கடந்த ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு பலகத்துறை, பெரியமுல்ல பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து 16 பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு பள்ளிவாசலுக்கு தலா இருவர் வீதம் 16 பள்ளிவாசல் களிலும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு, கொச்சிக்கடை, கட்டான ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட 16 பள்ளிவாசல்களுக்கே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பெரியமுல்ல ஜும்ஆ பள்ளிவாசலின் செயலாளர் இஸ்மதுல் ரஹ்மான் தெரிவித்தார்.
பள்ளிவாசல் நிர்வாகங்கள் கொழும்பு வடக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்தப் பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளது.
-Vidivelli