­காண ஆளுநர் ஆசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லா மற்றும் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­துள்ள நிலையில், அவர்­களை பதவி நீக்க வேண்டும் என்ற கடு­மை­யான அழுத்தம் எழுந்­துள்­ளது.

ஆகவே ஜனா­தி­பதி இதற்­கான நட­வ­டிக்­கையை எடுக்க வேண்­டு­மென ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். அதேபோல் பயங்­க­ர­வாத தாக்­குதல் குறித்து விசா­ர­ணைகள் நடத்­தப்­பட இவர்­களின் அதி­காராம் தடை­யாக உள்­ளது என்­பதே மிகப்­பெ­ரிய சிக்­க­லாக அமைந்­துள்­ளது. ஆகவே விசா­ர­ணை­க­ளுக்கு தடைகள் ஏற்­ப­டாத வகையில் செயற்­பட இவர்­களின் பத­வி­களை நீக்க வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். இத­னை­ய­டுத்து ஜனா­தி­ப­திக்கும் ஆளு­நர்­க­ளுக்கும் இடையில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலை அடுத்து மேல்­மா­காண ஆளுநர் ஆசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லா ஆகியோர் தமது ஆளுநர் பத­வியை துறக்கத் தீர்­மானம் எடுத்­துள்­ளனர். அதற்கமைய  ஜனாதிபதி செயலகத்தில் தமது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளனர். இதனை ஜனாதிபதி அங்கீகரித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் உறுதிப்படுத்தியுள்ளதுடன் இவ்விரு ஆளுநர்களின் இராஜினாமா தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.