அரபுக் கல்லூரிகள் வக்பு சபையில் பதியப்பட வேண்டும்

0 847

நாட்டில் 321 அரபுக் கல்­லூ­ரிகள் முஸ்லிம் சம­யப்­பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கீழ் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. மேலும் சுமார் 15 அரபுக் கல்­லூ­ரிகள் பதி­வு­க­ளுக்­காகக் காத்­தி­ருக்­கின்­றன.

அரபுக் கல்­லூ­ரிகள் மூன்று பிரி­வு­களின் கீழ் திணைக்­க­ளத்­தினால் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. ஆரம்ப பிரிவு கல்­லூ­ரிகள், அரபுக் கல்­லூ­ரிகள் மற்றும் சிரேஷ்ட அரபுக் கல்­லூ­ரிகள் என்ற பிரி­வு­களின் கீழேயே பதி­வுகள் அமைந்­துள்­ளன.

1981 ஆம் ஆண்­டு­வரை அர­புக்­கல்­லூ­ரி­களின் பதி­வு­களை கல்­வி­ய­மைச்சே மேற்­கொண்டு வந்­தது. 1982 ஆம் ஆண்­டி­லி­ருந்தே இப்­ப­தி­வுகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. புதி­தாக ஓர் அர­புக்­கல்­லூ­ரியை பதிவு செய்­து­கொள்ள வேண்­டு­மென்றால் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு விண்­ணப்­பிக்க வேண்டும். திணைக்­களம் பதி­வினை மேற்­கொண்டு அதற்­கான சான்­றி­தழை வழங்கும். இதுவே இது­வ­ரை­காலம் இருந்­து­வரும் நடை­மு­றை­யாகும்.

இந்­நி­லையில் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் அரபுக் கல்­லூ­ரிகள் கட்­டா­ய­மாக வக்பு சபையில் பதி­வு­செய்­யப்­பட வேண்டும் என்ற தீர்­மா­னத்தை எடுத்­துள்ளார். அவ­ரது தீர்­மானம் உல­மாக்­களின் ஆலோ­ச­னை­களும் பெறப்பட்டே எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறி­யுள்ளார்.

அர­புக்­கல்­லூ­ரிகள் புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­டு­வது தொடர்பில் சில முறைப்­பா­டு­களும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. திணைக்­க­ளத்தில் பதிவு செய்து கொண்டு பதி­வி­லக்­கத்தைப் பயன்­ப­டுத்தி நிதி சேக­ரிக்­கப்­ப­டு­வ­தா­கவும், வெளி­நாட்டு உத­விகள் பெற்றுக் கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் சமூ­கத்தில் விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது.

அவ்­வா­றான அரபுக் கல்­லூ­ரி­களை யார் நிரு­வ­கிக்­கி­றார்கள் என்பன தொடர்பில் மற்றும் அவற்றின் நிதி பரி­மாற்­றங்கள், செல­வுகள் தொடர்பில் எந்த ஆவ­ணமும் இல்லை. அவை சட்­ட­ரீ­தி­யாக கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­தில்லை. இவ்­வா­றான அனைத்து நிறு­வ­னங்­களும் நிறு­வ­னப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அவை ஒரு சட்ட ஒழுங்­கு­மு­றைக்குள் கொண்டு வரப்­பட வேண்டும் என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம். யாஸீன் தெரி­வித்­துள்ளார்.

அர­புக்­கல்­லூ­ரிகள் மாத்­தி­ர­மல்ல ஹிப்ளு மத்ர­ஸாக்கள், குர்ஆன் மத்­ர­ஸாக்கள் மற்றும் இஸ்­லா­மிய இயக்­கங்கள் அனைத்தும் வக்பு சபையின் கீழ் பதிவு செய்­யப்­பட வேண்டும். எனவும் அவர் கூறி­யுள்ளார். இவை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் கீழ் பதி­வு­செய்­யப்­பட்­டி­ருந்­தாலும் அவற்றைக் கண்­கா­ணிப்­ப­தற்கு சட்­ட­ரீ­தி­யான அமைப்­பொன்று இல்லை. எனவே சட்­ட­ரீ­தி­யான அமைப்­பான வக்பு சபையில் பதி­வுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யது கட்­டா­ய­மாகும்.

நாட்டின் இன்­றைய சூழ்­நி­லையில் முஸ்­லிம்­ச­மூகம் வெளிப்­படைத் தன்­மையைப் பேண­வேண்டும். எங்­க­ளுக்குள் ரக­சியம் தேவை­யில்லை, எமக்கு சட்­ட­ரீ­தி­யான பாது­காப்பு உண்டு என்றும் வக்பு சபைத் தலைவர் வெளிப்­ப­டை­யா­கவே கருத்து வெளி­யிட்­டுள்ளார்.

வக்­பு­ச­பையில் அர­புக்­கல்­லூ­ரிகள் பதிவு செய்­யப்­ப­டு­வதன் மூலம் அவற்றின் வக்பு சொத்­துக்­களைப் பாது­காக்க முடியும். அங்கு புரை­யோடிப் போயுள்ள ஊழல்­க­ளுக்கு சாவு­மணி அடிக்க முடியும்.

அரபுக் கல்­லூ­ரிகள், சிறிய மத­ர­ஸாக்கள், பள்­ளி­வா­சல்கள் அனைத்தும் சமூ­கத்தின் சொத்து. அவற்றின் வக்பு சொத்­துக்கள் அல்­லாஹ்வின் சொத்து அவற்றை நிரு­வ­கிப்­ப­வர்கள் தங்களது கடமைகளை ஒரு புனிதப் பணியாகக் கருதவேண்டும்.

அரபுக் கல்லூரிகளை நிறுவனப்படுத்தும் தீர்மானங்களுக்கு சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேணடும். அதனை அரசியல் மயப்படுத்த முயற்சிக்கக் கூடாது. அமைச்சர் ஹலீமின் முயற்சியினால் வக்பு சட்டத்தில் காலத்திற்கேற்ற சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்திருத்தங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.