சிரியா அரச படைகளின் தாக்குதலில் 24 பேர் பலி

0 668

சிரி­யாவில் எதிர்த்­த­ரப்பின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள இட்லிப் மாகா­ணத்தில் பஷர் அல்-­அ­சாத்தின் அர­சாங்கப் படை­யினர் மேற்­கொண்ட தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை 24 ஆக அதி­க­ரித்­துள்­ள­தாக வெள்ளைத் தலைக்­க­வச சிவில் பாது­காப்பு முக­வ­க­ரகம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அறி­வித்­தது.

அர­சாங்கப் படை­யி­னரும் ஈரான் ஆத­ர­வு­ட­னான ஆயு­த­தா­ரி­களும் கான் ஷயக்குன், கப்ர் நப்ஸல், அல்-­ஹொபைத் மற்றும் லதா­மினாஹ் உள்­ளிட்ட இட்லிப் மற்றும் ஹாமா மாகா­ணங்­களின் கிரா­மியப் பகு­தி­களை இலக்கு வைத்­த­தாக அம் முக­வ­க­ரகம் தெரி­வித்­தது.

இத் தாக்­கு­தலில் வைத்­தி­ய­சா­லை­யொன்றும் சுகா­தாரப் பரா­ம­ரிப்பு மத்­திய நிலை­ய­மொன்றும் சேத­ம­டைந்­துள்­ளன.

எவ்­வா­றெ­னினும், வான் தாக்­கு­தல்கள் தொடர்ந்து நடை­பெற்று வரு­வதால் சூனியப் பிர­தே­சத்தில் இறந்­தோரின் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கலாம்.

துருக்­கியும் ரஷ்­யாவும் கடந்த செப்­டம்பர் மாதம் இட்லிப் பகு­தி­யினை சூனியப் பிர­தே­ச­மாக மாற்­று­வ­தற்கு இணக்கம் கண்­டன. இதன் மூலம் தாக்­கு­தல்கள் அங்கு தடை செய்­யப்­படும்.

எவ்­வா­றெ­னினும், சிரிய அர­சாங்கம் சூனியப் பிர­தே­சத்தில் அடிக்­கடி தாக்­குதல் நடத்­து­வதன் மூலம் யுத்த நிறுத்த விதி­மு­றை­களை மீறி வரு­கின்­றது.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது கடு­மை­யான அடக்­கு­மு­றை­யினை அசாத் அர­சாங்கம் மேற்­கொண்­டதைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து ஏற்பட்ட அழிவினை ஏற்படுத்தும் முரண்பாடுகளில் இருந்து தற்போது சிரியா மீண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.