யார் பொறுப்பு?

0 910

ஏ.ஆர்.ஏ. பரீல்

இலங்கை வர­லாற்றில் பாரிய இரத்தக் கறை­யொன்று பதிந்­து­விட்­டது. காலத்தால் அழிக்க முடி­யாத அப்­பாவி மக்­களின் இரத்தக் கறை­யது.
நாட்டு மக்­களை மாத்­தி­ர­மல்ல. சர்­வ­தே­சத்­தையும் அதிர்ச்­சியில் உறைய வைத்­துள்ள வெடிப்புச் சம்­ப­வங்கள் அவை. மன­மிரங்கி இறை­வனைப் பிரார்த்­தித்துக் கொண்­டி­ருந்­த­வர்­களும் தங்கள் விடு­மு­றையை நட்­சத்­திர ஹோட்­டல்­களில் கழித்துக் கொண்­டி­ருந்­த­வர்­களும் பலி கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

நாட்டின் ஆட்­சி­யா­ளர்­களை நடுங்க வைத்­துள்ள இந்தக் கொடூர சம்­ப­வங்­களை ஏன் அர­சாங்­கத்­தினால் தடுத்து நிறுத்த முடி­யாமற் போனது? நாட்டின் தேசிய பாது­காப்பு ஏன் பல­வீ­னப்­பட்­டுள்­ளது? என்ற சர்ச்­சையில் மக்கள் குழம்பிப் போயி­ருக்­கி­றார்கள். தங்கள் பாது­காப்பு தொடர்பில் தொடர்ந்தும் அச்சம் கொண்­டுள்­ளார்கள்.

ஒன்று இரண்­டல்ல. முற்­பகல் வேளையில் 6 வெடிப்புச் சம்­ப­வங்கள். பிற்­பகல் வேளையில் 2 வெடிப்புச் சம்­ப­வங்கள். இச்­சம்­ப­வங்­களில் 290 பேர் பலி­யா­கி­யி­ருப்­ப­தா­கவும் 450 க்கும் மேற்­பட்டோர் காயங்­க­ளுக்­குள்­ளாகி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
கொழும்பு, கொச்­சிக்­கடை அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு, கட்­டான, கட்­டு­வப்­பிட்­டிய தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­லயம் ஆகிய ஆல­யங்­க­ளிலும் மற்றும் கொழும்பு ஷங்­கி­ரில்லா, சினமன் கிரேன்ட், கிங்ஸ்­பெரி ஆகிய நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் பயங்­க­ர­வா­திகள் தங்கள் கைவ­ரி­சை­களைக் காட்­டி­யுள்­ளனர்.

தற்­கொலைக் குண்­டு­தா­ரி­களே குண்­டு­களை வெடிக்க வைத்­தி­ருப்­ப­தாக தக­வல்கள் வெளி­யாகிக் கொண்­டி­ருக்­கின்­றன. உயிர்த்த ஞாயிறு தினத்தில் கல்­நெஞ்சம் கொண்ட குண்­டு­தா­ரிகள் அப்­பா­வி­களின் உயிர்­களைப் பலி­கொண்டு உடல்­க­ளைச சிதறச் செய்­தி­ருக்­கி­றார்கள்.

தெஹி­வளை, மிரு­கக்­காட்­சிசாலைக்கு அரு­கி­லுள்ள ஹோட்­ட­லொன்­றிலும் தெமட்­ட­கொடை மஹா­வில வீட்­டுத்­தொ­கு­தி­யிலும் குண்டு வெடிப்புச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. தெமட்­ட­கொடை சம்­ப­வத்தில் பாது­காப்பு பிரி­வினைச் சேர்ந்த மூவர் மற்றும் வீட்டிலிருந்த நால்வர் பலி­கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றார்கள். தெஹி­வளை சம்­ப­வத்தில் இருவர் பலி­யா­கி­யி­ருக்­கி­றார்கள்.

அவ­தா­ன­மாக இருக்க வேண்டும்

முழு நாடும் சர்­வ­தே­சமும் ஆழ்ந்த கவ­லையில் மூழ்­கி­யுள்ள இந்தச் சந்­தர்ப்­பத்தில் மக்கள் அடிப்­ப­டை­வா­தி­க­ளி­ட­மி­ருந்தும் தீவி­ர­வா­தி­க­ளி­ட­மிந்தும் மிகவும் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும். குண்டுத் தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தா­ரிகள் எந்த இனத்தை, எந்த மதத்தைச் சார்ந்­த­வர்கள் என்­றாலும் அவர்­களைத் தேடி கண்­டு­பி­டிப்­பது நாட்டின் பாது­காப்பு பிரிவின் கட­மை­யாகும்.

