இவ்வருட ஹஜ் யாத்திரைக்கு செல்ல முடியாத நிலை இருந்தால் அறிவிக்குக

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

0 629

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் தெரிவு செய்­யப்­பட்டு தங்கள் ஹஜ் பய­ணத்தை ஏற்­க­னவே உறு­தி­செய்­துள்ள ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் அண்­மையில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்டு அல்­லது வேறு கார­ணங்­களின் நிமித்தம் பய­ணத்தை மேற்­கொள்­ளாத நிலைமை உரு­வா­கி­யி­ருந்தால் அவ்­வா­றா­ன­வர்கள் உட­ன­டி­யாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு எழுத்து மூலம் அறி­விக்­கும்­படி வேண்­டப்­பட்­டுள்­ளனர். இவ்­வ­ருட ஹஜ் பய­ணத்­துக்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் ஹஜ் பய­ணத்தை  ஏதோ கார­ணங்­களின் நிமித்தம் மேற்­கொள்ள முடி­யா­ம­லி­ருக்கும் ஹஜ் பய­ணிகள் எழுத்து மூலம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு அறி­வித்­தாலே அவர்கள் அடுத்த வருட ஹஜ் கட­மைக்குள் உள்­வாங்­கப்­ப­டு­வார்கள் என அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

மேலும் ஹஜ் கடமை மேற்­கொள்­ள­வுள்ள ஹஜ் பய­ணிகள் பதிவுக் கட்­ட­ண­மாக தலா 25 ஆயிரம் ரூபா முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்குச் செலுத்தி பற்­றுச்­சீட்­டு­களும் பெற்­றுக்­கொண்­டுள்­ளார்கள்.

எனவே, ஹஜ் பய­ணிகள் தாம் பய­ணிக்கும் ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுக்கு ஹஜ் கட்­டணம் செலுத்­தும்­போது குறித்த கட்­ட­ணத்­தொ­கையில் 25 ஆயிரம் ரூபாவை கழித்­து­விட்டு வழங்­கு­மாறு கோரப்­ப­டு­கி­றார்கள். ஹஜ் விண்ணப்பதாரிகளால் செலுத்தப்பட்டுள்ள பதிவுக் கட்டணம் 25 ஆயிரம் ரூபா ஹஜ் முகவர்களுக்கு திணைக்களத்தினால் கையளிக்கப்படும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.