தனியார் கல்வி நிலையத்தில் தீ மாவனெல்லையில் சம்பவம்

0 792

மாவ­னெல்லை புதிய கண்டி வீதியில் நீதி­மன்ற வீதி சந்­தியில் நான்கு மாடி­களைக் கொண்ட கட்­டி­டத்தில் நான்காம் மாடியில் அமைந்­துள்ள சிடி கொலேஜ் என்ற பெயரில் இயங்கி வந்த தனியார் கல்வி நிறு­வனத்தில் நேற்று முன்­தினம் இரவு 9.45 மணி­ய­ளவில் திடீ­ரென்று தீ பர­வி­யி­ருக்­கின்­றது.

இந்த தீ பரவல் கார­ண­மாக அந்தக் கல்வி நிறு­வ­னத்தின் தள­பா­டங்கள், கணி­னிகள் மற்றும் அலு­வ­லக உப­க­ர­ணங்கள் உட்­பட அனைத்தும் முற்­றாக தீயில் கருகி நாச­மா­கி­யுள்­ளன. இதனால் கல்வி நிறு­வ­னத்­திற்கு சுமார் 30 இலட்சம் ரூபா அளவில் இழப்­பேற்­பட்­டி­ருப்­ப­தாக நிறு­வ­னத்தின் உரி­மை­யா­ளர்­களுள் ஒரு­வ­ரான ஏ.எச்.எம். பர்வீஸ் தெரி­விக்­கின்றார்.

இந்த தீ பரவல் சம்­பவம் தொடர்­பாக மாவ­னெல்லை பொலிஸ் குற்­றத்­த­­டுப்பு பிரி­வினர் பல கோணங்­க­ளி­லி­ருந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

இந்த தீச்­சம்­பவம் தொடர்­பாக பர்வீஸ் மேலும் தெரி­விக்­கையில் கூற­ய­தா­வது: – இரவு 10.00 மணி­ய­ளவில் எமது கல்வி நிறு­வ­னத்தில் தீ பர­வி­யி­ருப்­ப­தாக தொலை­பேசி அழைப்­பொன்று வந்­தது. உட­ன­டி­யாக நான் ஸ்தலத்­திற்கு வந்­த­போது அங்கு தீ பற்றிக் கொண்­டி­ருந்­தது. நாம் கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றோம். பின்னர் தீய­ணைப்பு படைக்கு அறி­விக்­கப்­பட்­ட­தோடு அங்கு கூடி­யி­ருந்த இளை­ஞர்­களின் உத­வி­யுடன் தீயை அணைக்க நட­வ­டிக்கை எடுத்தோம் என்றார்.

இந்தக் கல்வி நிறு­வனம் அமைந்­துள்ள 04 ஆம் மாடியின் ஒரு பகு­தியில் பர­விய தீ அதன் ஏனைய பகு­தி­க­ளுக்கும் பர­வி­யதால் அங்­குள்ள பொருட்கள் முற்­றாகத் தீயில் கருகி அழிந்­துள்­ளன. உட­ன­டி­யாக ஸ்தலத்­திற்கு விரைந்த மாவ­னெல்லை பிர­தேச சபையின் தீய­ணைப்பு பிரிவும் பிர­தே­ச­வா­சி­களும் இணைந்து இரவு 11.30 மணி­ய­ளவில் தீயை கட்­டுப்­பாட்டில் கொண்டு வந்­துள்­ளனர்.

அதனால் கட்­டி­டத்தின் கீழ்­மா­டி­க­ளுக்கும் தீ பர­வாமல் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டதால் பாரிய சேதம் தவிர்க்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. மேற்­படி தனியார் வகுப்பு அமைந்­துள்ள கட்­டி­டத்தின் கீழ் மூன்று மாடி­க­ளிலும் வர்த்­தக நிலை­யங்கள் அமைந்­தி­ருப்­பதால் மேல் மாடி­யுடன் தீ கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டதால் இந்த இழப்பு தவிர்­கக்கப்­பட்­டி­ருக்­கின்­றது.

அதே நேரம் இந்த தீ அணைக்­கப்­பட்ட பின்னர் அங்கு நடத்­தப்­பட்­டுள்ள சோத­னை­களின் மூலம் தனியார் வகுப்பு கட்­டி­டத்தின் முன்னால் நுழைவு மாடிப்­ப­டியை கண்­கா­ணிக்கும் வகையில் பொருத்­தப்­பட்­டி­ருந்த சிசி­ரிவி கமரா, பொருத்­தப்­பட்­டி­ருந்த இடத்­தி­லி­ருந்து நீக்­கப்­பட்டு கட்­டி­டத்தின் அடுத்த மூலையில் சுமார் 80 அடி தூரத்தில் போடப்­பட்­டி­ருந்­தமை கண்­ட­றி­யப்­பட்­டி­ருக்­கின்­றது.

அத்­துடன் கம­ராவில் பதி­வா­கின்ற தக­வல்­களை கண்­கா­ணித்து பதிவு செய்­கின்ற டீ.வி.ஆர். அகற்­றப்­பட்டு எடுத்துச் செல்­லப்­பட்­டி­ருக்­கின்­றது. அத்­துடன் கட்­டி­டத்­திற்கு மாடிப்­ப­டி­களால் ஏறி உள் நுழை­கின்ற இடத்­திற்கு அரு­கா­மையில் பிரத்­தி­யே­க­மான இடத்தில் வைக்­கப்­பட்­டி­ருந்த மின்­சார பிறப்­பாக்கி (ஜென­ரேட்டர்) அந்த இடத்தில் இருந்து கட்­டி­டத்தின் அடுத்த முனைக்கு 80 அடி தூரத்­திற்கு இழுத்துச் செல்­லப்­பட்டு இடம் மாற்றம் செய்யப் பட்­டி­ருக்­கின்­றது என்றும் அதன் உரி­மை­யாளர் தெரி­விக்­கின்றார்.

எவ்­வா­றா­யினும் இது கட்­டி­டத்தில் ஏற்­பட்ட மின் ஒழுக்கு கார­ண­மாக ஏற்­பட்ட தீயா அல்­லது ஒரு நாச­கார செய­லாக இருக்­குமா என்ற சந்­தே­கங்­களும் எழுந்­தி­ருக்­கின்­றன. இந்த தீவைப்பு சம்­பவம் சிசி­ரிவி கம­ராவில் பதி­வா­வதை தடுப்­ப­தற்கே அதன் பிர­தான பாக­மான டி.வீ.ஆர். பொருத்­தப்­பட்­டி­ருந்த இடத்தில் சுவரில் இருந்து இழுத்து எடுக்­கப்­பட்டு நீக்கப்பட்டிருக்கின்றது என்றும் உரிமையாளர் மேலும் தெரிவிக் கின்றார்.

தற்போது மாவனெல்லை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இந்த சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. அத்துடன் கடந்த இரண்டு தினங்களாக இங்கு வகுப்புக்கள் எதுவும் நடைபெறாததோடு கல்வி நிலையம் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.