சுத்தமான குடிநீர் வழங்குவதில் தர்காநகர் மக்களுக்கு ஏன் இந்த பாரபட்சம்?

0 830
  • றம்ஸியா அப்ஹாம்
            தர்காநகர்

நாம் உயிர் வாழக் கார­ண­மாக இருக்கும் இந்த பூமி 70% கடலால் சூழப்­பட்­டி­ருந்­தாலும் நமது இலங்கை திரு­நாடோ நாற்­பக்­கமும் கடலால் சூழப்­பட்ட ஒரு தீவாகும்.

இலங்கை “இந்து சமுத்­தி­ரத்தின் முத்து” என்று அழைக்கப் படு­வ­தற்கும் கார­ண­மாக அமை­வது இலங்­கையைச் சூழ கடல்நீர் உள்­ள­மை­யாகும்.

அத்­தி­யா­வ­சிய தேவை­களில் ஒன்­றாக விளங்கும் நீர் என்­பது நிறமோ மணமோ அற்ற தெளி­வான ஒரு திர­வ­மாகும்.  இது அல்­லாஹ்வின் அருட்­கொ­டை­களில் ஒன்­றாகும்.  பொது­வாக ஆரோக்­கி­ய­மான ஒருவர் உணவு இல்­லாமல் குறைந்­தது 5 நாட்கள் கூட உயிர் வாழலாம்.  ஆனால் நீரில் எவ்­வித கலோ­ரி­களோ உயிர் சத்­துக்­களோ இல்­லா­விட்­டாலும் கூட நீரின்றி ஒரு­வரால் ஒரு­நாள்­கூட உயிர்­வாழ முடி­யாது.  மனித உட­லுக்கு அன்­றாடம் சரா­ச­ரி­யாக 6–-8 டம்ளர் தண்ணீர் தேவைப்­ப­டு­கின்­றது.  வெப்­ப­மான சூழ்­நி­லையில் நமது உட­லுக்கு அதி­க­ளவு தண்ணீர் தேவைப்­ப­டு­கின்­றது.  ஒரு மனி­தனின் உடலில் 60% க்கு மேல் நீர் உள்­ளது.  அதில் 2.7 எனும் மிகச்­சி­றிய அளவு குறைந்­தாலும் மனி­தனின் உடலில் டிப்­ரெசன், உடல் எரிச்சல், நடுக்கம், தலை­வலி, மயக்கம், வயிற்­றுப்புண் போன்ற நோய்கள் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புக்கள் உள்­ளன.  இதன் மூலம் நீரின் இன்­றி­ய­மை­யாத நிலைமை தெட்­டத்­தெ­ளி­வாகப் புலப்­ப­டு­கின்­றது.  இவ்­வாறு நீரின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தியே அக்­கா­லத்தில் ஆட்சி செய்த மன்­ன­னான பராக்­கி­ர­ம­பாகு “ஒரு சொட்டு மழை நீரையும் பயன்­ப­டாமல் கடலில் வீணே செல்ல விடக்­கூ­டாது”  என்ற வாச­கத்தைக் கூறி­யி­ருந்தார்.

சுத்­த­மான நீரைப் பெற்றுக் கொள்ளல் என்­பது ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் அடிப்­படை உரி­மை­யாகும்.  ஆனால் தர்­கா­நகர் மக்­க­ளுக்கு அந்த உரிமை கூட இல்லை. தர்­கா­நகர் அனைத்து இயற்கை வளங்­க­ளு­டனும் சுத்­த­மான நீரையும் கொண்ட செழிப்­பான நக­ர­மாகும்.  ஆனால் எமது மக்­களோ அர­சனை நம்பி புரு­ஷனை கைவிட்­டது போல் 1987முதல் தேசிய நீர் வழங்கல் சபையால் வழங்­கப்­பட ஆரம்­பித்த குழாய் நீரை நம்பி தத்­த­மது வீடு­களில் பயன்­ப­டுத்தி வந்த இயற்கை நீரூற்று கிண­று­களை கைவிட்டு விட்­டார்கள்.  இப்­போது இவர்கள் குடி­நீ­ருக்­காக மிகவும் கஷ்­டப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.  தூர இடங்­க­ளுக்குச் சென்றே குடிப்­ப­தற்­கான நீரைப் பெற்றுக் கொள்­கி­றார்கள். ஆனால் குழாய் நீர் வழங்க ஆரம்­பித்த ஆரம்ப காலங்­களில் குழாய் நீர் வழங்­கலில் இப்­ப­டி­யான நெருக்­க­டிகள் இருக்­க­வில்லை.

