ஏ.ஆர்.ஏ.பரீல்
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பலியானவர்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் அனுதாபங்களைத் தெரிவிக்கும் வகையில் நாட்டிலுள்ள அனைத்துப்பள்ளிவாசல்களிலும் வெள்ளைக்கொடியினைப் பறக்க விடுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் ‘விடிவெள்ளி’ க்கு கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 300 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகியிருக்கிறார்கள்.
இவர்களில் அநேகர் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தவர்கள். இவ்வாறான செயல்களை இஸ்லாம் எதிர்க்கிறது.இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பலியானவர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
பள்ளிவாசல்களில் வெள்ளைக்கொடியுடன் அனுதாப பதாதைகளையும் காட்சிப்படுத்தும்படி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
vidivelli