குருநாகல் மாநகர எல்லைக்குள் புர்கா அணிய முற்றாகத் தடை

0 561

நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண நிலையை கருத்­திற்­கொண்டு குரு­நாகல் மாந­கர சபையின் கட்­டுப்­பாட்டில் உள்ள இடங்­க­ளுக்கு முஸ்லிம் பெண்கள் புர்கா ஆடை அணிந்து வரு­வ­தற்கு தடை விதிப்­ப­தாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற கூட்­டத்தில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாந­கர முதல்வர் துஷார சஞ்­ஜீவ விதா­ரண தலை­மையில் மாந­கர சபையில் விசேட கூட்டம் இடம்­பெற்­றது. இதன்­போது நகர முதல்வர் துஷார சன்­ஜீவ, புர்கா தொடர்­பான பிரே­ர­ணையை முன்­வைத்தார். இதற்கு ஆளும் கட்சி (பொ.ஜ.பெ) எதிர்க்­கட்­சிகள் அனை­வ­ரு­மாக ஆத­ரவு தெரி­வித்து பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது.

அண்­மையில் இடம்­பெற்ற மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­த­லுக்கு எதிர்ப்பு தெரி­வித்து மாந­கர சபை உறுப்­பி­னர்கள் கைகளில் கறுப்­புப்­பட்டி அணிந்து சபைக்கு வந்­தி­ருந்­தனர்.

இப்­ப­யங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­துடன் அதில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அனு­தாபம் தெரி­வித்தும் மாந­கர சபை உறுப்­பினர் மொஹம்மத் றிஸ்வி கொண்டு வந்த பிரே­ர­ணையை அனைத்து உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வுடன் நிறை­வேற்­றப்­பட்­டது.

குரு­நாகல் மாந­கர சபையின் கட்­டுப்­பாட்டின் கீழ் உள்ள மாந­கர சபை எல்லை, குரு­நாகல் பிர­தான பஸ் நிலையம், மாந­கர சபையின் கடைத் தொகுதி, மாந­கர சபை பொதுச் சந்தை, நகர நூல் நிலையம் உட்­பட பொது இடங்­களில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து வரு­வது தடை செய்­யப்­ப­டு­வ­தாக நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இச்­ச­பையில் ஐ.தே. கட்­சியைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர் ஒருவரும், மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர் ஒருவர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.