போதையில் தள்ளாடும் இலங்கை

0 8,565
  • எம்.ஐ. அன்வர் (ஸலபி)

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வழி­காட்­டலில் போதைப்­பொருள் ஒழிப்பு ஜனா­தி­பதி செய­ல­ணியின் நெறிப்­ப­டுத்­தலின் கீழ் “போதை­யி­லி­ருந்து விடு­த­லை­யான தேசம்” நிகழ்ச்­சித்­திட்டம் பல்­வேறு கட்­டங்­க­ளாக கடந்த ஜன­வரி மாதம் நாடு­த­ழு­விய ரீதியில் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது. இதற்­க­மைய 2015 ஆம் ஆண்டு முதல் இது­வ­ரையில் போதைப்­பொருள் ஒழிப்பு ஜனா­தி­பதி செய­லணி நிகழ்ச்சி திட்­டங்­களின் கீழ் மாவட்ட, பிர­தேச செய­லாளர் மட்­டங்கள் மற்றும் கிராம சேவகர் பிரி­வுகள் மூலம் குறித்த போதைப்­பொருள் ஒழிப்பு நட­வ­டிக்­கைகள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். தவிர பேண்­தகு பாட­சாலை நிகழ்ச்சி திட்­டங்­களின் மூலமும் அற­நெறிப் பாட­சா­லைகள் மூலமும் நாடு தழு­வி­ய­ரீ­தியில் போதை ஒழிப்பு நிகழ்ச்சி திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

கடந்த ஜன­வரி மாதம் இறுதி வாரம் முழு­வதும் நாட்­டி­லுள்ள சகல பாட­சா­லை­க­ளிலும் ஐந்து நாட்­க­ளாக தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்ட விழிப்­பு­ணர்வு வேலைத்­திட்­டங்­களின் மூலம் நாட­ளா­விய ரீதியில் போதைப்­பொருள் பாவ­னைக்­கெ­தி­ரான பாரிய எதிர்ப்­ப­லை­யொன்று உரு­வா­கி­யி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. குறிப்­பாக பாட­சாலை மாண­வர்கள் மத்­தியில் போதைப்­பொருள் பாவ­னையால் ஏற்­படும் பாதிப்­புக்கள் குறித்த தெளி­வு­களும் விழிப்­பு­ணர்­வு­களும் சென்­ற­டைந்­துள்­ள­மையை காண­மு­டி­கி­றது.

இலங்­கையில் போதைப்­பொருள் பாவனை அதி­க­ரித்து வரு­வ­தா­கவும் அதி­க­ள­வி­லான போதைப் பொருள்கள் பாகிஸ்தான், இந்­தியா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தா­கவும் ஆபத்­தான போதைப் பொருட்­களைக் கட்­டுப்­ப­டுத்தும் அதி­கா­ர­ச­பையின் (National Dangerous Drugs Control Board) அறிக்கை தெரி­விக்­கின்­றது.

அதி­கூ­டிய போதைப்­பொருள் கைப்­பற்­றப்­பட்ட ஆண்­டாக கடந்த 2018 ஆம் ஆண்டு பதி­வா­கி­யுள்­ளது. கடந்த வருடம் முழு­வதும் ஏறத்­தாழ 738 கிலோ 560 கிராம் நிறை­யுள்ள போதைப்­பொ­ருட்கள் பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. இதற்கு முன்னர் 2013 ஆம் ஆண்டே அதி­கூ­டிய போதைப்­பொருள் கைப்­பற்­றப்­பட்ட ஆண்­டாக பேசப்­பட்­டு­வந்­தது. அவ்­வாண்டில் 350 கிலோ 554 கிராம் அளவே அதி­கூ­டிய நிறை­யாக பதி­வா­கி­யி­ருந்­தது.

