முஸ்லிம் தனியார் சட்ட விவ­காரம்: இணக்­கப்­பா­டுகள் ஏற்­படும் வரை சட்­டத்­திற்கு அங்­கீ­கா­ர­ம­ளிக்­காதீர்

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வை.எம்.எம்.ஏ. கடிதம்

0 607

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தின் திருத்த சிபா­ரி­சு­களில் சில விட­யங்­களில் கருத்து முரண்­பா­டு­களைக் கொண்­டுள்ள சிபா­ரிசுக் குழுவின் தலைவர் முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்­சூ­புக்கும், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா மற்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கும் ஓர் இணக்­கப்­பாட்­டினை ஏற்­ப­டுத்தும் வரை சட்­டத்­தி­ருத்­தத்­திற்கு அங்­கீ­காரம் அளிக்க வேண்டாம் என வை.எம்.எம்.ஏ. அமைப்பு நேற்று அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்­ளது.

நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள நாளை 7 ஆம் திகதி முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்­தி­ருத்தம் தொடர்பில் இறுதித் தீர்­மானம் எட்­டப்­ப­டவுள்­ள­தாகத் தெரி­வித்து கூட்­ட­மொன்­றுக்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்ள நிலை­யிலே வை.எம்.எம்.ஏ யினால் இக்­கோ­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

வை.எம்.எம்.ஏ அமைப்பு பல கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி சட்டத் திருத்தம் தொடர்­பாக பரிந்­து­ரை­களை உள்­ள­டக்கி அறிக்­கை­யொன்­றினைத் தயா­ரித்­துள்­ளது. அவ்­வ­றிக்கை சலீம் மர்சூப், பாயிஸ் முஸ்­தபா மற்றும் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி ஆகி­யோ­ருக்கு கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இரண்­டொரு தினங்­களில் இரு­த­ரப்­பி­ன­ரையும் சந்­தித்து இணைக்­கப்­பா­டொன்றை எட்டுவதற்கான முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என வை.எம்.எம்.ஏ யின் தேசிய பொதுச்செயலாளர் சஹீட் எம்.ரிஸ்மி தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.