ஊடகப் பணி ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

0 2,068
  • எம்.ஐ அன்வர் (ஸலபி)

இந்த இரு­பத்­தி­யோராம் நூற்­றாண்டில் முழு உல­கையும் தன் விரல் நுனியால் ஆட்­டிப்­ப­டைக்­கி­றது ஊடகம். 19 ஆம் நூற்­றாண்டில் எழுச்­சி­யுறத் துவங்­கிய அதி­வேக தொடர்பு ஊட­கங்­களின் செயற்­பா­டுகள் 21 ஆம் நூற்­றாண்டில் பாரிய வீச்­சுடன் முன்­னே­றி­வ­ரு­கின்­றன. சமூ­கத்­திற்கு தொலை தூரத்­தி­லி­ருந்த ஊடகம் இன்று எமது வீட்டுக் கத­வு­களைத் திறந்து கொண்டு அடுக்­க­ளைக்கும் குளி­ய­ல­றைக்கும் கூட வந்­து­விட்­டது.

தொடர்­ப­றுந்து காணப்­பட்ட மனித சமூ­கத்தை  நாட்டு மக்கள் என்று மட்­டு­மல்­லாது உலக மக்கள் என்ற உற­வு­மு­றையில் கூட பிணைப்பை ஏற்­ப­டுத்­தி­விட்­டது இவ்­வூ­ட­கங்கள். யாரும் யாரு­டனும் எங்­கி­ருந்தும் கணப்­பொ­ழுதில் தொடர்பை ஏற்­ப­டுத்தி தக­வல்­களை அறி­யவும் கருத்துப் பரி­மா­றவும் என பல்­வேறு வசதி வாய்ப்­புக்­களைப் பல பரி­மா­ணங்­களில் இவ்­வூ­ட­கங்கள் அமைத்து தரு­கின்­றன.

ஊட­கங்­களின் மூலம் மனித சமூகம் அள­வில்லா நன்­மை­களை அனு­ப­விப்­பது கண்­கூடு. எனினும் தற்­போ­தைய நிலையை அவ­தா­னித்தால் ஊட­கங்­களின் மூலம் நன்­மை­களை பெறு­வதை விடவும் தீமை­களை பெறு­வதே அதிகம் என்­பதை மறுக்­க­மு­டி­யாது.

முன்பு ஏகா­தி­பத்­திய அர­சுகள் இரா­ணுவப் படை­யெ­டுப்பின் மூலம் பிற நாடு­களை கால­னி­யா­திக்கம் செய்து தமது மதத்­தையும் சிந்­த­னை­யையும் திணித்­தன. வளங்­களை சூறை­யா­டின. ஆனால் இன்று ஊட­கங்கள் மூலம் மக்கள் மத்­தியில் நாடு­களின் ஒத்­து­ழைப்­புடன் மதப் பிர­சா­ரமும் கலா­சார திணிப்பும் வளச் சுரண்­டல்­களும் தங்கு தடை­யின்றி முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

நாட்டின் மக்கள் அபிப்­பி­ரா­யத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­திலும் அர­சுக்­கெ­தி­ராக அவர்­களை ஒன்று திரட்­டு­வ­திலும் பல்­லின மக்கள் வாழும் ஒரு தேசத்தில் இனங்­க­ளுக்­கி­டையே மோதலை ஏற்­படுத்­து­வ­திலும் பாரிய பங்கு வகிப்­பவை ஊட­கங்­களே என்­பதை நாம் மறுக்­க­மு­டி­யாது. மத்­தி­ய­கி­ழக்கு நாடு­களில் அண்­மையில் வெடித்த மக்கள் புரட்­சி­க­ளுக்குப் பின்னால் பாரி­ய­ளவில் ஊட­கங்­களே தொழிற்­பட்­டன என்­பதை நாம் அறிவோம்.