கடந்­தாண்டில் போதைப்­பொருள் கடத்­த­லுடன் சம்­பந்­தப்­பட்ட 40870 பேர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். இதில் 60% ஆனோர் 30 வய­துக்கு மேற்­பட்­ட­வர்கள், 39% ஆனோர் 20 வயதை நெருங்­கி­ய­வர்­க­ளாவர். கடந்­தாண்டு அதி­கூ­டிய ஹெரோயின் போதைப்­பொருள் கைப்­பற்­றப்­பட்ட ஆண்­டாக பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது. 2018 டிசம்பர் 31 ஆம் திகதி போதைப்­பொருள் தடுப்பு பிரிவின் திடீர் சுற்­றி­வ­ளைப்பின் போதே கொழும்பு, தெஹி­வளை இரு மாடி வீடொன்­றி­லி­ருந்து பதுக்­கி­வைக்­கப்­பட்ட நிலையில் சுமார் 40 கோடி ரூபா பெறு­ம­தி­யான 32 கிலோ எடை­யுள்ள போதைத்தூள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.

அண்­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வொன்றின் பிர­காரம் இலங்­கையில் சுமார் 40 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்­ட­வர்கள் போதைப் பொரு­ளுக்கு நிரந்­த­ர­மாக அடி­மை­யா­கி­யுள்­ள­தாக தேசிய போதைத் தடுப்பு சபை எச்­ச­ரித்­துள்­ளது. குறிப்­பாக, இளை­ஞர்­க­ளி­டையே இப்­பா­வைனை சடு­தி­யாக அதி­கரித்­தி­ருப்­பதை அது சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. கடந்த ஒரு­சில வரு­டங்­களில் சிறு­வர்­க­ளி­டத்தில் குறைந்­தி­ருந்த போதைப்­பொருள் பாவனை மீண்டும் நாட்டில் தலை­தூக்கி வரு­வ­தா­கவும் புகைத்தல் மற்றும் மது­பானம் தொடர்­பான தேசிய அதி­கார சபை தெரி­வித்­துள்­ளது.

போதை­வஸ்­துக்கு அடி­மை­யா­ன­வர்கள் 50% திரு­ம­ண­மா­காத இளை­ஞர்­க­ளாவர். இவர்­களுள் பலர் பல்­க­லை­க்க­ழகம்,  உயர்­தர, சாதா­ர­ண­தர மாண­வர்­க­ளாவர். 45% திரு­ம­ண­மா­ன­வர்கள். இதில் 50%  முதல் 69% ஆன­வர்கள் பாட­சாலை மாண­வர்கள் என சுகா­தார அமைச்சின் அறிக்கை குறிப்­பி­டு­கி­றது. உலக அளவில் சுமார் 140 மில்­லியன் மதுப்­பி­ரி­யர்கள் இருப்­ப­தாக உலக சுகா­தார அமைப்பு மதிப்­பிட்­டுள்­ளது. மதுப்­பா­வ­னையை பொறுத்­த­வ­ரையில் உலக அரங்கில் இலங்­கைக்கு 4 ஆவது இடம் கிடைத்­தி­ருக்­கி­றது. இலங்­கையில் தனி­ம­னித மது பாவனை 4 லீற்­ற­ராக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சமூக வறு­மை­யுடன் கூடிய அவல வாழ்க்­கையை மறக்க குடி ஒரு தீர்­வாகக் கையா­ளப்­ப­டு­கின்­றது. குடி சமூகப் பிரச்­சி­னைக்கு வடி­கா­லா­கின்­றது. இதன் விளை­வாக நகர்­புற குடிசைப் பகு­தி­களில் 43 சத­வீ­த­மா­ன­வர்கள் மது­வுக்கு அடி­மை­யா­கி­விட்­டனர். பெருந்­தோட்டப் பகு­தி­களில் இது 55 சத­வீ­த­மாக உள்­ளது. பல்­க­லைக்­க­ழக அனு­மதி பெற்­ற­வர்­களில் 18 சத­வீதம் பேர் மது­வுக்கு அடி­மை­யாக உள்­ளனர். இது தவிர இதற்­காக அவர்கள் சரா­ச­ரி­யாக செல­வ­ழிக்கும் பணம் நாளொன்­றுக்கு 950 – -1000 ரூபா என்று மதிப்­ப­டப்­பட்­டுள்­ளது.

