ஒரே தினத்தில் நோன்பு பெருநாள் கொண்டாட வேண்டும்

பாதிக்­கப்­பட்­டோரை கருத்­திற்­கொண்டு வீண் கொண்­டாட்­டங்­களை தவிர்க்­கு­மாறு உலமா சபை வேண்­டுகோள்

0 810

நாட்டில் ஒரே தினத்தில் நோன்புப் பெரு­நாளை கொண்­டாட வேண்­டு­மென அகில் இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வலி­யு­றுத்­தி­யுள்­ளது. அத்­துடன் தாக்­கு­தல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டோரை கருத்­திற்­கொண்டு வீண்  கொண்­டாட்­டங்­களை தவிர்க்­கு­மாறு முஸ்­லிம்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிர­சா­ரக்­குழு செய­லாளர் அஷ்ஷெய்க் எச். உமர்தீன் வெளி­யிட்­டுள்ள நோன்புப் பெருநாள் தொடர்­பான வழி­காட்டல் அறிக்­கையை இங்கு முழு­மை­யாக தரு­கிறோம்:

நாட்டில் நிலவும் அசா­தா­ரண சூழ்­நி­லையைக் கவ­னத்திற் கொண்டு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா முஸ்­லிம்­க­ளுக்கு பின்­வரும் வழி­காட்­டல்­களை வழங்­கு­கின்­றது.

  1. கொழும்பு பெரிய பள்­ளி­வாசல், அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, முஸ்லிம் சமய, பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஆகி­யன இணைந்து பிர­க­ட­னப்­ப­டுத்தும் தினத்­தி­லேயே சகல முஸ்­லிம்­களும் பெரு­நாளைக் கொண்­டா­டு­மாறு வேண்டிக் கொள்­கின்றோம்.
  2. நாட்டின் நிலை­மையைக் கருத்­திற்­கொண்டு பெருநாள் தொழு­கையை மைதா­னங்கள், திடல்கள் முத­லான பொது இடங்­களில் நடத்­து­வதைத் தவிர்க்­கு­மாறும் மஸ்­ஜித்­களில் மாத்­திரம் தொழு­கை­களை நடத்­து­மாறும் வேண்டிக் கொள்­கின்றோம்.
  3. பெருநாள் தொழு­கைக்­காக வருகை தரும்­போது வாக­னங்­களில் வரு­வதை முற்று முழு­தாகத் தவிர்ந்­து­கொள்ளல் வேண்டும். தவிர்க்க முடி­யாத இக்­கட்­டான கட்­டத்தில் வாக­னங்­களில் வருகை தரு­ப­வர்கள் ஒவ்­வொ­ரு­வரும் தனித்­தனி வாக­னங்­களில் வருகை தராமல் பலர் இணைந்து ஒரு வாக­னத்தில் வருதல் வேண்டும்.
  4. பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தினர் தத்­த­மது பிர­தேச பொலிஸ் நிலை­யங்­க­ளுக்­கூ­டாக மஸ்­ஜித்­களின் பாது­காப்பை உறு­தி­செய்து கொள்­ளவும்.
  5. பாதிக்­கப்­பட்ட மக்­களின் நிலையைக் கவ­னத்திற் கொண்டு எதிர்­வரும் பெரு­நாளை அடக்­க­மாக அனுஷ்­டிக்­கு­மாறும் பெரு­நா­ளுக்­காகத் தயா­ரிக்­கப்­படும் உணவுப் பண்­டங்­களை சகோ­தர மதத்­த­வர்­க­ளு­டனும், ஏழை­க­ளு­டனும் பகிர்ந்து கொள்­ளு­மாறும் வீண்­வி­ர­யத்­தையும் ஆடம்­ப­ரத்­தையும் தவிர்த்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக உதவிக் கரம் நீட்டுமாறும் வேண்டுகின்றோம்.
  6. பெருநாளுக்காக பொருட்கள் மற்றும் துணிமணிகள் வாங்குவதற்காக பெண்கள் செல்வதை முடிந்தளவு தவிர்த்து ஆண்களே அவற்றை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.