அந்­த­வ­கையில் தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள ஊடக ஒழுங்­கா­னது அதனை உரு­வாக்­கி­ய­வர்­க­ளையே உதறித் தள்­ளி­விட்டு சட்­ட­திட்­டங்கள் உச்­ச­வ­ரம்­புகள் ஒழுக்­க­கோ­வைகள் என்­ப­வற்றை புறந்­தள்­ளி­விட்டு தட்­டிக்­கேட்க எவ­ரு­மில்லை என்ற வகையில் தறி­கெட்டு அலை­கி­றது என்­பது கண்­கூடு. இதன் விளை­வாக முழு உல­கமும் தார்­மீ­கத்­தி­னதும் சத்­தி­யத்­தி­னதும் பலி­பீ­ட­மாக மாறி­வ­ரு­கி­றது.

அந்­த­வ­கையில் புதிய ஊடக ஒழுக்க கோவை­யொன்றை விரைவில் இலங்கை அர­சாங்­கமும் அறி­மு­கப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் பாரா­ளு­மன்ற அங்­கீ­கா­ரத்­திற்­காக எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் உத்­தேசக் கோவை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் வெகு­சன ஊடக மற்றும் தக­வல்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார்.

இவ்­வாறு நாடு­களும் அமைப்­புக்­களும் எப்­படி ஊட­கத்தை ஒரு கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­துக்­கொள்­ளலாம் என்று தலையைப் பிய்த்­துக்­கொண்டு யோசிக்­கின்­றன. இது­பற்றி தேசிய மட்­டத்­திலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் பல­த­ரப்­பட்ட வாதப்­பி­ர­தி­வா­தங்­களும் நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றன.

ஆனால், இஸ்லாம் மனித சமூ­கத்தின் அனைத்து துறை­க­ளுக்­கு­மான வழி­காட்டி  என்ற வகையில் 1400 ஆண்­டு­க­ளுக்கு முன்பே சிறந்த முறையில் பொருத்­த­மான வகையில் உரிய ஊடக செல்­நெ­றியை முன்­கூட்­டியே வகுத்து தந்­து­விட்­டது.  ஊட­கங்கள் கொண்­டி­ருக்­க­வேண்­டிய பண்­புகள், ஒழுக்­கங்கள் குறித்து குர்­ஆனும் ஹதீஸும் மிகச் சிறப்­பாகப் பிரஸ்­தா­பிக்­கின்­றன. அவற்றில் மிகப் பிர­தா­ன­மான ஒரு சில­வற்றை மாத்­திரம் இங்கு நோக்­குவோம்.

  1. கருத்துச் சுதந்­திரம் இஸ்லாம் மனி­த­னுக்கு கருத்துச் சுதந்­தி­ரத்தை வழங்­கி­யுள்­ளது.

“விசு­வா­சி­களே! நீங்கள் அல்­லாஹ்வை அஞ்சிக் கொள்­ளுங்கள். நீங்கள் கூறு­வதை தெளி­வா­கவே கூறுங்கள்” (33-:70) ஒரு முறை நபி (ஸல்) அவர்­க­ளிடம் மிகச் சிறந்த ஜிஹாத் எது என்று வின­வப்­பட்­டது அப்­போது, “தீய ஆட்­சி­யாளன் முன்­னி­லையில் சத்­தி­யத்தை எடுத்­து­ரைப்­ப­தாகும்” என பதில் கூறி­னார்கள். (அபூ-­தாவூத்)

மனி­த­னுக்கு பேசு­வ­தற்கு சுதந்­தி­ரத்தை அளித்த இஸ்லாம் அதற்கு சில ஒழுங்­கு­க­ளையும் விதித்­துள்­ளது. கருத்தை வெளிப்­ப­டுத்­து­கையில் பிறர் உள்­ளமும் உணர்­வு­களும் புண்­ப­டா­தி­ருக்­க­வேண்டும். அவை மதிக்­கப்­பட வேண்டும் என இஸ்லாம் வழி­காட்­டு­கி­றது. மென்­மை­யையும் நளி­ன­மான போக்­கையும் கடைப்­பி­டிக்­கு­மாறு அது உப­தே­சிக்­கி­றது. “நீங்கள் அவர்­க­ளுடன் மிகவும் அழ­கிய வழி­மு­றை­யி­லேயே விவாதம் புரி­யுங்கள்.” (16-:125)