இலங்­கையின் மொத்தக் குற்றச் செயல்­களில் 38 சத­வீ­த­மா­னவை மது பாவ­னையால் ஏற்­ப­டு­கின்­றது. அதா­வது, போதை­யினால் ஏற்­ப­டு­கின்­றது. கடந்­தாண்டில் நடந்த மொத்த வாகன விபத்தில் இறந்தோர் எண்­ணிக்கை 2800 ஆகும். இதில் 90 சத­வீ­த­மா­னவை மது­வினால் நடந்­துள்­ளது. ஒட்டு மொத்­தத்தில் கொலை, பாலியல் வன்­முறை, விப­சாரம் போன்ற சமூ­க­வி­ரோத குற்­றச்­செ­யல்கள் போதைப்­பொருள் பாவ­னையால் ஏற்­ப­டு­கி­றது.

போதைப்­பொருள் பாவ­னையில் இலங்­கையில் முதலாம் இட­மாக கொழும்பு மாவட்டம் காணப்­ப­டு­கின்­றது. இது 71% ஆக காணப்­ப­டு­கின்­றது. இரண்­டா­வ­தாக கம்­பஹா மாவட்டம் உள்­ளது. இது 22% ஆக காணப்­ப­டு­கின்­றது. மேல் மாகா­ணமே முத­லி­டத்தில் காணப்­ப­டு­கின்­றது. 600,000 இற்கு மேற்­பட்­ட­வர்கள் கஞ்சா பாவிப்­ப­வர்­க­ளாக உள்­ளனர். தவிர நாட்டில் கடந்த ஆண்­டு­களில் ஹெரோயின் போதைப்­பொருள் பாவனை அதி­க­ரித்­துள்­ளது.

தென்­னி­லங்­கையில் பாதாள உல­கத்தின் செயற்­பா­டுகள் மற்றும் கொழும்பு மற்றும் புற­நகர்ப் பிர­தே­ச­மெங்கும் போதைப்­பொருள் பாவனை கார­ண­மாக சமூகம் பேர­ழிவைச் சந்­திக்கும் நிலையே காணப்­ப­டு­கி­றது. ஹெரோயின், கொக்கெய்ன் போன்ற சர்­வ­தேச போதை­வஸ்­துகள் தாரா­ள­மாக புழக்­கத்தில் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யாகும் இளை­ஞர்கள் தமக்கு அவற்றை வாங்­கு­வ­தற்கு பணம் கிட்­டாத போது திருட்டுச் சம்­ப­வங்­க­ளிலும், கொள்­ளை­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கின்­றனர். சில சந்­தர்ப்­பங்களில் அதற்­காக கொலை வெறி­யர்­க­ளாக மாறும் நிலை­கூட ஏற்­ப­டு­கின்­றது.

தென்­னி­லங்­கையைப் போன்று வட- கிழக்­கிலும் போதைப் பொருள் பாவனை கூடிக் கொண்டே போகின்­றது. அதுவும் இளம் பரு­வத்­தி­னரே அதி­க­மாக போதைக்கு அடி­மை­யாகி வரு­கின்­றனர். கிழக்கில் மறை­மு­க­மாக இடம்­பெற்று வந்த போதைப்­பொருள் பாவனை இன்று வெளிப்­ப­டை­யா­கவே இடம்­பெற்­று­வ­ரு­வ­தாக பர­வ­லாக குற்­றம்­சாட்­டப்­பட்டு வரு­கின்­றது. முக்­கி­ய­மாக பாட­சாலை மாண­வர்கள் மத்­தியில் மாவா, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. மற்­றொரு அதிர்ச்சி தரும் தகவல் சில பாட­சாலை மாண­வி­களும் ‘மாவா’ போதை பாவ­னையில் சிக்­கி­யுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

தலை­ந­க­ரிலும் கிராமப் புறங்­க­ளிலும் முக்­கி­ய­மாக பிர­சித்தி பெற்ற பாட­சா­லை­க­ளுக்கு அண்­மித்த இடங்­களில் மறை­மு­க­மான விதத்தில் மாண­வர்­க­ளுக்கு போதை­வஸ்து விற்­பனை செய்­யப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. நாட்டின் எந்தப் பகு­தியை எடுத்துக் கொண்­டாலும் நகரம், கிராமம், வீதிக்கு வீதி­யென சகல இடங்­க­ளிலும் போல் இன்று போதைப் பொருட்கள் கிடைக்கக் கூடிய நிலை­யையே காண­மு­டி­கி­றது.