சமூக வலைத்­த­ளங்களும் மற்றும் ஏனைய தரப்பினராலும் பரப்­பப்­பட்டு வரும் அடிப்­ப­டை­யற்ற தக­வல்­க­ளி­லி­ருந்தும் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும்.
எரியும் நெருப்­புக்கு எண்ணெய் வார்க்­காது அவ்­வா­றான முயற்­சி­களை முறி­ய­டிப்­ப­தற்கு நாம­னை­வரும் இன, மத, பேதங்­க­ளின்றி செயற்­பட வேண்டும். எமது நாட்டின் சமா­தானம், நல்­லி­ணக்கம், தேசிய ஒரு­மைப்­பாடு என்­ப­ன­வற்றை சீர்­கு­லையச் செய்யும் முயற்­சி­க­ளுக்கு துணை போகக்­கூ­டாது. இவ்­வா­றான சம்­ப­வங்கள் மூலம் எமது நாட்டின் பொரு­ளா­தா­ரத்­துக்கு பாரிய சவால்கள் ஏற்­படும் என்­பதை நாம் அனு­பவ ரீதி­யாக உணர்ந்­துள்ளோம். இவ்­வா­றான நிலைமை சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லிம்கள், கிறிஸ்­தவர் என்ற வேறு­பா­டின்றி அனை­வ­ரை­யுமே பாதிக்கும்.

பின்­ன­ணியில் அடிப்­ப­டை­வாத அமைப்பு?

ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற தொட­ரான குண்டு வெடிப்புச் சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் அடிப்­ப­டை­வாத அமைப்பு உள்­ளமை தெரிய வந்­துள்­ளது என இரா­ஜாங்க பாது­காப்பு அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன குறிப்­பிட்­டுள்ளார். ஐ.எஸ். அமைப்பு தொடர்பில் தேசிய புல­னாய்வுப் பிரிவு எச்­ச­ரித்­தி­ருந்­த­துடன் இலங்­கையில் அவர்­க­ளது செயற்­பா­டுகள் குறித்தும் கண்­கா­ணித்து வந்­தது என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­ப­தியின் செய­லாளர் உதய ஆர். சென­வி­ரத்ன, பாது­காப்புச் செய­லாளர் ஹேம­சிறி பெர்­ணான்டோ, வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர் ரவிநாத் ஆரி­ய­சிங்க ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்த கூட்­டத்­திலே இந்தத் தக­வலை வெளி­யிட்­டி­ருக்­கிறார். பல்­வேறு இடங்­களில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வங்­களின் பின்­னணி அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது. கொழும்பு, மட்­டக்­க­ளப்பு, நீர்­கொ­ழும்பு மற்றும் 3 ஹோட்டல்களில் இடம்­பெற்ற தாக்­கு­தல்கள் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றன.

தேசிய புல­னாய்வு பிரிவு மற்றும் அரச புல­னாய்வுப் பிரிவு என்­பன இவ்­வா­றான தாக்­கு­தல்கள் குறித்து ஏற்­க­னவே தக­வல்கள் வழங்­கி­யி­ருந்­தன. ஆனால் இவ்­வா­றான கொடூர சம்­ப­வங்கள் இடம்­பெறும் என எதிர்­பார்க்­க­வில்லை. கிடைக்கப்பெற்ற அனைத்து புல­னாய்வுத் தக­வல்­க­ளுக்கு அமைய பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. மக்­களின் பாது­காப்பு குறித்து அரசு கவனம் செலுத்­த­வில்லை என எவரும் குற்றம் சாட்ட முடி­யாது” என்றும் அவர் கூறி­யுள்ளார்.

ஏற்­க­னவே உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை

பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன புல­னாய்வு தக­வல்­க­ளுக்கு அமை­வாக பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன என்று தெரி­வித்­தாலும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ள கருத்­துகள் மாறு­பட்­ட­வை­யாக அமைந்­துள்­ளன.

