புத்திக கிளப்பியுள்ள பால்மா பீதி

0 857

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­படும் பால் மாவில் பன்றிக் கொழுப்பே இருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

இந்த அதிர்ச்சி தரும் தகவல் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டது. இத்­த­கவல் சாதா­ரண ஒரு­வரால் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.  நாட்டின் அதி­யுயர் பீட­மான பாரா­ளு­மன்­றத்தில் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒரு­வ­ரி­னாலே இவ்­வி­வ­காரம் வெளி­யி­டப்­பட்­டது.

வர்த்­தகம் மற்றும் கைத்­தொழில் பிர­தி­ய­மைச்சர் புத்­திக பத்­தி­ர­ன­வினால் வெளி­யி­டப்­பட்ட இத்­த­க­வலை செவி­ம­டுத்த முஸ்­லிம்கள் அதிர்ச்­சிக்­குள்­ளா­னர்கள். தாம் விரும்பிப் பருகும் வெளி­நாட்டு பால்மா வகைகள் மீது பிர­பல வர்த்­தக நாமங்­களைக் கொண்ட பால்மா மீது அதி­ருப்­தி­ய­டைந்­தார்கள்.

பன்றிக் கொழுப்பு கலந்த பால்­மா­வையா நாங்கள் இது வரை காலம் ருசித்­துப்­ப­ரு­கி­யி­ருக்­கிறோம். எமது பிள்­ளை­க­ளுக்கும் வழங்­கி­யி­ருக்­கிறோம் என்று தங்­க­ளையே நொந்து கொண்­டனர். தாம் அருந்­திய வெளி­நாட்டுப் பால்­மாவை நினைத்த போது அவர்­க­ளுக்கு குமட்­டிக்­கொண்டு வந்­தது.

பிர­தி­ய­மைச்சர் வெளி­யிட்ட கருத்து

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் வாய்­மூல விடைக்­கான நேரத்தில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித ஹேரத் பால்மா விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்­பினார்.

இலங்­கையின் பிர­பல பால்மா இறக்­கு­மதி நிறு­வ­னங்கள் பால்­மாவின் விலையை அதி­க­ரிக்­கு­மாறு அர­சாங்­கத்தைக் கோரி­யி­ருந்­தன. அர­சாங்கம் பால்மா விலை­யினை அதி­க­ரிப்­ப­தற்­கான அனு­ம­தியை குறிப்­பிட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­க­வில்லை. இத­னை­ய­டுத்து அந்­நி­று­வ­னங்கள் இறக்­கு­மதி செய்­யப்­பட்ட பால்மா அடங்­கிய கொள்­க­லன்­களை துறை­மு­கத்­தி­லி­ருந்து கையேற்­க­வில்லை. கொள்­க­லன்கள் துறை­மு­கத்தில் தேங்கிக் கிடந்­தன. நாட்­டுக்குள் பால்மா தட்­டுப்­பாட்­டினை உரு­வாக்கி அதன் மூலம் பால்மா விலையை அதி­க­ரித்துக் கொள்­வதே அந்­நி­று­வ­னங்­களின் இலக்­காக இருந்­தன.

இந்­நி­லை­யிலே பாரா­ளு­மன்­றத்தில் பால்மா விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்­பப்­பட்­டது. கைத்­தொழில் மற்றும் வர்த்­தக பிர­தி­ய­மைச்சர் புத்­திக பத்­தி­ரன பின்­வ­ரு­மாறு பதில் வழங்­கி­யி­ருந்தார்.

பால்­மா­விலை அதி­க­ரிப்பு குறித்து பால்மா இறக்­குமதி நிறு­வ­னங்கள் அடிக்­கடி கோரிக்கை முன்­வைத்து வரு­கின்­றன. பால்மா இறக்­கு­மதி நிறு­வ­னத்தின் உய­ர­தி­கா­ரி­யொ­ருவர் விட­யத்­திற்கு பொறுப்­பான அமைச்­சரைத் தொலை­பே­சி­யூ­டாகத் தொடர்பு கொண்டும் அது தொடர்­பான கோரிக்­கை­களை முன்­வைத்­துள்ளார். என்­றாலும் நாங்கள் பால்மா விலையை அதி­க­ரிப்­பது குறித்து எந்தக் தீர்­மா­னமும் எடுக்­க­வில்லை.

