அபாயாவுடன் பாடசாலைக்கு சென்ற ஆசிரியைகளுக்கு தடை

வேறு பாடசாலைகளுக்கு இடம் மாற்ற நடவடிக்கை

0 650

முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து கட­மைக்கு வரு­வதை எதிர்த்து நேற்று அவி­சா­வ­ளை–­பு­வக்­பிட்­டிய தமிழ் மகா வித்­தி­யா­லய மாண­வர்­களின் பெற்றோர் போராட்டம் நடத்தி பாட­சாலை வாயிலை மூடி நேற்று தடை­களை ஏற்­ப­டுத்­தி­னார்கள்.

பாட­சா­லைக்கு சாரி­ய­ணிந்து வரு­மாறு வலி­யு­றுத்­தி­ய­தை­ய­டுத்து இச்­சம்­பவம் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி­யிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

நேற்று பிற்­பகல் இவ்­வி­வ­காரம் தொடர்­பான கலந்­து­ரை­யாடல் மேல் மாகாண ஆளு­நரின் காரி­யா­ல­யத்தில் இடம்­பெற்­றது. கலந்­து­ரை­யா­ட­லை­ய­டுத்து குறிப்­பிட்ட 10 முஸ்லிம் பட்­ட­தாரி ஆசி­ரி­யை­க­ளையும் உட­ன­டி­யாக மேல் மாகா­ணத்தின் ஏனைய கல்வி வல­யங்­க­ளுக்கு இட­மாற்­று­வ­தாகத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

நேற்று மேல் மாகாண ஆளு­நரின் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் மாகாண கல்விப் பணிப்­பாளர் நோனிஸ், புவக்­பிட்­டிய தமிழ் மகா வித்­தி­யா­லய அதிபர் மற்றும் சம்­பந்­தப்­பட்ட 10 ஆசி­ரி­யைகள் என்போர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

புவக்­பிட்­டிய தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்தில் 800 மாண­வர்கள் கல்வி பயில்­கின்­றனர். இங்கு 41 ஆசி­ரி­யர்கள் கட­மை­யாற்­று­கின்­றனர். இவர்­களில் 12 பேர் முஸ்லிம் ஆசி­ரி­யர்­க­ளாவர். இவர்­களில் ஒருவர் ஆண் ஆசி­ரியர். ஏனைய 11 பேரும் பெண்கள். 11 ஆசி­ரி­யை­களில் ஒருவர் பிர­சவ விடு­மு­றையில் இருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இச்­சம்­பவம் பற்றி தெரி­விக்­கப்­ப­டு­வ­தா­வது, நேற்று முன்­தினம் தமிழ், சிங்­கள பாட­சா­லைகள் ஆரம்­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து குறிப்­பிட்ட 10 ஆசி­ரி­யை­களும் அபாயா அணிந்து கட­மைக்குச் சென்­றுள்­ளனர். அன்று இனிமேல் அபாயா அணிந்து பாட­சா­லைக்கு வர­வேண்­டா­மென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அவர்கள் அபாயா அணிந்து கடமைக்குச் சென்றபோதே பெற்றோர்களால் அவர்களுக்கு பாடசாலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.