அரசாங்கமே பொறுப்பு

0 593

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸிம்

தெற்­கா­சி­யாவில் இடம்­பெற்ற மிகப்­பெ­ரிய பயங்­க­ர­வாத தாக்­கு­த­லா­கவே இதனை நாம் காண்­கின்றோம். ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் பிரிந்து செயற்­ப­டு­வ­தாலே இவ்­வா­றான நிலை­மை­க­ளின்­போது முன்­கூட்டி தீர்­மா­னங்கள் எடுக்க முடி­யாமல் போயி­ருக்­கின்­றது. அதனால் அர­சாங்­கமே இதற்கு பொறுப்பு கூற­வேண்டும் என எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்றம் நேற்று விசேட அமர்­வாக பிற்­பகல் ஒரு மணிக்கு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் கூடி­யது. இதன்­போது பிர­தான நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்ற பின்னர் நாட்டின் தற்­போ­தைய நிலைமை தொடர்­பாக உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், முப்­பது வரு­டங்­க­ளாக இடம்­பெற்ற கொடிய யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதும் இவ்­வா­றான சம்­ப­வங்­களை இனி­ஒ­ரு­போதும் கணக்­கி­டைக்­காது என்றே அனை­வரும் எண்­ணிக்­கொண்­டி­ருந்­தனர். யுத்தம் முடிந்த 10ஆவது வருட விழாவை எதிர்­வரும் மாதம் கொண்­டாட இருந்தோம். என்­றாலும் 30 வருட யுத்­தத்­திலும் பொது மக்­களை இலக்­கு­வைத்து பயங்­க­ர­வா­திகள் மேற்­கொண்ட எந்­த­வொரு திட்­ட­மிட்ட தாக்­கு­த­லிலும் இந்­த­ளவு பாரிய பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை. புலிகள் அமைப்பும் ஒரே நேரத்தில் பல இடங்­களில் குண்­டு­களை வெடிக்க வைத்­தி­ருக்­கின்­றது. என்­றாலும் இந்­த­ளவு பாரிய அழி­வொன்றை ஏற்­ப­டுத்த அவர்­களால் முடி­ய­வில்லை. தாக்­குதல் தொடர்பில் கருத்து தெரி­விப்­ப­வர்­களின் கருத்தின் பிர­காரம், இதுதான் மக்­களை இலக்­கு­வைத்து தெற்­கா­சி­யாவில் இடம்­பெற்ற மிகவும் கொடூ­ர­மான பயங்­க­ர­வாத தாக்­கு­த­லாகும். 2008 இல் மும்­பாயில் இடம்­பெற்ற தாக்­கு­த­லிலும் இந்­த­ளவு மர­ணங்கள் ஏற்­ப­ட­வில்லை.

மேலும் இந்­த­ளவு மோச­மான முறையில் பயங்­க­ர­வாதம் மீண்டும் எவ்­வாறு தலை­தூக்­கி­யது என்­பதை இந்த சபை ஆராய்ந்து பார்க்­க­வேண்டும். 2005 நவம்பர் மாதம் முதல் தட­வை­யாக நான் நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக நிய­மிக்­கப்­ப­டும்­போது நாட்டில் பெய­ர­ள­வி­லான போர் நிறுத்த ஒப்­பந்தம் ஒன்று இருந்­தது.
என்­றாலும் புலிகள் அமைப்பு பாது­காப்பு பிரிவை இலக்­கு­வைத்து தாக்­கு­தல்­களை நடத்தி நாளாந்தம் படை­யினர் இரண்டு மூன்­று­பேரை கொலை செய்து வந்­தது. அந்த காலத்தில் கெப்­பத்­தி­கொல்­லா­வையில் பஸ் ஒன்றில் வைக்­கப்­பட்ட குண்டு ஒன்றின் கார­ண­மாக பாரி­ய­ளவில் பொது மக்கள் கொல்­லப்­பட்­டனர். கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு புனித அந்­தோ­னியார் தேவா­ல­யத்­துக்கு சென்­ற­போது எனக்கு நினை­வுக்கு வந்­தது, கெப்­பத்­தி­கொல்­லா­வையில் இடம்­பெற்ற சம்­ப­வ­மாகும். கெப்­பத்­தி­கொல்­லாவ சம்­ப­வத்­தினால் அந்த பிர­தே­ச­வா­சி­களால் எமது அர­சாங்­கத்­துக்கு எதி­ராக கடும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டது.