இதே­வேளை, நுகர்வோர் அதி­கார சபைக்கு பால்மா தொடர்பில் முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன. சில பால்மா இறக்­கு­மதி நிறு­வ­னங்கள் பால்மா என்ற பெயரில் இறக்­கு­மதி செய்யும் பொருட்­களில் பன்றி கொழுப்பே இருப்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றது. அத்­தோடு லக்டோ மற்றும் மரக்­கறி எண்ணெய் கலந்த பால்மா இறக்­கு­மதி செய்­வ­தா­கவும் முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன. நியூ­சி­லாந்­தி­லி­ருந்து மட்டும் இவ்­வாறு கொண்டு வரப்­ப­டு­கின்­றன எனவும் அறிய முடி­கின்­றது என பிர­தி­ய­மைச்சர் புத்­திக பத்­தி­ரன இவ்­வாறு விளக்­க­ம­ளித்­துள்ளார். இத்­தனை விட­யங்­களை இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா தொடர்பில் அறிந்­து­வைத்­துள்ள, பொறுப்பு வாய்ந்த, விட­யத்­துக்கும் பொறுப்­பான பிர­தி­ய­மைச்சர் புத்­திக பத்­தி­ரன ஏன் இது தொடர்பில் தீவி­ர­மாக செயலில் இறங்­க­வில்லை என்­பதே இப்­போது எழுந்­துள்ள கேள்­வி­யாகும்.

இந்த அதிர்ச்­சி­யூட்டும் தக­வல்­களை பால்மா நிறு­வ­னங்கள் விலை அதி­க­ரிப்புக் கோரும் வரை இர­க­சி­ய­மாக வைத்­தி­ருந்­தாரா-?

மேலும் அவர் பால்மா உற்­பத்தி தொடர்­பிலும் விளக்­க­ம­ளித்­துள்ளார். கன்று ஈன்ற பசுக்­களில் இருந்தே பால் எடுக்க முடியும். இவ்­வா­றான நிலை­மையில் நியூ­சி­லாந்தில் தற்­போது பிறக்கும் கன்­றுகள் முதல் இறப்­ப­தற்கு இருக்கும் பசுக்கள் மற்றும் மாடுகள் என சக­லத்­திலும் பால்­சு­ரக்­கு­மாக இருந்­தாலும் கூட இலங்­கைக்கு ஒரு­வ­ரு­டத்­திற்கு ஏற்­று­மதி செய்யும் அள­விற்கு பால்­மாவை உற்­பத்தி செய்ய முடி­யாது என்றே அறிக்­கைகள் மூலம் அறி­யக்­கூ­டி­ய­தாக உள்­ளது. ஆனால் உலகின் பல நாடு­க­ளுக்கு நியூ­சி­லாந்து பால்மா ஏற்­று­மதி செய்­வ­தாகக் கூறு­கி­றது.

ஆகவே லக்டோ மற்றும் பன்றி கொழுப்பும் அத்­தோடு லக்­டோவும் மரக்­கறி எண்­ணெயும் கலந்து உற்­பத்தி செய்யும் ஒரு வகை தூளையே நாங்கள் பால்­மா­வாக குடிப்­ப­தா­கவும் எமக்கு முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன. இது தொடர்­பாக வயம்ப பல்­க­லைக்­க­ழ­கத்­தினால் செய்­யப்­பட்ட ஆய்­வ­றிக்கை கிடைத்­துள்­ளது. 1991 ஆம் ஆண்டில் சுகா­தார அமைச்­ச­ராக இருந்த ரேணுகா ஹேரத் வெளி­யிட்ட வர்த்­த­மானி அறி­வித்­தலில் பால்மா என்­பது பசு­விடம் இருந்தோ அல்­லது எரு­து­வி­ட­மி­ருந்தோ பெற்றுக் கொள்­ளப்­பட்ட பாலி­னூ­டாக உற்­பத்தி செய்­யப்­பட்­ட­தாக இருக்க வேண்­டு­மென குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான நிலையில் பால்­மாவில் பன்றிக் கொழுப்பு அல்­லது கலப்­ப­டங்கள் இருந்தால் அது பார­தூ­ர­மா­ன­தாகும்.

