குறைந்த கட்டணத்தில் உம்றாவுக்கு அனுப்புவதாகக் கூறி பணம் மோசடி

அவதானமாக இருக்குமாறு ஹஜ் குழு கோரிக்கை

0 701

குறைந்த கட்­ட­ணத்தில் உம்ரா பய­ணத்தை ஏற்­பாடு செய்­வ­தாகக் கூறி பல­ரிடம் பணம் வசூ­லித்து ஏமாற்றி வரும் உம்ரா முக­வர்கள் தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கும், அரச ஹஜ்­ கு­ழு­விற்கும் பல முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தா­கவும் அவ்­வா­றான முக­வர்கள் தொடர்பில் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கும்­ப­டியும் அரச ஹஜ்­குழு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

குறைந்த கட்­ட­ணத்தில் உம்ரா பய­ணத்தை ஏற்­பாடு செய்­வ­தாக உறு­தி­ய­ளித்து பணத்தைப் பெற்றுக் கொண்டு இறுதி நேரத்தில் குறிப்­பிட்ட தொகை­யிலும் மேல­தி­க­மாக கட்­ட­ணங்­களைக் கோரி உம்ரா பய­ணி­களை அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளாக்­கிய பல உம்ரா முக­வர்கள் தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தா­கவும் அவ்­வா­றான முக­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மெ­னவும் அரச ஹஜ்­கு­ழுவின் உறுப்­பி­னரும், அமைச்சர் எம்.எச். ஏ.ஹலீமின் பிரத்­தி­யேக செய­லா­ள­ரு­மான எம்.எச்.எம். பாஹிம் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உம்ரா முக­வர்கள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில்,

மிகவும் குறை­வான உம்ரா கட்­டணம் மற்றும் 10 பேருக்கு மேலான உம்ரா பதி­வு­க­ளுக்கு சன்­மா­னங்கள் வழங்­கப்­படும் என விளம்­ப­ரங்கள் வெளி­யி­டப்­பட்டு இவ்­வா­றான மோச­டிகள் இடம்­பெ­று­கின்­றன.

இலங்கை ரூபாவின் பெறு­மதி குறைந்­துள்ள நிலையில், சவூதி அரே­பி­யாவில் வரிகள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா­வுக்கு குறைந்த கட்­ட­ணத்தில் உம்ரா பய­ணத்தை ஏற்­பாடு செய்ய முடி­யாது. எனவே குறை­வான கட்­ட­ணங்­களை விளம்­ப­ரப்­ப­டுத்தும் உம்ரா முக­வர்கள் தொடர்பில் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­க­வேண்டும்.

பள்­ளி­வா­சல்­களில் வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கையின் பின்பு இவ்­வா­றான அறி­வு­றுத்­தல்­களை வழங்­கும்­படி பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களை திணைக்­களம் கோரி­யுள்­ளது. அதற்­கான கடி­தங்கள் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­ப­ட­வுள்­ளன.

அத்­தோடு திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­ப­டாத பலர் உம்ரா முக­வர்­க­ளாக இயங்கி உம்­ரா­வுக்கு பய­ணி­களை  அழைத்து செல்­கி­றார்கள். இவர்கள் தொடர்பில் எச்­ச­ரிக்­கை­யாக இருக்கும்படி மக்கள் வேண்டப்பட்டுள்ளனர்.

உம்ரா விசாக்கள் IATA ஏஜன்டுக்கே கிடைக்கப் பெறுவதால் ஏஜன்ட் மூலம்  விசாக்கள் வழங்கப்படுவதால் இதில் கட்டுப்பாடுகளை விதிப்பதில் திணைக்களத்துக்கு இயலாதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.