இப்­போது கோடை காலம், எல்­லோரும் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­யைத்தான் நாமும் எதிர்­நோக்­கு­கிறோம். ஆனாலும் இது ஒரு தற்­கா­லிகப் பிரச்­சி­னை­யாக இருந்­தி­ருந்தால் விட்­டு­வி­டலாம். எனினும்,  இது­வொரு நீண்­ட­கால பிரச்­சி­னை­யாகும்.  இந்த அத்­தி­யா­சிய தேவை­யான நீர் நெருக்­கடி ஆரம்­பித்­த­தி­லி­ருந்து இன்று வரை களுத்­துறை மாவட்­டத்தில் பல அமைச்­சர்­களும் மாகாண சபை, பிர­தேச சபை, நக­ர­சபை அங்­கத்­த­வர்கள் என்று பலர் இருந்­தாலும் இப்­பி­ரச்­சி­னையை தீர்க்க யாரும் முன் வரு­வ­தாக தெரி­ய­வில்லை. இந்த அத்­தி­யா­வ­சிய நீரின் நெருக்­க­டியைத் தீர்த்து வைப்­பா­ரு­மில்லை. பணம் செல­வ­ழித்து நீரையும் வாங்கிக் கொண்டு, நீர் வழங்­கப்­பட்­டதோ, இல்­லையோ நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு சபையால் மாதா மாதம் வழங்­கப்­படும் ரசீ­துக்­கு­ரிய கட்­ட­ணத்­தையும் கட்டிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.  இதில் வேறு வரட்­சி­யான கால­நி­லை­யின்­போது,  உவர் நீர்தான் குழாய் நீராக வரு­கி­றது.

களுத்­துறை மாவட்ட ஏனைய பிர­தே­சங்­க­ளிற்கு இதைப் போல் குழாய் நீர் விநி­யோ­கத்தில் பாரிய தடைகள் இல்லை.  தர்­கா­ந­கரின் பல பகு­தி­க­ளுக்கு குழாய் நீர் வழங்கும் நாட்­களை விட வழங்­கப்­ப­டாத நாட்­களே அதிகம்.  குழாய் நீர் வழங்கும் நாட்­க­ளிலும் கூட அமுக்கம் குறை­வா­கவே வழங்­கப்­ப­டு­கி­றது.  இதனால் நீரை சேமிப்­பதும் ஒரு பிரச்­சி­னை­யா­கவே மாறி­யுள்­ளது.

மார்ச் 22 ஆம் திக­தி சர்­வ­தேச நீர் தினம் நினை­வு­கூ­ரப்­பட்­டது.  நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு சபையும், அமைச்சும் பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு  மண்­ட­பத்தில் வைப­வ­ரீ­தி­யாக இதனை அனுஷ்­டித்­தனர். இந்த வருட  சர்­வ­தேச நீர் தினம் போதிப்­பதே ‘யாவ­ருக்கும் நீர்’ என்­ப­தே­யாகும். இந்தக் கொண்­டாட்­டத்­துடன் விசே­ட­மாக தர்­கா­நகர் நீர் நெருக்­க­டிக்­கான தீர்­வி­னை­யும் கருத்­திற்­கொண்டு அமைச்சர் ரவூப் ஹக்­கீமை அவ­சர நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்­து­கிறோம்.

அநு­ரா­த­புரம், குரு­நா­கலை போன்ற வரண்ட வலய மாவட்­டங்­களில் சிறு­நீ­ரகப் பாதிப்பு, தல­சீ­மியா போன்ற பாரிய நோய்­க­ளுக்கு முகம் கொடுத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.  அதே போன்று எமது தர்கா நகர் மக்­களும் தேசிய நீர் வழங்கல் சபையின் பார­பட்­சத்தால், தொற்று நோய் அல்­லது தொற்றா நோய்­களை எதிர் கொள்­ளக்­கூ­டிய அச்சம் உரு­வா­கி­யுள்­ளது. குறித்த பிர­தே­சத்­திற்குப் பொறுப்­பா­ன­வர்­களும் முன் வந்து உரிய நட­வ­டிக்­கை­களை முன்னெடுக்க வேண்டும்.  தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிடாது மனிதாபிமானத்துடனும் சேவை மனப்பான்மையுடனும் செயற்பட்டால் பொது மக்கள் பயனடைவர்.

சர்வதேச தினங்கள் நினைவு கூரப்படுவது கொண்டாடுவதற்கு மட்டுமல்ல, குறிப்பிட்ட தினங்கள் நினைவு கூரப்படுவதன் மூலம் ஆட்சியில் உள்ளவர்கள் தமது அதிகாரிகளுடன் சேர்ந்து தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மக்களுக்கு சேவை செய்வதற்கே என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.