பால்­மாவில் கலப்­ப­டங்கள் இருக்­கின்­ற­னவா என்­பது பற்றி ஆராய்­வ­தற்கு ஆய்­வு­கூட வச­தி­களைக் கொண்ட தனியார் நிறு­வ­ன­மொன்­றுக்கு நுகர்வோர் அதி­கார சபை பால்மா மாதி­ரி­களை வழங்­கி­யி­ருந்­தது. அதன்­படி அந்தப் பொறுப்­பினை அந்­நி­று­வனம் ஏற்­றி­ருந்­தது. ஆனால் இரண்டு மூன்று வாரங்­களின் பின்பு அந்த நிறு­வனம் தங்­களால் பால்மா ஆய்­வு­களை மேற்­கொள்ள முடி­யாது என்று கூறி பொறுப்­பி­லி­ருந்தும் விலகிக் கொண்­டது. இதனால் எங்­க­ளுக்கு சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது. ஆய்­வு­களை மேற்­கொள்ளும் குறிப்­பிட்ட நிறு­வ­னத்­திற்கு இலஞ்சம் வழங்கி இந்த ஆய்­வுகள் மூடி­ம­றைக்­கப்­பட்­டனவா என்ற சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது. இதனால் சர்­வ­தேச ஆய்­வு­கூ­டத்தில் இது தொடர்­பான ஆய்­வு­களை மேற்­கொள்­ள­வுள்ளோம்.பால்மா மாதி­ரி­களை அனுப்­பி­வைக்­க­வுள்ளோம். இது தொடர்­பாக எதிர்­வரும் 3 வாரங்­களில் தீர்­வொன்­றினை எதிர்­பார்க்க முடியும் என்றும் பிர­தி­ய­மைச்சர் தெரி­வித்­துள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்­றுள்ள விவா­தங்­களை நோக்­கும்­போது இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவில் பன்றிக் கொழுப்பு உட்­பட ஏனைய கலப்­ப­டங்கள் இருந்­துள்­ளன. இது தொடர்ச்­சி­யாக மூடி மறைக்­கப்­பட்­டுள்­ளது என்­பது தெளி­வா­கி­றது.

விஜித் விஜ­ய­முனி சொய்சா எம்.பி.

ஆளும்­கட்­சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித் விஜய முனி சொய்சா ஒழுங்குப் பிரச்­சி­னையை எழுப்பி இது குறித்து சில கருத்­து­களை முன்­வைத்தார். இக்­க­ருத்­துகள் பால்மா விவ­கா­ரத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளன.