பொது­வாக இலங்­கையில் ஹெரோயின், கஞ்சா, அபின், மர்­ஜு­வானா ஆகிய நான்கு போதை­தரும் பொருட்­களே பாவ­னை­யி­லுள்­ளன. இலங்­கையில் 12 சத­வீ­த­மான போதைப் பொருள் பாவ­னை­யா­ளர்கள் ஊசி மூலமே போதை­யேற்­று­வ­தாக அறிக்­கை­யொன்று தெரி­விக்­கின்­றது. இவர்கள் குடும்பப் பிரச்­சினை, கல்­வியில் தோல்­வி­ய­டைதல், வேலை­யின்மை, காதல் தோல்வி மற்றும் கூடாத சக­வாசம் போன்ற பல கார­ணங்­க­ளுக்­காக இந்தப் பழக்­கத்­திற்கு அடி­மை­யா­கு­வ­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இலங்­கையில் திறந்த பொரு­ளா­தாரக் கொள்கை, உல்­லாசப் பய­ணி­களின் வருகை போன்ற கார­ணி­களால் நவீன போதைப் பொருட்கள் நாட்­டினுள் பிர­வே­சிக்க ஆரம்­பித்­துள்­ளன. இந்த போதைப்­பொ­ருட்கள் கடந்­தாண்­டு­களில் இலங்­கையில் அதி­க­ளவில் பரவ ஆரம்­பித்­தி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து கொண்­டு­வ­ரப்­படும் ஹெரோயின் 1 முதல் 3 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யா­னது. இதில் 2 கிராமை சுமார் 500 பேர் பாவித்து போதை ஏற்­றிக்­கொள்ள முடி­யுமாம். வெளி­நா­டு­களில் வரு­டாந்தம் இலட்­சக்­க­ணக்­கானோர் இதனால் பாதிக்­கப்­பட்டு தண்­ட­னைக்கும் உள்­ளாக்­கப்­ப­டு­கின்­றனர்.

உலக போதைப்­பொருள் பாவ­னை­யா­ளர்கள் தொடர்­பான அறிக்­கையின் புள்­ளி­வி­ப­ரப்­படி உலகில் 2 கோடி பேர் ஹெரோயின் போதைப்­ப­ழக்­கத்­திற்கு அடி­மை­யா­ன­வர்கள் உள்­ள­னராம். புதி­தாக அப்­பா­வ­னைக்கு அடி­மைப்­ப­டாமல் இளம் சமு­தா­யத்தை பாது­காப்­பது என்ற நோக்­கிலே அர­சாங்­கங்கள் பல வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன. என்­ற­போதும் இலங்­கையில் நடை­மு­றை­யி­லுள்ள சட்­டங்­களைப் பொறுத்­த­வரை இப்­பா­வ­னையை தடுத்து நிறுத்தப் போது­மா­ன­தாக இல்­லை­யெனக் குற்றம் சாட்­டப்­ப­டு­கி­றது. எனவே இதற்கு பொது­மக்­களின் ஒத்­து­ழைப்பு மிக அவ­சி­ய­மா­கி­றது.

போதைப்­பொருள் பாவனை சிறு­ப­ரா­யத்­தி­லேயே ஏற்­பட்டு விடு­வதால் பெற்­றோர்கள் தங்கள் பிள்­ளைகள் விட­யத்தில் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும். குறிப்­பாக அவர்கள் தனி­மையை விரும்­பினால், அடிக்­கடி பணம் கேட்டால், படிப்பில் நாட்டம் குறைந்தால், நடத்­தை­களில் மாற்றம் தெரிந்தால், வழக்­கத்­திற்கு மாறாக நட­வ­டிக்கை தென்­ப­டு­மாயின் அவர்­களை சற்றுக் கூர்ந்து அவ­தா­னிப்­பது சிறந்­தது.

முக்­கி­ய­மாக இன்­றைய இளம் சமு­தா­யத்­தினர் இணை­ய­த­ளத்தை தங்கள் உல­க­மாகக் கருதி வாழ்­வதால் அடிக்­கடி அவர்கள் பார்க்கும் இணைய தளங்கள் குறித்து பெற்றோர் விழிப்­புடன் இருக்­க­வேண்டும். இவற்­றைத்­த­விர சிறு­வ­ய­தி­லி­ருந்தே கற்­றலில் அதிக நாட்­டத்தை ஏற்­ப­டுத்தல், பத்­தி­ரிகை வாசித்தல், விளை­யா­டுதல், இறை­வ­ழி­பாடு செய்தல் போன்ற பழக்­க­வ­ழக்­கங்­களை கற்றுக் கொடுத்தல் சிறந்­தது. இதன் மூலம் எங்கள் குழந்­தை­களை நாமே பாது­காத்துக் கொள்­ளலாம்.