மக்­களின் உயி­ருக்கு பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த முடி­யாத அர­சாங்­கத்­தினால் மக்­க­ளுக்கு எந்த பயனும் இல்லை. 2006 ஜூலை மாதம் நாங்கள் ஏன் யுத்­தத்தை ஆரம்­பித்தோம்? அது புலிகள் அமைப்பு மாவி­லாறு அணைக்­கட்டை அடைத்து அந்த பிர­தே­சத்தில் இருக்கும் அதி­க­மான கிரா­மங்­க­ளுக்கு கிடைக்கும் தண்­ணீரை நிறுத்­தி­ய­தா­லாகும். மனி­தர்­களின் வாழும் உரி­மையை உறு­திப்­ப­டுத்தி சாதா­ரண வாழ்க்­கையை கொண்­டு­செல்ல தேவை­யான சூழலை ஏற்­ப­டுத்­து­வது அர­சாங்கம் ஒன்றின் கட­மை­யாகும். அத­னால்தான் மாவி­லாறு சம்­ப­வத்தில் ஆரம்­பித்து இந்த நாட்டில் பயங்­க­ர­வா­தத்தை இல்­லா­ம­லாக்­கும்­வரை மீளத்­தி­ரும்­பாமல் செயற்­பட்டோம்.

மேலும் 2015 ஜன­வ­ரியில் பூர­ண­மாக பாது­காப்­பான நாட்­டையே நான் புதிய ஜனா­தி­ப­திக்கு ஒப்­ப­டைத்தேன். நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு எந்­த­வ­கை­யிலும் அச்­சு­றுத்­தல்கள் ஏற்­ப­டா­த­வ­கையில் நாங்கள் புல­னாய்­வுத்­து­றையை உறுத்­திப்­ப­டுத்தி இருந்தோம். எமது அண்மை நாடு­கள்போல் வேறு சர்­வ­தேச புல­னாய்வு பிரி­வு­க­ளுடன் இணைந்து அவர்­களின் ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட்டோம். தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­ட­துடன் அது­தொ­டர்­பாக நாங்கள் செயற்­பட்டோம். எமது அர­சாங்­கத்தின் கீழ் இவ்­வா­றா­ன­தொன்று இடம்­பெற எந்­த­வ­கை­யிலும் இட­மி­ருக்­க­வில்லை.
உயிர்த்த ஞாயிறு தினம் இடம்­பெற்ற பேர­ழி­வுக்கு பூர­ண­மாக அர­சாங்­கமே பொறுப்பு கூற­வேண்டும்.

இவ்­வா­றான சம்­ப­வ­மொன்று இடம்­பெ­றலாம் என பொலி­ஸா­ரினால் முன்­கூட்­டியே அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அவ்­வாறு அறி­விக்­கப்­பட்டும் அர­சாங்கம் என்ன செய்­தது? குறைந்­த­பட்சம் அந்த மதஸ்­த­லங்­களின் பிர­தா­னி­க­ளுக்­கா­வது அறி­வித்­ததா? கத்­தோ­லிக்க தேவா­லயம் மற்றும் வேறு கிறிஸ்­தவ ஆல­யங்­களின் பிர­தா­னி­க­ளுக்­கா­வது அறி­வு­றுத்­தி­னார்­களா? அந்த இடங்­க­ளுக்கு விசேட பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டதா? பார்க்­கும்­போது இவை எத­னையும் மேற்­கொள்­ள­வில்லை. என்­றாலும் அர­சாங்­கத்­தினர் இவ்­வாறு அச்­சு­றுத்தல் இருக்கும் இடங்­க­ளுக்குச் செல்­லாமல் அவர்­களை பாது­காத்­துக்­கொண்­டுள்­ளனர். உதிர்த்த ஞாயிறு போன்ற முக்­கிய நிகழ்­வு­க­ளின்­போது வழி­பா­டு­க­ளுக்­காக பொது­வாக அர­சாங்­கத்தின் பிர­தி­நி­திகள் கலந்து கொள்­வார்கள். இம்­முறை மாத்­திரம் எந்த பிர­தி­நி­தியும் ஆல­யங்­களில் இருந்­த­தாக தெரி­ய­வில்லை.

ஞாயிற்­றுக்­கி­ழமை குண்டு வெடித்த பின்னர் நான் அந்த இடங்­க­ளுக்கு சென்­ற­போது, எதிர்க்­கட்சி இந்த சம்­ப­வத்தின் மூலம் அர­சியல் லாபம் தேட முயற்­சிப்­ப­தாக அமைச்சர் ஒருவர் தெரி­வித்தார். நான் புனித அந்­தோ­னியார் ஆல­யத்­துக்கு மாத்­தி­ர­மல்ல, அன்று கெப்­பத்­தி­கொல்­லா­வைக்கும் அவ்­வாறு சென்றேன். நான் இவ்­வாறு கதைப்­பது நாவால் வற்­றாலை கிழங்கு நாட்­டி­ய­வர்போல் அல்ல. மாறாக முடி­வுக்கு கொண்­டு­வர முடி­யாது என தெரி­வித்த பயங்­க­ர­வாத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த அர­சாங்­கத்­துக்கு தலை­மைத்­துவம் வழங்­கிய நப­ரா­கவே கதைக்­கின்றேன்.

