அச்சுறுத்தல்களை எதிர் கொள்ளும் இஸ்லாத்தை ஏற்ற சுவீடன் பெண்

0 631

இஸ்­லாத்தை தழு­வி­ய­தி­லி­ருந்து கடந்த ஏழு மாதங்­க­ளாக சுவீ­டனைச் சேர்ந்த பதின்­ம­வ­யதுப் பெண்­ணொ­ருவர் அச்­சு­றுத்தல் மற்றும் ஏள­னங்­களை எதிர்­கொண்டு வரு­கின்றார்.

சுவீ­டனில் 19 வய­திற்குக் கீழ்ப்­பட்ட தேசிய பெண்கள் அணியின் பந்துக் காப்­பா­ள­ராக விளை­யாடும் ரொன்ஜா அண்­டர்ஸன் கடந்த திங்­கட்­கி­ழமை இரவு ட்ரோல் ஹண்டர் என அழைக்­கப்­படும் தொலைக்­காட்சி நிகழ்ச்­சியில் தோன்­றினார்.

அந்த நிகழ்ச்­சியின் போது ரொன்ஜா அண்­டர்­ஸனின் வீட்­டுக்கு இன­வாத வெறுப்­பு­ணர்வுக் கடி­த­மொன்றை அனுப்­பி­வைத்த நபர் ஒருவர் அடை­யாளம் காணப்­பட்டார். அவ்­வாறு அடை­யாளம் காணப்­பட்ட நபர் குறித்த நிகழ்ச்­சியில் தோன்றி அண்­டர்­ஸ­னிடம் மன்­னிப்புக் கோரினார்.

தான் எவ்­வாறு இஸ்­லாத்தின் பால் ஈர்க்­கப்­பட்டேன் என்­பது தொடர்பில் குறித்த தொலைக்­காட்சி நிகழ்ச்­சியில் விளக்­கிய 19 வய­தான அண்­டர்ஸன் ‘எனக்கு 15 வய­தாக இருக்கும் போது எனக்கு துருக்­கிய ஆண் நண்பர் ஒருவர் இருந்தார். அவ­ரது குடும்­பத்­தி­ன­ரி­ட­மி­ருந்தே நான் இஸ்­லாத்தைக் கற்­றுக்­கொண்டேன்’ எனத் தெரி­வித்தார்.

நான் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருடன் துருக்­கிக்குச் சென்­ற­போது அங்­கி­ருந்த பள்­ளி­வா­சல்­களால் மிகவும் கவ­ரப்­பட்டேன். நான் துருக்­கிய குடும்­பத்­தி­ன­ருடன் இஸ்­லா­மிய கட­மை­களை நிறை­வேற்­றினேன். அதன்­போது நானும் முஸ்­லி­மாக மாற வேண்டும் எனத் தீர்­மா­னித்தேன் எனவும் அவர் தெரி­வித்தார்.

இஸ்­லாத்தை ஏற்­றதன் பின்னர் நான் மிகவும் அமை­தி­யான வாழ்க்­கையை வாழ்­கின்றேன். நான் குர்­ஆனை ஓது­கின்றேன், தொழு­கின்றேன் மற்றும் நோன்பும் பிடிக்­கின்றேன். நான் முஸ்­லி­மாக இருப்­பதில் பெரு­மை­ய­டை­கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு அண்டர்ஸன் இஸ்லாத்தை ஏற்ற போது சுவீடனில் அதிகம் பேசப்படும் ஒருவராக மாறினார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.