மாறாக, அவர்கள் யாரா­யினும் போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யா­கி­விட்­டார்கள் எனின் மருத்­து­வர்­க­ளி­னதும் உள வளத்­து­ணை­யா­ளர்­க­ளி­னதும் ஆலோ­ச­னைப்­படி செய­லாற்­று­வது அவர்­களை அதி­லி­ருந்து புனர்­வாழ்வு அளிப்­ப­தற்­கான வழியை ஏற்­ப­டுத்திக் கொடுக்கும். இது அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிச் செல்­லாமல் இருக்­கவும் வழி­ய­மைக்கும்.

மேற்­கத்­திய நாடு­களில் போதைப் பழக்­கத்­திற்கு அடி­மை­யா­ன­வர்­களின் எண்­ணிக்கை தற்­போது சத­வி­கி­தத்தின் அடிப்­ப­டையில் குறையத் தொடங்­கி­யுள்ள நிலையில் ஆசிய நாடு­களில் போதைப்­பொ­ரு­ளுக்கு அடி­மை­யா­னோரின் வீதம் அதி­க­மாகிக் கொண்டே செல்­கின்­றமை துர­திஷ்­ட­மா­ன­தாகும். இதற்குக் காரணம் மேலைத்­தேய நாடு­களில் ஏற்­பட்­டுள்­ளதைப் போன்ற விழிப்­பு­ணர்­வுகள் நம் நாடு­களில் இல்­லாமல் போன­மை­யாகும்.

புகைத்தல் பாவ­னைக்கு கடும் கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டி­ருப்­பது போன்று போதைப் பொருள் பாவ­னை­யையும் தடுக்கச் சட்டம் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். இருக்கும் சட்­டத்தை கடு­மை­யாக்­கு­வதன் அவ­சியம் இன்று ஏற்­பட்­டுள்­ளது.

ஒட்­டு­மொத்த சமு­தா­யத்­தையும் பாதிக்­க­வல்ல இந்த போதைப் பொருளை முற்­றி­லு­மாக ஒழிக்கும் நட­வ­டிக்­கையில் உலக நாடுகள் அனைத்தும் முனைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக போதைப் பொருள் கடத்தலுக்காக சில நாடுகள் மரண தண்டனையையும் அமுல்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் மது பாவனையை குறைக்க முற்படும் திணைக்களங்களாக இலங்கை பொலிஸ் திணைக்களம், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, மதுவரித் திணைக்களம், சிறைச்சாலைகள், சுங்கவரித் திணைக்களங்கள், அரச திணைக்களங்கள் காணப்படுகின்றன. இதேபோல் இலங்கையில் போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்காக பிரத்தியேகமாக போதைத் தடுப்பு பணியகம் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாளைய தலைவர்களாக, துறைசார் நிபுணர்களாக, சமூகத்தையும் தேசத்தையும் நல்வழிப்படுத்தும் முன்னோடிகளாக மாறவுள்ள இன்றைய மாணவர்கள் போதைவஸ்து மாபியாக்களின் கோரப்பிடியில் சிக்குண்டு தமது வளமான எதிர்காலத்தை நாசமாக்கிகொண்டிருப்பதை அவதானிக்கமுடிகிறது. ஆறுமணி நேர அற்ப சந்தோஷத்திற்காக தங்கள் வாழ்க்கையை பணயம் வைக்கும் இளைய சமுதாயத்தினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை மீட்பது அனைவரதும் கடமையாகும்.

பொலிஸார், பொது மக்கள் தொடர்பு செயற்பாட்டுத் திட்டத்தின் மூலம் நாடு தழுவிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சமுதாயச் சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். தவறினால் எமது தேசத்தினதும், சமுதாயத்தினதும் எதிர்காலம் பேரழிவுக்குள் தள்ளப்பட்டதாகவே அமைந்து விடும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.