இந்த அர­சாங்கம் 2015 அதி­கா­ரத்­துக்கு வந்­தது முதல் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த பாது­காப்பு பிரிவு உறுப்­பி­னர்கள் மற்றும் புல­னாய்வுத் துறை அதி­கா­ரி­களை வேட்­டை­யா­டு­வ­தையே மேற்­கொண்டு வந்­தது. கடந்த 4 வரு­டங்­களில் இவர்கள் எமது எத்­தனை இரா­ணுவ வீரர்­களை சிறை­யி­ல­டைத்­தனர்? முன்னாள் இரா­ணுவ தள­ப­திகள், கடற்­படை தள­ப­திகள், விமா­னப்­படை தள­ப­தி­களை எத்­தனை தடவை குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வுக்கு அழைத்­து­வந்து விசா­ரணை செய்­தி­ருக்­கின்­றனர்?

யுத்த காலத்தில் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் எனது சகோ­தரர் என்ற கார­ணத்­தினால், அவ­ருக்கு வழங்­க­வேண்­டிய அனைத்து வகை­யான துன்­பு­றுத்­தல்­க­ளையும் வழங்­கி­னார்கள். நீதி­மன்­றத்தின் தலை­யீடு கார­ண­மா­கவே அவ­ருக்கு கைவி­லங்கு மாட்ட முடி­யா­மல்­போ­னது. நாட்டில் இருப்­பது ராஜ­பக் ஷ ­வி­னரின் முப்­ப­டைகள் அல்ல, இருப்­பது இலங்­கையின் முப்­ப­டை­க­ளாகும். இலங்கை ஜன­நா­ய­கத்தின் புல­னாய்வுப் பிரி­வாகும். எந்தக் கட்சி ஆட்சி செய்­தாலும் இந்த நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­த­வேண்­டி­யி­ருப்­பது இவர்­க­ளாகும் என நான் தொடர்ந்து அர­சாங்­கத்­துக்கு தெரி­வித்­தி­ருக்­கின்றேன். இதனை இவர்கள் விளங்கிக் கொள்­வ­தில்லை.

இந்த அர­சாங்கம் தற்­போது ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். வெளி­நா­டுகள் கூறு­வதை போன்று இந்த நாட்டை ஆட்சி செய்ய முடி­யாது. எமது நாட்டின் பிரச்­சி­னையை நாமே தீர்த்­துக்­கொள்ள வேண்டும். வெளி­நா­டு­களில் இருந்து வரும் ஆலோ­ச­னை­க­ளுக்­க­மைய பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்­கு­வ­தற்கு இந்த அர­சாங்கம் தயா­ரா­கி­யது. அந்த சட்­டத்தை இல்­லாது செய்­தி­ருந்தால் இன்று என்­ன­வா­கி­யி­ருக்கும்.

இந்த அர­சாங்கம் தமது இரா­ணு வம், புலா­னாய்வு பிரி­வி­னரை கைது செய்து வந்­த­மை­யினால் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எமது நாடு இல­கு­வான இலக்­காக மாறி­யது. உலகில் எந்த நாட்­டிலும் தமது இரா­ணு­வத்­திற்கு எதி­ராக இவ்­வா­றான இடை­யூ­று­களை மேற்­கொண்­ட­தில்லை. இவ்­வா­றான விட­யங்­களை நன்கு கண்­கா­ணித்தே பயங்­க­ர­வா­திகள் தமது திட்­டங்­களை வகுத்­துள்­ளனர்.
ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற சம்­பவம் தொடர்­பாக யாரேனும் அதி­கா­ரியை சிக்­க­வைத்து அர­சாங்கம் தப்­பிக்­கொள்ள முயற்­சிப்­பதை போன்றே தெரி­கின்­றது. இந்த சம்­பவம் 2015ஆம் ஆண்­டி­லி­ருந்து அர­சாங்கம் முன்­னெ­டுத்த செயற்­பா­டுகள் கார­ண­மா­கவே இடம்­பெற்­றுள்­ளது. இதனால் இந்த சம்­பவம் தொடர்­பாக பதவி விலக வேண்­டு­மென்றால் அர­சாங்­கமே பதவி விலக வேண்டும். குறித்த சம்­பவம் தொடர்­பாக புல­னாய்வு பிரி­வினர் முன் கூட்­டியே அறிந்து அது தொடர்­பாக சம்­பந்­தப்­பட்ட இடங்­க­ளுக்கு தகவல் அனுப்­பி­யுள்­ளனர். இது தொடர்­பாக அவர்­களை பாராட்ட வேண்டும். ஆனால் அதற்கு அப்பால் ஒன்றும் நடந்­தி­ருக்­க­வில்லை. எனது பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுக்கு அது தொடர்­பான எச்­ச­ரிக்கை அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்த போது அவர்கள் எனக்கு தெரி­விக்­க­வில்லை. அது தொடர்­பாக நான் முன்­னரே தெரிந்­தி­ருந்தால் நிச்­ச­ய­மாக கர்­தி­னா­லுக்கு அது தொடர்­பாக அறி­வித்­தி­ருப்பேன்.

