இட்லிப் மீது அரச படையினர் நடத்திய தாக்குதலில் 10 பேர் பலி

0 615

சிரி­யாவின் வட­மேற்கு இட்லிப் மாகா­ணத்தின் குடி­யி­ருப்புப் பிர­தே­சங்கள் மீது அர­சாங்கப் படை­யினர் மேற்­கொண்ட எறி­கணை வீச்சுத் தாக்­கு­தலில் குறைந்­தது பொது­மக்­கள் 10 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­தோடு 34 பேர் காய­ம­டைந்­துள்­ள­தாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை வெள்ளைத் தலைக்­க­வச சிவில் பாது­காப்பு முக­வ­ரகம் தெரி­வித்­தது.

இட்­லிப்பின் கிராமப் பகு­தி­க­ளான கான் ஷெக்கௌன் மற்றும் மாறா அல்-­நூமான் பிர­தே­சங்­க­ளி­லுள்ள சன­நெ­ரி­சல்­மிக்க 13 பகு­தி­களை இலக்கு வைத்து தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­ட­தாக வெள்ளைத் தலைக்­க­வ­சத்­தினர் தெரி­வித்­தனர்.

இந்தத் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­களுள் மூன்று சிறு­வர்­களும் நான்கு பெண்­களும் உள்­ள­டங்­கு­வ­தா­கவும் அவர்கள் தெரி­வித்­தனர்.

தற்­போது இடம்­பெற்­று­வரும் அரச படை­யி­னரின் தாக்­கு­தல்கள் கார­ண­மாக மனிதப் பேர­வலம் ஏற்­படும் என இட்­லிப்­பி­லுள்ள வெள்ளைத் தலைக்­க­வச சிவில் பாது­காப்பு முக­வ­ரகப் பணிப்­பாளர் முஸ்­தபா ஹாஜ் யூஸுப் தெரி­வித்தார்.

கடந்த காலங்­களில் அதிக இரத்தம் சிந்­தப்­பட்­டு­விட்­டது, தாக்­கு­தல்கள் கார­ண­மாக உயி­ரி­ழந்­த­வர்­களுள் அதி­க­மா­ன­வர்கள் பெண்­களும் சிறு­வர்­க­ளு­மாவர் எனவும் அவர் தெரி­வித்தார்.

மோதல் தவிர்ப்பு வல­ய­மான இட்­லிப்பில் அரச படைகள் மேற்­கொண்ட தாக்­கு­தல்கள் கார­ண­மாக இவ்­வ­ருட ஆரம்பம் தொடக்கம் குறைந்­தது 63 பொது­மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­தோடு, நூற்­றுக்­க­ணக்­கானோர் காய­ம­டைந்­தனர்.

2011 ஆம் ஆண்டு ஆரம்­பித்து பாரிய அழி­வு­களை ஏற்­ப­டுத்­திய முரண்­பா­டு­களில் இருந்து சிரியா தற்போதுதான் மீள ஆரம்பித்திருக்கும் நிலையில் ஆர்ப்பாட் டக்காரர்கள் மீது  அரச படைகள் அபரிமிதமான பலத்தைப் பிரயோகித்து நவடிக்கைகளை மேற்கொண்டு வருகின் றனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.