சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து வெளி­யே­றிய யுவ­திக்கு கனடா புக­லி­ட­ம­ளித்­தது

0 752

தனது உயி­ருக்கு அச்­சு­றுத்தல் இருப்­ப­தாகத் தெரி­வித்து தனது குடும்­பத்­தி­ன­ரை­விட்டும் பிரிந்து வெளி­யே­றிய றஹாப் அல்­குனூன் என்ற 18 வயது சவூதி அரே­பிய யுவ­திக்கு கனடா புக­லிடம் வழங்­கி­யுள்­ளது.

கடந்த சனிக்­கி­ழமை டொரொன்டோ விமான நிலை­யத்தில் வைத்து கன­டாவின்  பெண் வெளி­நாட்­ட­மைச்சர் கிரிஸ்­டியா பிரீ­லேண்­டினால் அவர் வர­வேற்­கப்­பட்டார்.

இவர் ஒரு மனோ­தி­ட­மிக்க புதிய கனே­டியர் என பிரீலேண்ட் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் தெரி­வித்தார். இதன்­போது  அல்­குனூன் புன்­ன­கைத்­த­வாறு அமைச்­சரின் அருகில் நின்­று­கொண்­டி­ருந்தார்.

றஹாப் மொஹம்மட் அல்­கு­னூனை ஏற்­றுக்­கொள்­ளு­மாறு அதி­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் உயர்ஸ்­தா­னி­க­ர­ால­யத்­தினால் விடுக்­கப்­பட்ட வேண்­டு­கோளை கனடா ஏற்­றுக்­கொண்­ட­தாக கடந்த வெள்­ளிக்­கி­ழமை கனே­டியப் பிர­தமர் ஜஸ்டின் ட்ருடோ தெரி­வித்­தி­ருந்தார்.

றஹாப் அல்­குனூன் பேங்கொக் விமான நிலைய ஹோட்டல் அறை­யி­லி­ருந்து வெளி­யே­று­வ­தற்கும் தனது குடும்­பத்­தி­ன­ரிடம் அனுப்பி வைக்­கப்­ப­டு­வ­தற்கும் மறுப்புத் தெரி­வித்­ததைத் தொடர்ந்து சர்­வ­தேச கவ­னத்தை ஈர்த்­தி­ருந்தார். எனினும் அவர் எவ்­வி­தத்­திலும் தம்மால் பாதிப்­புக்­குள்­ளாக்­கப்­ப­ட­வில்லை என றஹாப் அல்­கு­னூனின் குடும்­பத்­தினர் தெரி­வித்­துள்­ளனர்.

உல­கி­லுள்ள பெண்­க­ளுக்கும் சிறு­வர்­க­ளுக்கும் உதவும் கன­டாவின் கொள்­கையின் ஒரு பகு­தி­யா­கவே அல்­கு­னூனின் வேண்­டு­கோளை ஏற்­றுக்­கொள்­வ­தென்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­தாக பிரீலேண்ட் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் தெரி­வித்தார்.

பெண்கள் மீதான அடக்­கு­முறை என்­பது ஒரு நாளில் தீர்த்து வைக்­கப்­படும் பிரச்­சி­னை­யல்ல, இருளை நோக்கி சாப­மி­டு­வ­தை­விட ஒற்றை மெழு­வர்த்­தியை ஏற்றி வைப்­பது சிறந்­த­தாகும் எனத் தெரி­வித்த அவர், ஒரு பெண்ணை, தனி நபரை பாது­காக்க எம்மால் முடி­யு­மாயின் அதுவே சிறந்த செயற்­பா­டாக இருக்கும் எனவும் குறிப்­பிட்டார்.

தனக்கு உத­வியோர் அனை­வ­ருக்கும் தனது டுவிட்டர் பக்­கத்தின் மூலம் றஹாப் அல்­குனூன் நன்­றி­களைத் தெரி­வித்­துள்ளார். எனக்கு உத­வி­யோ­ருக்கும் எனது உயிரைக் காத்­தோ­ருக்கும் நன்­றிகள் என அவர் தனது டுவிட்­டரில் குறிப்­பிட்­டுள்ளார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.