நாட்டில் கடந்த 21.04.2019 ஆம் திகதி நடை பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களால் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதை யாவரும் அறிவோம். இந்நிலை மாறி இயல்பு நிலைக்கு திரும்ப பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அனைத்து முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டிக் கொள்கின்றது.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைகளின் போது முஸ்லிம்கள் அனைவரும் தம்மாலான உதவிகளை அனைத்து விதத்திலும் செய்து வந்துள்ளனர்.
அதே போன்று கடந்த வாரம் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக 22.04.2019 ஆம் திகதி முதல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களிடம் நிதி சேகரித்து வருகின்றது.
எனவே, ஒவ்வொரு மஸ்ஜித் நிருவாகிகளும் எதிர்வரும் இரண்டு ஜும்ஆ தினங்களிலும் பணத்தை சேகரித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பின்வரும் கணக்கிலக்கத்திற்கு வைப்பிலிடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.
இந்நிதி சேகரிப்புத் திட்டத்தை அழகிய முறையில் முன்னெடுக்க எமது அனைத்து கிளைகளும் நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு உதவியாக இருக்குமாறும் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
All Ceylon Jamiyyathul Ulama
AC NO 1901005000
Commercial Bank
IBU – Branch
Swift Code – CCEYLKLX
All Ceylon Jamiyyathul Ulama
AC NO 0010112110014
Amana Bank
Main Branch
Swift Code – AMNALKLX