மாகா­ண­சபை தேர்­தலை விரை­வாக நடத்த கோரி கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிப்போம்

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன

0 634

மாகாண சபை தேர்­தல்கள் விரை­வாக நடத்­தப்­பட வேண்டும் என்ற அழுத்­தத்தை பிர­யோ­கிப்­ப­தனை இலக்­காக கொண்டு, அதற்கு அவ­சி­ய­மான நட­வ­டிக்­கை­களை இனி­வரும் காலங்­களில் முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன தெரி­வித்­துள்­ளது.

நெலும் மாவத்­தையில் உள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்சித் தலை­மை­ய­கத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜீ.எல்.பீரிஸ் மேற்­கண்ட கருத்தை வெளி­யிட்டார்.

கடந்த தேர்­தல்­களில் வட மாகா­ணத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பிற்­கான வாக்கு வங்­கியில் பாரி­ய­தொரு வீழ்ச்சி ஏற்­பட்­டது. எனவே, அதனை சீர்­செய்து தமக்­கு­ரிய வாக்­கு­களை சாத­க­மா­ன­தொரு மட்­டத்­திற்கு கொண்டு வரு­வதே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் நோக்­க­மாக உள்­ளது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு போன்ற விட­யங்­களின் ஊடாக தமக்­கு­ரிய வாக்­கு­களை உறு­தி­செய்யும் வரையில் வடக்கில் மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு அனு­ம­திக்க மாட்­டார்கள். மாகாண சபைத் தேர்­தலைக் காலந்­தாழ்த்தும் அவர்­களின் முயற்­சி­க­ளுக்கு உத­வாமல் பழைய முறை­யி­லேயே விரைவில் தேர்­தலை நடத்த வேண்டும் எனவும் குறிப்­பிட்டார்.அவர் தொடர்ந்து கூறு­கையில்,  நாட்­டி­லுள்ள மூன்று மாகாண சபை­களின் பத­விக்­காலம் முடி­வ­டைந்து ஒன்­றரை வரு­டங்கள் நிறை­வ­டைந்­துள்­ளன. எதிர்­வரும் ஏப்ரல் மாதத்­துடன் ஒன்­பது மாகா­ணங்­களில் எட்டு மாகா­ணங்­களில் பத­விக்­காலம் முடி­வ­டைந்த நிலை­யொன்று உரு­வாகும்.

இந்­நி­லையில் மாகா­ண­சபை தேர்­தல்கள் விரை­வாக நடத்­தப்­பட வேண்டும் என்ற அழுத்­தத்தை பிர­யோ­கிப்­ப­தனை இலக்­காக கொண்டே எமது அனைத்து செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுக்­க­வுள்ளோம். பத­விக்­காலம் நிறை­வ­டைந்த மாகாண சபை­க­ளுக்கு உரிய பாதீடு இல்­லா­ம­லேயே அவற்­றுக்­கான செல­வுகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இது அர­சி­ய­ல­மைப்பு மற்றும் நாட்டின் சட்டம் என்­ப­வற்­றுக்கு முர­ணான செயற்­பா­டாகும்.

கடந்த தேர்­தல்­களில் வட மாகா­ணத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பிற்­கான வாக்கு வங்­கியில் பாரி­ய­தொரு வீழ்ச்சி ஏற்­பட்­டது.

எனவே அதனை சீர்­செய்து தமக்­கு­ரிய வாக்­கு­களை சாத­க­மா­ன­தொரு மட்­டத்­திற்கு கொண்­டு­வ­ரு­வதே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் நோக்­க­மாக உள்­ளது. புதிய அர­சி­ய­ல­மைப்பு போன்ற விட­யங்­களின் ஊடாக தமக்­கு­ரிய வாக்­கு­களை உறு­தி­செய்யும் வரையில் வடக்கில் மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு அனு­ம­திக்க மாட்­டார்கள்.

மாகாண சபைத் தேர்­தலைக் காலந்­தாழ்த்தும் அவர்­களின் முயற்­சி­க­ளுக்கு உத­வாமல் பழைய முறை­யி­லேயே விரைவில் தேர்­தலை நடத்த வேண்டும்.

இந்­நி­லையில் சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு விரைந்து தேர்­தலை நடத்­து­வதில் முனைப்­புடன் செயற்­பட வேண்டும். அதற்­கான அழுத்­தங்­களை அர­சாங்­கத்­திற்கு வழங்­கு­வ­தற்கு எதி­ரணி என்ற ரீதியில் நாங்கள் தயா­ரா­கவே இருக்­கின்றோம்.

மேலும் தேர்­தலை புதிய முறையில் நடத்த வேண்டும் என அர­சாங்கம் யோச­னையைக் கொண்டு வந்­தது. அதுவும் தேர்­தலை காலந்­தாழ்த்­து­வ­தற்­கான ஒரு சதி­மு­யற்சி என்றே தோன்­று­கின்­றது. தற்­போது புதிய முறையா? அல்­லது பழைய முறையா? என்ற இறுதித் தீர்­மானம் எட்­டப்­ப­டாத நிலையில், பழைய முறையில் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான ஆலோ­ச­னையை பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைத்து, அதன்­படி விரைந்து தேர்­தலை நடத்த முன்­வர வேண்டும் என வலி­யு­றுத்­து­கின்றோம்.அது­மாத்­தி­ர­மன்றி தற்­போது தம்­மு­டைய அனு­ச­ரணை இன்றி அர­சாங்­கத்­தினால் புதிய சட்­டங்கள், யோச­னைகள் எவற்­றையும் நிறை­வேற்ற முடி­யாது என கூட்­ட­மைப்பின் சுமந்திரன் கூறிவருகின்றார்.

அமைச்சரவையை விடவும் பலம்வாய்ந்த சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது என்பதையே இக்கருத்து புலப்படுத்துகின்றது.

அத்தோடு தற்போது ஒன்பது மாகாண சபைகளுக்கும் ஒரே தடவையில் தேர்தலை நடத்துவதாக ஒரு யோசனையை அரசாங்கம் முன்கொண்டு வருகின்றது. அவ்வாறெனின் ஊவா மாகாணசபையின் ஆயுட்காலம் நிறைவடையும் வரை ஏனைய மாகாண சபைகளுக்கு தேர்தலை நடத்தாமல் காத்திருக்க முடியாது.

எனவே, ஊவா மாகாண சபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு, ஒன்பது மாகாணங்களுக்கும் ஒன்றாகத் தேர்தலை நடத்துவதற்கு எதிரணி ஆதரவு தெரிவிக்கும். அதனைவிடுத்து இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் பேசப்பட வேண்டிய ஜனாதிபதி தேர்தல் குறித்தோ, நான்கரை வருடங்களுக்கு முன்னர் கலைக்க முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பாராளுமன்றத் தேர்தல் குறித்தோ பேச வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.