“கொழும்பு மற்றும் சில பகு­தி­களில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வங்கள் தொடர்பில் ஏற்­க­னவே தக­வல்கள் கிடைக்கப் பெற்­றி­ருந்தும் அது தொடர்பில் தேவை­யான நட­வ­டிக்­கைகள் முழு­மை­யாக எடுக்­கப்­ப­டாமை, கவனம் செலுத்­தப்­ப­டாமை மிகவும் பார­தூ­ர­மான விட­ய­மாகும் என பிர­தமர் தான் நடத்­திய ஊடக மாநாட்டில் தெரி­வித்­தி­ருந்தார்.

இந்த அபாய அறி­விப்பு தொடர்பில் தனக்கும் மற்றும் அமைச்­சர்­களினதும் கவ­னத்­திற்குக் கொண்டு வரப்­ப­டாமை, உரிய கவனம் செலுத்­தப்­ப­டாமை தொடர்பில் ஆரா­ய­வுள்­ள­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.

இதே­வேளை, தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் தொடர்பில் உள­வுத்­துறை ஏற்­க­னவே பொலி­ஸா­ரையும் எச்­ச­ரித்­தி­ருந்­தது. அந்த எச்­ச­ரிக்கை உதா­சீனம் செய்­யப்­பட்­டதால் இச் சம்­ப­வங்­களைத் தடுக்க முடி­யாமற் போனதா? என்­பது பற்றி ஆரா­ய­வுள்­ள­தாக பொலிஸ் ஊடக பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­க­ரவும் தெரி­வித்­துள்ளார்.

இவ்­வாறு தாக்­குதல் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது என்­பதை வெளிப்­ப­டுத்தி உளவுத் துறை­யி­னரால் ஆவணம் ஒன்று வழங்­கப்­பட்­டதை பாது­காப்புச் செய­லாளர் ஹேம­சிறி பர்­ணான்­டோவும் ஒப்புக் கொண்­டுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

தாக்­குதல் நட­வ­டிக்­கையின் தலை­மை­யகம்

நாட்டில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற குண்டு தாக்­கு­தல்கள் தெமட்­ட­கொடை மஹ­வில வீட­மைப்புத் திட்­டத்தைச் சேர்ந்த வீடொன்­றி­லிருந்தே ஒருங்கிணைக்கப்பட்டதாக பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர். அவ்­வீட்­டி­லி­ருந்து சந்­தே­கத்தின் பேரில் இரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

நேற்று முன்­தினம் பிற்­பகல் பொலிஸார் குறித்த வீட்டை சோத­னைக்­குட்­ப­டுத்த முற்­ப­டுத்­தப்­பட்­ட­போது அங்­கி­ருந்த ஒருவர் குண்­டொன்­றினை வெடிக்கச் செய்­ததால் வீட்டைச் சோத­னை­யிடச் சென்­றி­ருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் மூவர் உட்­பட 7 பேர் பலி­யா­கி­னார்கள்.

கொழும்பில் மூன்று நட்­சத்­திர ஹோட்­டல்­களில் இடம்­பெற்ற குண்டு வெடிப்புச் சம்­ப­வங்கள் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­க­ளின்­போது கிடைக்கப் பெற்ற தக­வல்­க­ளுக்கு அமை­வா­கவே இவ்­வீடு சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டது. அங்கு தற்­கொலை குண்­டு­தாரி குண்டை வெடிக்கச் செய்­த­போது கொங்­கிறீட் உடைந்து வீழ்ந்து அதற்கு அடியில் தற்­கொலை குண்­டு­தா­ரியும் மேலும் 3 பேரும் சிக்கி உயி­ரி­ழந்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

மக்கள் அமை­தி­யாக இருங்கள்

நடை­பெற்று முடிந்த துர­திர்ஷ்ட சம்­ப­வங்கள் தொடர்பில் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு சம்­பந்­தப்­பட்ட பிரி­வு­க­ளுக்கு இட­ம­ளித்து அவர்­க­ளது பொறுப்பில் அனைத்­தையும் ஒப்­ப­டைத்து அனை­வரும் சமா­தா­ன­மா­கவும் தூர நோக்­கு­டனும் செயற்­ப­டும்­ப­டியும் அமை­தி­யாக இருக்­கும்­ப­டியும் அஸ்­கி­ரிய பீட மகா­நா­யக்க தேரர் வர­கா­கொட ஞான­ரத்ன வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யொன்­றி­லேயே இந்த வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்­கையில் மேலும் இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ”கொழும்பு உட்­பட சில பகு­தி­களில் இடம்­பெற்ற துர­திர்ஷ்ட சம்­ப­வங்கள் தொடர்பில் நாம் மிகவும் கவ­லை­ய­டை­கிறோம்.

