எட்டு மாதங்களினுள் ஹஜ் சட்டம் நிறைவேறும்

0 624

இந்த அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­காலம் முடி­வு­று­வ­தற்கு இடையில் எதிர்­வரும் எட்டு மாதங்­க­ளுக்குள் இலங்­கையின் ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கென புதிய ஹஜ் சட்ட மூலம் நிறை­வேற்றிக் கொள்­ளப்­படும்.  சட்ட வரைபில் அனைத்து தரப்­பி­ன­ரதும் சிறந்த ஆலோ­ச­னைகள் உள்­வாங்­கப்­படும் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் தன்னைச் சந்­தித்த வை.எம்.எம்.ஏ. பிர­தி­நி­தி­க­ளிடம் தெரி­வித்தார்.

நேற்­றுக்­காலை வை.எம்.எம்.ஏ.யின் தேசிய தலைவர் எம்.என்.எம். நபீல் மற்றும் தேசிய பொதுச்­செ­ய­லாளர் சஹீட் எம். ரிஸ்மி உள்­ள­டங்­கிய குழு­வினர் அமைச்சர் ஹலீமை அமைச்சின் காரி­யா­ல­யத்தில் சந்­தித்து ஹஜ் சட்ட மூலத்­துக்­கான உத்­தேச வரை­பொன்­றினை அமைச்­ச­ரிடம் கைய­ளித்­தனர்.

வை.எம்.எம்.ஏ.யின் ஹஜ் சட்ட வரை­பினைப் பெற்­றுக்­கொண்ட அமைச்சர் அங்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

எமது நாட்டில் ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கென ஒரு தனி­யான சட்டம் இன்­மையால் ஒவ்­வொரு வரு­டமும் பல்­வேறு பிரச்­சி­னைகள் எழு­கின்­றன. கடந்த காலங்­களில் ஹஜ் முக­வர்கள் நீதி­மன்­றுக்கும் சென்­றார்கள். அதனால் இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு பெற்றுக் கொள்­வ­தற்­கா­கவே ஹஜ்­ஜுக்­கென சட்­ட­மொன்று நிறை­வேற்றிக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது’ என்றார்.

வை.எம்.எம்.ஏ. கைய­ளித்த சட்ட வரைபு தொடர்பில் அமைச்சர் மகிழ்ச்சி தெரி­வித்தார். வை.எம்.எம்.ஏ.யின் உத்­தேச சட்ட வரைபில் பல முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்கள் உள்­ள­டங்­கப்­பட்­டி­ருந்­தன. வரைபின் பிரதி, அமைச்சின் செய­லா­ள­ரி­டமும் கைய­ளிக்­கப்­பட்­டது.

அரச ஹஜ் குழு­வுக்கு 10 பேர் நிய­மிக்­கப்­பட வேண்டும். அக்­கு­ழுவில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் உள்­வாங்­கப்­பட வேண்டும். அவரை சபா­நா­ய­கரே நிய­மிக்க வேண்டும். மேலும் ஹஜ் முகவர் சங்­கங்கள் இரண்டின் பிர­தி­நி­திகள் ஒருவர் வீதம் உள்­வாங்­கப்­பட வேண்டும் என உத்­தேச சட்ட வரைபில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஏனைய 7 பேரை முஸ்லிம் விவ­கா­ரத்­துக்குப் பொறுப்­பான அமைச்சர் நிய­மிப்பார். இவர்­களில் மூவர் துறைசார் நிபு­ணர்கள் இவர்­களில் ஒரு பெண்ணும் அடங்­குவார். 2 மார்க்க அறி­ஞர்கள், 2 டாக்­டர்கள் இரு­வரில் ஒருவர் பெண் டாக்டர் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு இதற்கும் மேல­தி­க­மாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நிர்­வாக உறுப்­பி­ன­ராக செயற்­ப­டுவார் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் உத்­தேச சட்ட வரைபில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

ஹஜ் கோட்டா பகிர்ந்­த­ளிக்கும் முறையை ஹஜ் குழுவே தீர்­மா­னிக்கும்.

ஹஜ் முறைப்­பா­டு­களை விசா­ரிப்­ப­தற்கு ஓர் விசா­ர­ணைக்­குழு நிய­மிக்­கப்­பட வேண்டும். முறைப்­பா­டுகள் நிரூ­பிக்­கப்­பட்டால் ஹஜ் முக­வர்­க­ளுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் சிறைத்தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

இவ்விசாரணைக்குழுவுக்கு ஹஜ் யாத்திரிகர்கள் மாத்திரமல்ல ஹஜ் முகவர்களும் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கலாம் என்பன உட்பட மேலும் பல விடயங்கள் உள்ளடங்கப்பட்டுள்ளன.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.