சிரியா, ஈராக் தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகள் தோல்வியில் முடிந்துள்ளன

ஏற்றுக்கொண்டார் டொனால்ட் ட்ரம்ப்

0 560

முடி­வற்ற யுத்­தங்­களைத் தொடர்­வதை விட அமெ­ரிக்­காவின் உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை சீர்­செய்­வதை தனது நிர்­வாகம் விரும்­பு­வ­தாகத் தெரி­வித்­துள்ள அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் சிரியா மற்றும் ஈராக் தொடர்­பான தமது நாட்டின் வெளி­நாட்டுக் கொள்­கை­களை கடந்த சனிக்­கி­ழமை விமர்­சித்தார்.

பழ­மை­வாத அர­சியல் செயற்­பாட்டு மாநாட்டில் இரண்டு மணி நேரம் உரை­யாற்­றிய ட்ரம்ப் தனது உரையில் ஐ.எஸ். அமைப்பு இன்னும் ஓரிரு தினங்­களில் நூறு வீதம் தோற்­க­டிக்­கப்­பட்­டு­விடும் எனத் தெரி­வித்­த­தோடு அமெ­ரிக்கப் படைகள் மீள அழைத்­துக்­கொள்­ளப்­படும் என்­ப­தையும் வலி­யு­றுத்­தினார்.

நாம் அங்கு சிறு குழு­வாக அமெ­ரிக்­கர்­க­ளையும் படை­யி­ன­ரையும் விட்­டு­வைப்போம். எனினும் எமது மக்­களை மீண்டும் எமது நாட்­டிற்கு மீள அழைத்­துக்­கொள்ள வேண்டும். அதற்­கான சரி­யான தருணம் இதுதான் எனவும் மேரி­லேண்டில் நடை­பெற்ற அவ்­வ­மைப்பின் வரு­டாந்த நிகழ்வில் அவர் தெரி­வித்தார்.

நாம் நான்கு மாதங்­க­ளுக்கே சிரி­யாவில் இருப்போம், ஏற்­க­னவே ஐந்து ஆண்­டுகள் இருந்­து­விட்டோம். மத்­திய கிழக்கு தொடர்பில் ட்ரம்ப் தனக்கு முந்­தைய அமெ­ரிக்க அர­சாங்­கங்­களின் கொள்­கை­களை கடு­மை­யாகச் சாடி­ய­தோடு, 2017 ஆம் ஆண்டு தான் முதன்­மு­றை­யாக ஈராக்­கிற்கு விஜயம் செய்­த­போது பாது­காப்புக் கார­ணங்­க­ளுக்­காக தான் பய­ணித்த இரா­ணுவ விமானம் தரை­யி­றங்­கு­வ­தற்கு முன்­ன­தாக விமா­னத்­தி­லி­ருந்த அனைத்து விளக்­கு­களும் அணைக்­கப்­பட்­ட­தனை நினை­வு­கூர்ந்தார்.

நினைத்துப் பாருங்கள், நாம் மத்­திய கிழக்கில் 20 ரில்­லியன் டொலர்­களை செலவு செய்­துள்ளோம். ஆனால் 20 வரு­டங்­களின் பின்னர் எமது விமானத்திலுள்ள விளக்குகளை எரியவிட்டவாறு எம்மால் தரையிறங்க முடியவில்லை. இது எவ்வளவு கேவலம் எனவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.