நியூஸிலாந்தில் தானியக்க துப்பாக்கிகளை திரும்பப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை

0 678

நியூ­ஸி­லாந்தில் துப்­பாக்­கி­க­ளுக்­கான புதிய சட்­டத்­திற்கு பாரா­ளு­மன்றம் அங்­கீ­காரம் வழங்­கி­யதை அடுத்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கான துப்­பாக்­கிகள் மீளப் பெற்­றுக்­கொள்­ளப்­படும் என எதிர்­பார்ப்­ப­தாக நியூ­ஸி­லாந்து பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

நியூ­ஸி­லாந்தில் துப்­பாக்­கிகள் வைத்­தி­ருப்­ப­தற்­கான புதிய சட்டம் குறித்து பாரா­ளு­மன்றில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டு அனைத்து வகை­யான அரை தானி­யங்கித் துப்­பாக்­கி­க­ளையும் தடை செய்­வ­தற்­கான அங்­கீ­காரம் பெறப்­பட்­டது.

இந்­நி­லையில் குறித்த தடைச் சட்டம் சில நாட்­களில் அமு­லுக்கு வர­வி­ருக்கும் நிலையில் பொலிஸார் இதனை அறி­வித்­துள்­ளனர்.

நியூ­ஸி­லாந்தில் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அந்நூர் பள்­ளி­வாசல் மற்றும் லின்வூட் பகு­தியில் உள்ள பள்­ளி­வாசல் ஆகி­ய­வற்றில் கடந்த மாதம் முஸ்­லிம்கள் தொழு­கையில் ஈடு­பட்­டி­ருந்த போது அங்கு சென்ற மர்ம நபர் துப்­பாக்­கியால் கண் மூடித்­த­ன­மாக சுட்­டதில் 50 பேர் உயி­ரி­ழந்­தனர்.

உல­கையே அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கிய இந்த சம்­ப­வத்தின் முக்­கிய தாக்­கு­தல்­தா­ரி­யான பிரெண்டன் டொரன்ட் கைது­செய்­யப்­பட்டு அவ­ரிடம் விசா­ர­ணையும் இடம்­பெற்று வரு­கி­றது.

இந்­நி­லையில் நேற்று ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த பிரதி பொலிஸ் ஆணையர் மைக்கேல் கிளெமெண்ட், நியூ­ஸி­லாந்தில் துப்­பாக்­கி­களை பதிவு செய்­வ­தற்கு மக்­க­ளுக்கு எந்த சட்­டமும் இல்லை. ஆகையால் எத்­தனை துப்­பாக்­கி­களை மீண்டும் கைய­ளிப்­பார்கள் என்­பதில் தாங்கள் உறு­தி­யாக இல்லை என்றும் கூறினார்.

நியூ­ஸி­லாந்தில் துப்­பாக்­கிகள் வைத்­தி­ருப்­ப­தற்­கான புதிய சட்டம் குறித்து பாரா­ளு­மன்றில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டு அனைத்து வகை­யான அரை தானி­யங்கித் துப்­பாக்­கி­க­ளையும் தடை செய்வதற்கான அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆளுநரின் ஒப்புதலின் பின்னர் இன்னும் சில நாட்களில் இந்த சட்டம் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.