முன்னாள் அமைச்சர் என்ற வகையில் எனக்கு இந்த உண்­மைகள் தெரியும். இந்த பால்மா பக்­கட்­டுக்­களில் பால் இல்லை வெறு­மனே மா மட்­டுமே உள்­ளது. பன்றிக் கொழுப்பு, தாவர எண்ணொய் மற்றும் மெலமைட் ஆகி­ய­வைகள் அடங்­கி­யுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. அது தொடர்­பான நிறு­வ­னத்தின் பெய­ரையும் கூற முடியும். “பொன்­டேரா” நிறு­வனம் இவ்­வாறு செய்­கி­றது. இவ்­வாறு எமது நாட்டில் பால் குடிக்கும் பிள்­ளை­க­ளுக்கும், பால் கொடுக்கும் தாய்­மா­ருக்கும் நஞ்சே கொடுக்­கப்­ப­டு­கி­றது என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித் விஜ­ய­முனி சொய்சா பாரா­ளு­மன்றில் தெரி­வித்­துள்ளார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், அமைச்­சர்­களின் கருத்­துக்­களை நோக்கும் போது இந்த விவ­காரம் அவர்­களால் மூடி மறைக்­கப்­பட்­டி­ருந்­தது இப்­போதே வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது. மக்­களின் பிர­தி­நி­தி­க­ளான இவர்­க­ளது செயற்­பா­டு­க­ளினால் பால்மா நுகர்­வோர்­க­ளான பொது­மக்­களே பாதிக்­கப்­பட்டு வந்­துள்­ளார்கள்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித் விஜய முனி சொய்­சாவின் கருத்­து­க­ளுக்கு பிர­தி­ய­மைச்சர் புத்­திக பத்­தி­ரன பதி­ல­ளிக்கும் வகையில் தமது கருத்­தினை முன்­வைத்தார். நான் பிர­தி­ய­மைச்­ச­ரென்ற வகையில் பொறுப்­புடன் பேசு­கின்றேன். மஹிந்த ராஜபக் ஷ காலத்­திலும் மெலமைன் பிரச்­சினை ஏற்­பட்­டது. அப்­போது பால்மா நிறு­வ­னங்கள் மிகவும் கீழ்த்­த­ர­மா­கவும் தான்­தோன்­றித்­த­ன­மா­கவும் நடந்து கொண்­டன. நியு­சி­லாந்து இரா­ஜ­தந்­தி­ரி­களும் இது விட­யத்தில் தலை­யிட்­டனர். எமது நாட்டு பால்மா உற்­பத்­தியில் இந்தப் பிரச்­சினை இல்லை. வெளி­நாட்­டி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மா­விலே இந்தப் பிரச்­சினை இருக்­கி­றது. இது தொடர்­பாக வயம்ப பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஆய்வும், பிரித்­தா­னிய நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையும் இருக்­கின்­றன. இதன்­ப­டியே முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. இது தொடர்­பான ஆய்­வு­களை வெளி­நாட்டு ஆய்­வு­கூட நிறு­வ­னங்­களில் மேற்­கொள்வோம். எமது நாட்டு மக்­க­ளுக்கு நஞ்சை கொடுக்க முடி­யாது என அவர் தெரி­வித்­துள்ளார்.

பிர­தி­ய­மைச்­சரின் உறு­தி­மொ­ழிகள் வார்த்­தை­க­ளுடன் அடங்­கி­விடக் கூடாது. நட­வ­டிக்­கை­களில் துரி­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும். மக்கள் எது­வித சந்­தே­க­மு­மின்றி பாலை நுகர்­வ­தற்கு சந்­தர்ப்­ப­ம­ளிக்­கப்­பட வேண்டும்.

நாமல் ராஜபக்ஷ எம்.பி.

பால்மா விவ­காரம் தொடர்பில் சபையில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜபக் ஷவும் கருத்­து­களை வெளி­யிட்டார்

பிர­தி­ய­மைச்சர் புத்­திக பத்­தி­ர­னவின் கருத்­தினை நோக்­கும்­போது இந்த விவ­கா­ரத்தின் பின்னால் ஏதோ­வொரு சூழ்ச்சி நகர்வு இருப்­ப­தாகத் தெரி­கி­றது. இவ்­வா­றாக அவர் கூறு­வா­ரென்றால் பால்­மாவை பயன்­ப­டுத்­து­வதில் பாரிய பிரச்­சினை ஏற்­படும். அதனால் இது தொடர்­பான அறிக்கை வரும் வரை ஏதேனும் சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். தெளி­வான நிலைப்­பாட்­டுக்கு இப்­போதே வர­மு­டி­யா­த­தென்றால் இது தொடர்­பான ஆய்வு முடி­யும்­வரை இந்த பால்­மாவை நுகர வேண்டாம் என்று அல்­லது தடை­யுத்­த­ரவு பெற்­றுக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்று தெரி­வித்­துள்ளார்.

இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா தொடர்பில் சந்­தேகம் எழுந்­துள்ள நிலையில் சர்­வ­தேச ஆய்­வு­கூ­ட­மொன்றின் மூலம் ஆய்­வ­றிக்கை ஒன்­றினைப் பெற்றுக் கொள்ளும் வரை இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா வகை­க­ளுக்கு தற்­கா­லிக தடை விதிக்­கப்­ப­டு­வ­துடன் உள்ளூர் பால் உற்­பத்­தியை மேம்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம்  உட­ன­டி­யாக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும், இல்­லையேல் இந்­தி­யா­போன்ற அயல் நாடு­க­ளி­லி­ருந்து பால்­மா­வினை இறக்­கு­மதி செய்­வது பற்றி ஆரா­ய­வேண்டும்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மரிக்கார்

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.மரிக்கார் இவ்­வி­வ­காரம் தொடர்பில் சபையில் கருத்து தெரி­விக்­கையில்; ‘பிரதி அமைச்­சரின்’ இந்த கருத்­தினைத் தொடர்ந்து முஸ்லிம் மக்­க­ளுக்கு பாரிய பிரச்­சினை ஏற்­படும். வெளி நாட்­டி­லி­ருந்து இறக்­கு­மதி செய்யும் பால்­மாவில் பன்றி கொழுப்பா இருக்­கி­றது என்ற சந்­தேகம் ஏற்­படும். இது சாதா­ரண பிரச்­சி­னை­யல்ல. வெளி­நாட்டு ஆய்வு கூடங்­களின் உத­வி­யுடன் இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா மாதி­ரிகள் உட­ன­டி­யாக ஆய்­வுக்­குட்­ப­டுத்தி மக்கள் தெளி­வு­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று தெரி­வித்­துள்ளார்.

பால்மா விவ­காரம் வெளிச்­சத்­துக்கு வந்­ததன் பின்பு முஸ்­லிம்கள் பெரும் அச்­ச­ம­டைந்­துள்­ளனர். பெரும்­பா­லானோர் பால்­மா­வினைத் தவிர்த்­துள்­ளனர். உள்ளூர் உற்­பத்­தியின் நுகர்வு அதி­க­ரித்­துள்­ளது.

அமைச்­சர்கள் உத்­த­ரவு

இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா விவ­காரம் பாரா­ளு­மன்­றத்தில் சர்ச்­சையைக் கிளப்­பி­யுள்­ள­தை­ய­டுத்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா வகை­களில் பன்றிக் கொழுப்பு, தாவர எண்ணெய் மற்றும் லக்டோ கலப்­ப­டங்கள் அடங்­கி­யுள்­ள­னவா என்­பது தொடர்பில் கண்­ட­றிந்து அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன், பிர­தி­ய­மைச்சர் புத்­திக பத்­தி­ரன ஆகியோர் நுகர்வோர் அதி­கார சபையின் பணிப்­பாளர் நாய­கத்­துக்கு உத்­த­ர­வு­களைப் பிறப்­பித்­துள்ளனர்.

ஆய்­வு­களில் கலப்­ப­டங்கள் காணப்­ப­டு­வ­தாக உறுதி செய்­யப்­பட்டால் சம்­பந்­தப்­பட்ட பால்மா இறக்­கு­மதி நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்­துள்ளார். கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சின் கீழேயே நுகர்வோர் அதி­கார சபை இயங்கி வரு­கி­றது. எனவே இவ்­வி­வ­கா­ரத்தின் உண்மை நிலை­ய­றிந்து மேல­திக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க வேண்டும்.