  1. தக­வல்­களை ஊர்­ஜி­தப்­ப­டுத்தல்

ஊட­க­வி­ய­லாளன் தனக்குக் கிடைக்கும் தக­வல்கள் அனைத்­தையும் அவற்றை ஊர்­ஜி­தப்­ப­டுத்திக் கொள்­ளா­த­வரை வெளி­யி­ட­லா­காது.  “உங்­க­ளிடம் ஒரு பாவி ஒரு செய்­தியை எடுத்து வந்தால் (அதனை) தீர்க்­க­மாக விசா­ரித்து தெளிவு பெற்றுக் கொள்­ளுங்கள். அப்­ப­டி­யில்­லாத பட்­சத்தில் நீங்கள் அறி­யா­மையின் கார­ண­மாக ஒரு சமூ­கத்தை பாதிக்கும் முடி­வு­க­ளுக்கு வந்­து­வி­டக்­கூடும். அப்­போது நீங்கள் செய்­ததை நினைத்து கைசே­தப்­ப­டு­வீர்கள்.” (49-:06)

நபி (ஸல்) அவர்கள், “ஒருவன் தனது காதுக்கு கிட்டும் தக­வல்கள் அனைத்­தையும் எடுத்துக் கூறு­வது (அவற்றை ஊர்­ஜி­தப்­ப­டுத்­தாமல் வெளி­யி­டு­வது) அவன் பொய்யன் என்­ப­தற்கு அதுவே போது­மா­ன­தாகும்” என்­றார்கள். (முஸ்லிம்)

மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ் ஓர் ஊட­க­வி­ய­லாளன் ஆதா­ர­மற்ற செய்­திகள், வதந்­திகள் சமு­தா­யத்தில் உலா­வ­ரும்­போது அவற்றை நன்கு ஆராய்ந்து உண்­மை­களை துல்­லி­ய­மாகக் கண்­ட­றிந்து அவற்றை மாத்­தி­ரமே வெளி­யி­ட­வேண்டும் என்­பதை தெளி­வு­ப­டுத்­து­கின்­றது.

  1. இர­க­சி­யங்கள் பாது­காக்­கப்­பட வேண்டும்

பத்­தி­ரிகைச் சுதந்­திரம் அல்­லது தக­வ­ல­றியும் சுதந்­திரம் என்ற போர்­வையில் தனி நபர்­களின் இர­க­சி­யங்­களை பகி­ரங்­கப்­ப­டுத்தும் அரட்டைச் சந்­தை­க­ளாக ஊட­கங்கள் தொழிற்­ப­ட­லா­காது. இஸ்லாம் பிற மனி­தர்­க­ளது  மானத்தை களங்­கப்­ப­டுத்­து­வதை, அந்­த­ரங்­கத்தை வெளிப்­ப­டுத்­து­வதை கடு­மை­யான குற்­ற­மாகப் பார்க்­கி­றது.

“யார் ஒருவர் தன் சகோ­த­ரனின் குறையை (குற்­றத்தை) மறைக்­கி­றாரோ அல்லாஹ் மறு­மையில் அவ­ரது குறையை மறைப்பான்.” (இப்­னு­மாஜா)

  1. நீத­மான செய்தி

தற்­கா­லத்தில் ஊட­கங்கள் வாயி­லாக பெரும்­பாலும் பக்கச் சார்­பான செய்­தி­களே வெளி­யி­டப்­ப­டு­கின்­றன. தமக்கு வேண்­டி­ய­வர்­களின் செய்­தி­க­ளுக்கு மாத்­திரம் முக்­கி­யத்­துவம் கொடுப்­பதும் அவர்­களின் தவ­று­களைக் குறைத்துக் காட்­டு­வதும் போன்ற நீத­மற்ற நடை­மு­றை­கள்தான் ஊட­கத்­து­றையில் கடைப் பிடிக்­கப்­ப­டு­கின்­றன. இஸ்லாம் இப்­போக்கை வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது.

