அரபு மற்றும் பலஸ்தீன கைதிகளில் மருந்துகளைப் பரீட்சிப்பதற்கு மருந்தாக்கல் நிறுவனங்களுக்கு இஸ்ரேல் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாக கடந்த வியாழக்கிழமையன்று இஸ்ரேலியப் பேராசிரியையான நாதெரா ஷல்ஹெளப் வெவேக்கியான் தெரிவித்ததாக பெலிஸ்டீன் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவ நிறுவனங்கள் ஆயுதங்களை பலஸ்தீனச் சிறுவர்கள் மீது பரீட்சிப்பதாகவும் இவ்வாறான சோதனைகளை ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலத்திற்கு அருகிலுள்ள பலஸ்தீனத்தில் மேற்கொள்வதகவும் ஹீப்ரு பல்கலைக்கழக விரிவுரையாளரான அவர் தெரிவித்தார்.
நியூயோர்க் நகரில் அமைந்துள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ஷல்ஹெளப் வெவேக்கியான் ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தவேளையில் தான் அந்தத் தரவுகளைச் சேகரித்ததாகவும் தெரிவித்தார்.
பலஸ்தீனப் பிரதேசம் ஆய்வுகூடமாகவே காணப்படுகின்றது எனத் தெரிவித்த ஷல்ஹெளப் வெவேக்கியான், அரச ஆதரவுடனான பாதுகாப்புக் கூட்டுத்தாபனங்களின் உற்பத்திகள் மற்றும் சேவைகளின் கண்டுபிடிப்பு நீண்ட கால ஊரடங்குச் சட்டம் மற்றும் இஸ்ரேலிய இராணுவத்தினால் பலஸ்தீனர்களின் மீதான அழுத்தங்கள் காரணமாக ஏற்பட்டவையாகும் எனவும் தெரிவித்தார்.
தொந்தரவுக்குள்ளாகும் இடங்கள் – பலஸ்தீன ஜெரூசலத்தின் தொழில்நுட்ப வன்முறைகள் என்ற தலைப்பில் உரையாற்றிய அவர் மேலும் தனது உரையில் எந்த குண்டைப் போடுவது எனப் பரீட்சிக்கின்றனர். வாயுக் குண்டுகளைப் போடுவதா? துர்நாற்றம் வீசும் குண்டுகளைப் போடுவதா என்றும், பிளாஸ்ரிக் சாக்குகளில் போடுவதா அல்லது துணியிலாலான சாக்குகளில் போடுவதா என்றும் துப்பாக்கியினால் தாக்குவதா அல்லது சப்பாத்துக் கால்களினால் உதைப்பதா என்றும் அவர்கள் பரீட்சிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம், பல்வேறு நோய்கள் ஏற்பட்டதன் காரணமாக இஸ்ரேலிய சிறையினுள் மரணித்த பாரிஸ் பரௌட்டின் உடலை வழங்குவதற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
அத்தகைய பரிசோதனைகளுக்கு அவர் உட்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் பிரேத பரிசோதனையில் அது வெளிப்பட்டுவிடும் என இஸ்ரேல் அஞ்சுவதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கருதுகின்றனர்.
இஸ்ரேலிய சுகாதார அமைச்சு மருந்தாக்கல் நிறுவனங்களுக்கு அவர்களது மருந்துகளை பரீட்சிப்பதற்கு கைதிகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதியை வழங்கியதை பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவரான டாலியா இட்ஸிக் ஏற்றுக்கொண்டதாக கடந்த 1997 ஆம் ஆண்டு ஜுலை மாதம் யெதியோத் அஹ்ரநோர்த் என்ற இஸ்ரேலிய செய்தித்தாள் தகவல் வெளியிட்டதோடு, ஐயாயிரம் சோதனைகள் இடம்பெற்றிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
காஸாவிலுள்ள மக்கள் பட்டினிபோட்டு சாகடிக்கப்படுகின்றார்கள், நஞ்சூட்டப்படுகின்றனர், சிறுவர்கள் அவர்களது உள்ளுறுப்புக்களுக்காக கடத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர் என 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெல்ஜியத்தின் ஏ.சீ.ஓ.டி தொழிற்சங்கத்தின் கலாசார செயலாளரான ரேபெர்ச்ட் வெண்டர்பீக்கென் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான பலஸ்தீனத் தூதுவர் றியாத் மன்சூர் ஒரு எச்சரிக்கையினை வெளியிட்டிருந்தார். அதாவது, இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்படும் பலஸ்தீனர்களின் உடல்கள் கண்களின் கருவிழிகள் மற்றும் ஏனைய உடல் பாகங்கள் இல்லாத நிலையிலேயே ஒப்படைக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். ஆக்கிர
மிப்புச் சக்திகளால் உடலுறுப்புக்கள் அறு வடை செய்யப்படுவது மீண்டும் ஒரு தடவை நிரூபண மாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
-Vidivelli