25 ஆம் திகதி ஜும்ஆ பிரசங்கத்தில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்பூட்டுக

0 588

எதிர்­வரும் 25ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை நாட்­டி­லுள்ள அனைத்து ஜும்ஆ பள்­ளி­வா­சல்­க­ளிலும் நடத்­தப்­படும் ஜும்ஆ பிர­சங்­கங்கள் போதைப்­பொருள் தொடர்­பான விழிப்­பு­ணர்­வினை ஏற்­ப­டுத்தும் வகையில் அமை­ய­வேண்­டு­மென அஞ்சல் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் கோரிக்கை விடுத்­துள்ளார் . இதே­வேளை எதிர்­வரும் 27 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை நாட்­டி­லுள்ள அனைத்து அஹ­திய்யா பாட­சா­லைகள், அரபுக் கல்­லூ­ரிகள், குர்ஆன் மத்­ர­ஸாக்­களில் போதைப்­பொருள் தொடர்­பான விழிப்­பு­ணர்­வு நிகழ்ச்­சிகள் இடம்­பெற வேண்­டு­மெ­னவும் அவர் கோரி­யுள்ளார்.

எதிர்­வரும் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன போதைப்­பொருள் விழிப்­பு­ணர்வு வார­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளதையடுத்தே அமைச்சர் மேற்­கு­றிப்­பிட்ட கோரிக்­கை­யினை விடுத்­துள்­ளார்.

அமைச்­ச­ரினால் வழங்­கப்­பட்­டுள்ள அறி­வு­றுத்­தல்­களை தவ­றாது பின்­பற்­றும்­படி அனைத்து ஜும்ஆபள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளையும் அரபுக் கல்­லூ­ரிகள், குர் ஆன் மத்­ர­ஸாக்கள் மற்றும் அஹ­திய்யா பாட­சா­லைகள் என்­ப­வற்றையும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் வேண்­டி­யுள்­ளது.
இதே­வேளை, அக்­கு­றணை பெரிய பள்­ளி­வா­சலில் போதைப்­பொருள் ஒழிப்பு தொடர்­பான தேசிய நிகழ்ச்­சி­யொன்று எதிர்­வரும் 27 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் கலந்துகொள்ளவுள்ளார்.
-VIdivelli

Leave A Reply

Your email address will not be published.