“உங்­க­ளுக்கு ஒரு சமு­தா­யத்தில் இருக்கும் பகை­யா­னது நீங்கள் நீதி­யாக நடந்து கொள்­வ­தற்கு ஒரு போதும் தடை­யாக இருக்க வேண்டாம். நீதி­யாக நட­வுங்கள். அப்­படி நடப்­பது இறை­பக்­திக்கு மிக நெருக்­க­மா­ன­தாகும்.” (05-:08)

  1. ஞானமும் சம­யோ­சி­தமும்

சில தக­வல்­களை உட­னுக்­குடன் வெளி­யி­டு­வது மக்கள் மத்­தியில் பதற்­றத்தை உண்­டு­பண்ணும் என்­றி­ருந்தால் அவற்றை மறைப்­பது அவ­சி­ய­மாகும். ஏனெனில் நாம் தக­வல்­களை பரி­மா­றும்­போதும் நன்­மையை ஏவி தீமையைத் தடுக்­கும்­போதும் அறிவு மற்றும் உள­வியல் அணு­கு­மு­றை­களைப் பின்­பற்­ற­வேண்டும் என்­பது இஸ்­லாத்தின் கட்­ட­ளை­யாகும்.

“நபியே! நீர் உமது இரட்­ச­கனின் பாதையின் பால் (ஹிக்மா) அறிவு ஞானத்தை பிர­யோ­கித்தும் அழ­கிய உப­தே­சங்­களை கொண்டும் அழைப்பு விடுப்­பீ­ராக” (16-125)இங்கு குறிப்­பிடப்படும் ஹிக்மா என்ற சொல் அவர்­க­ளது சூழல் அறிவுப் பின்­னணி போன்ற விரிந்த கருத்­துக்­களை தரு­கி­றது.

  1. மானக்­கே­டான தக­வல்­களைப் பரப்­பு­வதை தவிர்ந்து கொள்ளல்

சமூ­கத்தில் இடம்­பெறும் பாலியல் ரீதி­யான அத்­து­மீ­றல்கள், குற்றச் செயல்கள் தாறு­மா­றாக அம்­ப­லப்­ப­டுத்­தப்­படும் போது குற்றச் செயல்கள் புரி­யும்­விதம், அவற்­றி­லி­ருந்து தப்பும் வழிகள் பற்றி அறி­வ­தற்கும் குற்றச் செயல்­களில் ஈடு­ப­டவும் வழி பிறக்­கின்­றது. எனவே மனி­தர்­க­ளது கற்­பொ­ழுக்கம் தொடர்­பான செய்­தி­களை மிகவும் கவ­ன­மாக ஊட­க­வி­ய­லா­ளர்கள் சமூ­கத்தில் முன்­வைக்க வேண்டும்.

“விசு­வா­சி­க­ளுக்கு மத்தியில் மானக்­கே­டான செயல்­களை பர­ப்ப­வேண்­டு­மென யார் விரும்­பு­கின்­றாரோ! அவர்­க­ளுக்கு இம்­மை­யிலும் மறுமையிலும் நோவினை தரும் வேதனையுண்டு.” (24-19)

  1. அச்சமூட்டும் செய்திகள்

அச்சத்தையும் பதற்றத்தையும் தரும் செய்திகளை ஆராய்ந்து பார்க்காமல் தேவையின்றி பரப்புவது சமூகத்தை பேராபத்தில் கொண்டுபோய் சேர்த்துவிடும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக அல்லது சிறுபான்மையாக இருக்கும் சூழலில் பதற்றமான செய்திகளை பரப்பிவிடுவதனால் சமூகத்தில் அமைதி குலைந்து பீதியும் அச்சமும் நிலவி இறுதியில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம்.

“மேலும் பாதுகாப்பு அல்லது பீதியை ஏற்படுத்தும் செய்தி அவர்களிடம் வந்துவிட்டால் அதை அவர்கள் பரப்பிவிடுகின்றார்கள்.” (4-83)

மேற்கூறப்பட்டவற்றைத் தவிர மேலும் பல ஊடகவியல் ஒழுக்கங்களை அல-குர்ஆன், அஸ்ஸுன்னா அடிப்படையில் நாம் காணமுடியும். எனவேதான் இன்று ஊடக சாதனங்களால் சமூகத்தில் ஏற்படும் தீங்குகளை கட்டுப்படுத்த முடியாது சர்வதேசமே தடுமாறிக்கொண்டிருக்கும் வேளை இஸ்லாம் சிறந்ததொரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கிறது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.