கத்­தோ­லிக்க மக்­களின் சமய வழி­பா­டுகள் இடம்­பெற்­ற­போது அவர்கள் இலக்கு வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். அநே­கரின் உயிர் பலி­கொள்­ளப்­பட்­டுள்­ளது. நூற்­றுக்­க­ணக்­கானோர் காயங்­க­ளுக்­குள்­ளாகி சிகிச்சை பெற்று வரு­கி­றார்கள். இலங்­கையர் என்ற வகையில் சிங்­க­ளவர், தமிழர், முஸ்­லிம்கள், பர்கர் என்ற வேறு­பா­டின்றி இந்த சம்­ப­வங்­களை வன்­மை­யாக கண்­டிப்போம். காய­ம­டைந்­துள்­ள­வர்­க­ளுக்­காக பிரார்த்­திப்போம். சட்­டத்தை அமுல்­ப­டுத்த பாது­காப்பு பிரி­வி­ன­ருக்கு இட­ம­ளித்து அமைதி காப்போம்’ எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆல­யத்­துக்குள் நுழைந்து குண்டை வெடிக்கச் செய்தார்

‘பெரிய பை (பேக்) ஒன்­றினைத் தோளில் தொங்­க­விட்டுக் கொண்டு ஆல­யத்­துக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அப் பையை தோளி­லி­ருந்து தூக்­கும்­போது பாரிய வெடிப்புச் சப்­தத்­துடன் தீ பர­வி­யது’ என நீர்­கொ­ழும்பு கட்­டு­வப்­பிட்­டிய புனித செபஸ்­தியான் ஆல­யத்தில் இடம்­பெற்ற குண்டு வெடிப்புச் சம்­ப­வத்தை நேரில் கண்ட லக் ஷ்மன் பெரேரா தெரி­வித்­துள்ளார்.

தற்­கொலை குண்­டு­தாரி ஆல­யத்­துக்குள் நுழைந்த சம்­ப­வத்தை அவர் மேலும் விப­ரிக்­கையில்;

‘நான் ஆல­யத்தின் பின் புற­மாக பிர­தான வாசலின் அருகில் இருந்தேன். அப்­போது ஆரா­த­னையின் இறு­தியில் நன்றி உரை நிகழ்த்­தப்­பட்டுக் கொண்­டி­ருந்­தது.

அப்­போது இளைஞர் ஒருவர் ஆல­யத்தின் மத்­திய வாசல் ஊடாக உள்­நு­ழை­வதைக் கண்டேன். அவர் தோளில் பெரிய பை (பேக்) ஒன்றை தொங்­க­விட்டுக் கொண்­டி­ருந்தார். அந்த இளைஞர் ஆல­யத்தின் மத்­திக்குச் சென்றார். அதன் பின் தொங்­க­விட்­டி­ருந்த பையை உய­ரத்தில் தூக்­கினார்.

அப்­போது பாரிய வெடிப்புச் சப்­தத்­துடன் தீ பர­வி­யது. பொது­வாக எவரும் ஆரா­தனை நடக்­கும்­போது இடை நடுவில் ஆல­யத்­துக்குள் நுழை­வ­தில்லை. நாங்கள் இருந்த வாசலின் ஊடாக அவர் நுழைய முற்­பட்­டி­ருந்தால் நாம் அவ­ருக்கு இட­ம­ளித்­தி­ருக்க மாட்டோம்’ என்றார்.