இதே­வேளை பால்மா விவ­காரம் தொடர்பில் முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளதால் இது தொடர்பில் உட­னடி ஆய்­வு­களை மேற்­கொள்­ளு­மாறு கைத்­தொழில் மற்றும் வர்த்­தக பிர­தி­ய­மைச்சர் புத்­திக பத்­தி­ரன நுகர்வோர் அதி­கார சபையின் பணிப்­பாளர் நாய­கத்தைக் கோரி­யுள்ளார்.

நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம்

இதேவேளை, நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம்.பௌசர் இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றிக்கொழுப்பு மற்றும் கலப்படங்கள் இருப்பதாக இதுவரை முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை எனத்தெரிவித்துள்ளார். பிரதியமைச்சர் புத்திக பத்திரன பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்ததன் பின்பே இதுபற்றி அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் கலப்படங்கள் உள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்தும், அமைச்சரும் பிரதியமைச்சரும் வேண்டிக்கொண்டதையடுத்தும் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டு ஆய்வுகூடங்களைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும் காலதாமதமின்றி இது தொடர்பாக அறிக்கைகள் பெற்றுக்கொள்ளப்பட்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

தேசிய ரீதியில் உள்ள ஆய்வுகூடங்கள் அதிநவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டனவாக இல்லாமையால் சர்வதேச ஆய்வு கூடங்களின் சேவையைப் பெற்றுக்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பால்மா விவகாரம் காலம் தாழ்த்தக் கூடிய பிரச்சினையல்ல, நுகர்வோர் அதிகாரசபை பால்மா தொடர்பான அறிக்கையை விரைவில் பெற்று பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.

மனித பாவனைக்குதவாத பால்மா இறக்குமதி செய்யப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக் கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஹலால் சான்­றிதழ் பேரவை

இலங்­கைக்கு வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் 9 வர்த்­தக நாமங்­களைக் கொண்ட பால்மா வகை­களில் பன்றிக் கொழுப்பு கலப்­படம் இல்லை என ஹலால் சான்­றிதழ் பேரவை அறி­வித்தல் ஒன்­றினை  வெளி­யிட்­டுள்­ளது.

ரெட்கவ், நெஸ்லே, ரத்தி, அன்கர், அன்லென், டயமன்ட், லக்ஸ்­பிறே, மெலிபன் மில்க் மில்கோ ஆகிய வர்த்­தக நாமங்­களைக் கொண்ட பால்மா வகை­யிலே பன்­றிக்­கொ­ழுப்பு கலப்­படம் அடங்­க­வில்லை என அவ்­வ­றி­வித்தல் தெரி­விக்­கி­றது.

குறிப்­பிட்ட வர்த்­தக நாமங்­களைக் கொண்ட உற்­பத்­திப்­பொ­ருட்கள் மற்றும் உற்­பத்தி செய்யும் தொழிற்­சா­லைகள் தொடர்­பான ஆவ­ணங்­களைக் கொண்டே இதனை ஹலால் சான்­றிதழ் பேரவை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இலங்­கைக்கு பெருந்­தொ­கை­யான பால்மா வகைகள் நியூ­சி­லாந்து மற்றும் அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்தே இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கி­றது. இந்த இறக்­கு­ம­தி­யுடன் அந்­தந்த நாட்­டி­லுள்ள அர­சாங்­கத்­தினால்  அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஹலால் நிறு­வ­னங்­களின் சான்­றிதழ் மற்றும் ஆய்­வு­கூட சான்­றி­தழ்கள், உற்­பத்தி  தொழிற்­சா­லை­பற்­றிய சான்­றி­தழ்கள் என்­பன அனுப்­பி­வைக்­கப்­ப­டு­கின்­றன. அந்த ஆவ­ணங்­களை ஆராய்ந்­த­பின்னே ஹலால் பேரவை பால்மா வகை­க­ளுக்கு ஹலால் சான்­றிதழ் வழங்­கு­கின்­றது.

எனவே குறிப்­பிட்ட வர்த்­தக நாமங்­க­ளைக்­கொண்ட பால்மா வகை­களில்  பன்றிக் கொழுப்போ ஏனையக் கலப்­ப­டங்­களோ இல்லை என உறு­தி­யாகக் கூற­மு­டியும்.