தேசிய பாது­காப்பு தொடர்­பாக நட­வ­டிக்­கை­யெ­டுக்க வேண்­டிய முறை தொடர்­பாக அர­சாங்­கமே அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­ச­னை­களை வழங்க வேண்டும். ஆனால் அர­சாங்கம் அதனை சரி­வர செய்­ய­வில்லை. இவ்­வா­றான சம்­ப­வங்கள் ஒரே நேரத்தில் நடப்­ப­தில்லை. மாவ­னெல்­லையில் புத்தர் சிலை உடைப்பு சம்­பவம், அந்த பிர­தே­சத்தில் அர­சாங்­கத்தின் முஸ்லிம் அமைச்சர் ஒரு­வரின் நெருங்­கிய உற­வினர் ஒரு­வரை கொலை செய்ய முயற்­சித்­தமை, புத்­த­ளத்தில் வெடி பொருட்கள் மீட்­கப்­பட்­டமை ஆகி­யன ஒன்­றுடன் ஒன்று தொடர்­பு­டை­ய­வையே. இதன்­படி ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற சம்­ப­வமும் எதிர்­பா­ராத வகையில் நடை­பெற்­ற­தல்ல. ஆனால் அர­சாங்கம் அது தொடர்­பாக நட­வ­டிக்­கை­யெ­டுக்­காது தமது பாது­காப்­பையே மேற்­கொண்­டுள்­ளது.
இந்த பயங்­க­ர­வாத தாக்­குதல் 30 வருட யுத்­தத்தின் போது இடம்­பெற்ற தாக்­கு­தல்­களை விடவும் வித்­தி­யா­ச­மா­னது. அன்று பயங்­க­ர­வா­திகள் வெளி­நாட்­ட­வர்­களை இலக்கு வைக்­க­வில்லை.

வெளி­நாட்டில் இருந்து கொண்டு பணத்தை அதற்­காக தேடி­யதால் அவர்கள் அவ்­வாறு செய்­ய­வில்லை. ஆனால் தற்­போது இலங்­கையில் சிவில் மக்­களை மாத்­தி­ர­மன்றி வெளி­நாட்­ட­வர்­க­ளையும் இலக்கு வைத்து நடத்­து­கின்­றனர். இது வெளி­நாட்டு முத­லீ­டு­க­ளுக்கும் பாரிய பாதிப்­பாகும்.
இந்­நி­லையில் தற்­போது இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­களை நிறுத்­து­மாறு அர­சாங்­கத்­திடம் கேட்­டுக்­கொள்­கின்றோம்.

நல்­லாட்சி அர­சாங்கம் மகிழ்ச்­சி­ய­டை­வ­தற்­காக சீ.ஐ.டி.யினர் ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மி­ருந்து வாக்­கு­மூ­லங்­களை பெற்­றுக்­கொள்­கின்­றனர். அவ்­வா­றான வாக்­கு­மூ­லங்­களை பயன்­ப­டுத்­தியே இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக நட­வ­டிக்­கை­யெ­டுக்­கின்­றனர். இவ்­வா­றான நிலைக்குள் செல்­வ­தனை இனி­யா­வது நிறுத்­துங்கள்.

நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த நாங்கள் அந்­தந்த நிறு­வ­னங்­க­ளுக்கு தேவையான உதவிகளை வழங்குவோம். இதேவேளை சட்டத்தை கையிலெடுக்காது பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்புகளை வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இதேவேளை அரசாங்கத்திடம் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றேன். தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு சபைக்கு இந்த தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே தகவல் கிடைத்ததா? அது எப்போது கிடைத்தது. அது தொடர்பாக எடுத்த நடவடிக்கையென்ன? வணாத்துவில்லுவில் வெடி பொருட்கள் மீட்கப்பட் டமை தொடர்பாக விசாரணை நடத்தியது யார்? இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் யார்? இது தொடர்பாக பாதுகாப்பு சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதா? அது தொடர்பாக முன்னெடுத்த நடவடிக்கையென்ன? அது தொடர்பான சந்தேக நபர்களை விடுவிக்க கோரிக்கை விடுத்த நபர் யார்? ஏப்ரல் மாதத்தில் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பாக புலனாய்வு தகவல் உள்ளதா? இந்த சம்பவத்துடன் வெளிநாட்டு சக்தி உள்ளதா? அப்படியென்றால் அது யார்?
எனவே தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 500 பேர் வரை காயமடைந்திருக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் காயமுற்ற வர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.