உதவி மத­குரு சஞ்­சீவ அப்­பு­ஹாமி

நீர்­கொ­ழும்பு கட்­டு­வப்­பிட்­டிய ஆல­யத்தின் உதவி மத­குரு சஞ்­சீவ அப்­பு­ஹாமி குண்டு வெடிப்புச் சம்­பவம் தொடர்பில் இவ்­வாறு விப­ரித்தார். ”சம்­பவம் நடை­பெற்­ற­போது நாம் மத­கு­ரு­வா­ன­வர்கள் மூவர் எங்­க­ளது ஆச­னத்தில் அமர்ந்­தி­ருந்தோம். அச்­சந்­தர்ப்­பத்தில் அனைத்து ஆரா­த­னை­களும் நிறை­வுற்று நன்­றி­யுரை நிகழ்த்­தப்­பட்டுக் கொண்­டி­ருந்­தது. அப்­போது நினைத்துப் பார்க்­கவும் முடி­யாத பயங்­கர வெடிச் சப்­த­மொன்று கேட்­டது. எனது காலில் ஏதோ­வொன்று பட்டு காயம் ஏற்­பட்­டது. ஆரா­தனை நடந்து கொண்­டி­ருக்­கும்­போது இச்­சம்­பவம் நிகழ்ந்­தி­ருந்தால் எமது உயி­ருக்கும் ஆபத்து ஏற்­பட்­டி­ருக்கும். நாம் உயிர் பிழைத்­தது பற்றி சந்­தோ­சப்­ப­ட­வில்லை. ஆல­யத்­துடன் மிகவும் நெருங்கித் தொடர்­பு­பட்­டி­ருந்­த­வர்கள் பலி கொள்­ளப்­பட்டு விட்­டார்கள். அது குறித்து நாம் கவ­லைப்­ப­டு­கிறோம்” என்றார்.

ஜனா­தி­பதி உத்­த­ரவு

நடை­பெற்­றுள்ள வெடிப்புச் சம்­ப­வங்கள் பற்றி இவற்றின் பின்­னணி என்ன? இதுவொரு சூழ்ச்­சியா? என்­பதைக் கண்­ட­றி­யு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாது­காப்பு பிரி­வி­ன­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளார். இதற்­காக அனை­வரும் பாது­காப்பு பிரி­வி­ன­ருக்கு ஒத்­து­ழைப்பு நல்க வேண்­டு­மெ­னவும் கோரி­யுள்ளார். இச் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­து­வ­தற்கு அர­சாங்கம் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார். மக்கள் பொய்ப் பிர­சா­ரங்­க­ளுக்கு உட்­பட்டு விடாது ஏமா­றாது அமைதி காக்­கும்­ப­டியும் வேண்­டி­யுள்ளார்.

பிர­தமர் சூளுரை

சம்­ப­வங்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. விசா­ர­ணை­களின் பின்பு இவற்­றுடன் தொடர்­புபட்­ட­வர்கள் எவ­ராக இருந்­தாலும் அவர்களுக்கு தரா­தரம் பாராது ஆகக்­கூ­டிய தண்­டனை வழங்­கப்­ப­டு­மென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

சட்டத்தை நிலை நாட்டுவதற்கு பாதுகாப்பு பிரிவினருக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசு பொறுப்புக்கூற வேண்டும்

தற்கொலைக் குண்டுதாரிகள் தாக்குதல்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார்கள் என அரச உளவுப் பிரிவு சம்பந்தப்பட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு ஏற்கனவே தகவல்களை வழங்கியிருந்தும் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படாமை இன்று விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இதற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட உளவுப் பிரிவினரின் அறிக்கை கவனத்திற் கொள்ளப்படாமையை விமர்சித்திருக்கிறார்.

அரசாங்கத்தின் அசமந்தப் போக்கே 290 உயிர்கள் பலி கொள்ளப்படுவதற்கும் 450 க்கும் மேற்பட்டோர் காயங்களுக்குள்ளா குவதற்கும் காரணமாய் அமைந்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரசிங்க வெறுமனே விமர்சனங்களை வெளியிடுவதுடன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள முடியாது.

‘தேசிய பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பினையும் ஏற்க வேண்டும். தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த அளப்பரிய சேவையாற்றிய புலனாய்வு பிரிவினர் மற்றும் பாதுகாப்பு பிரிவின் முக்கிய தரப்பினரை அவமதித்து கட்டுப்படுத்தியதன் விளைவே அப்பாவி மக்களை பலியெடுத்துள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ குற்றம் சுமத்தியுள்ளார். இந்தப் பின்னணியையும் இச்சந்தர்ப்பத்தில் ஆராய வேண்டியது அரசின் பொறுப்பாகும்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.