எனவே முஸ்­லிம்கள் அச்­சம்­கொள்ளத் தேவை­யில்லை என ஹலால் சான்­றிதழ் பேரவை (HAC) யின் உள்­ளக ஷரீஆ பொறுப்­ப­தி­காரி அஷ்ஷெய்க் எம்.எம். இர்பான் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை ஒரு சில பிர­ப­ல­மற்ற வர்த்­தக நாமங்­களைக் கொண்ட பால்மா வகைகள்  இலங்­கைக்குள் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்­றன. அவை தொடர்பில் எம்மால் எதுவும் கூற­மு­டி­யாது என்றும் அவர் கூறி­யுள்ளார்.

அத்­தோடு பால்மா நிறு­வ­னங்கள் முழு­ஆ­டைப்­பால்மா இறக்­கு­மதி செய்­வ­தற்கு அர­சாங்­கத்தின் அனு­ம­தியைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும்.

அர­சாங்­கத்தின் அனு­ம­தி­யு­டனே பால்மா வகைகள் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்­றன எனவும் அவர் கூறினார்.

இலங்கை அரச ஆய்­வு­களை மேற்­கொள்ள வேண்டும்.

வெளி­நாட்­டி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா விவ­காரம் மக்கள் மத்­தியில் பல்­வேறு சந்­தே­கங்­களைத் தோற்­று­வித்­துள்­ளது.

ஹலால் சான்­றிதழ் பேரவை குறிப்­பிட்ட வர்த்­தக நாமம் கொண்ட பால்மா வகை­களில் பன்றிக் கொழுப்பு கலப்­படம் செய்­யப்­ப­ட­வில்லை என்று ஊர்­ஜிதம் செய்­தி­ருந்­தாலும் அதில் மக்கள் சந்­தேகம் கொள்­கின்­றார்கள்.

ஹலால் சான்­றிதழ் பேரவை பால்மா இறக்­கு­மதி செய்யும் நாடு­களின் ஹலால் நிறு­வ­னங்­களின் ஹலால் சான்­றிதழ் மற்றும் தொழிற்­சா­லை­களின் சான்­றிதழ் என்னும் ஆவ­ணங்­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டே தனது தீர்­மா­னத்தை மேற்­கொண்­டுள்­ளது. ஆவ­ணங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே பால்­மா­வுக்­கான தனது ஹலால் சான்­றி­தழை வழங்­கி­யுள்­ளது.

இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா தொடர்பில் எத்­த­கைய ஆவ­ணங்கள் வெளி­நா­டுகள் மூலம் சமர்ப்­பிக்­கப்­பட்­டாலும் இலங்­கையில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அரச நிறு­வனம் ஒன்றின் ஊடாக வெளி­நாட்டு  ஆய்வு கூடங்­களில் ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வதே சிறந்­த­தாகும். இத­னையே எமது நாட்டு பாவ­னை­யா­ளர்கள் விரும்­பு­கி­றார்கள்.

எனவே இது தொடர்பில் விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்­சரும், நிறு­வ­னங்­களும் தங்கள் நட­வ­டிக்­கை­களைத் துரித கதியில் முன்­னெ­டுக்க வேண்டும். இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்மா கலப்­ப­டங்கள் அற்­றவை என ஆய்­வுகள் மூலம் நிரூ­பிக்­கப்­படும் வரை அவற்றுக்கு தற்காலிக தடை விதிக்கவேண்டும்.

பாவனையாளர்கள் குறிப்பாக முஸ்லிம் சமூகம் தற்போது பால்மா நுகர்வில் அச்ச நிலையில் உள்ளது. ஆய்வுகளின் பின்பு பன்றிக் கொழுப்போ அல்லது வேறு கலப்படங்களோ இல்லை என நிரூபிக்கப்பட்டால் இவ்வாறான தகவல்களை வெளிப்படுத்தியோருக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.