கடந்­த­கால தோல்­வி­களை வெற்­றி­க­ளாக மாற்றி வருங்­கா­லத்தில் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுவேன்

ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்று நான்கு வருட நிறைவில் மைத்­திரி

0 677

இற்­றைக்கு நான்கு வரு­டங்­க­ளுக்கு முன்னர் தன்னை இந்த நாட்டின் அரச தலை­வ­ராகத் தேர்ந்­தெ­டுத்த மக்கள், தன்­மீது கொண்ட எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்­று­வ­தற்­காக முன்­னெ­டுக்­கப்­பட்ட பல வேலைத்­திட்­டங்கள் வெற்­றி­ய­டைந்­துள்­ளதைப் போலவே சில வேலைத்­திட்­டங்கள் தோல்­வி­ய­டைந்த சந்­தர்ப்­பங்­களும் காணப்­ப­டு­கின்­றன.

அத­னூ­டாகப் பெற்­றுக்­கொண்ட வெற்­றி­களை மேலும் உறு­திப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுப்­பதை போன்றே தோல்­வி­களை வெற்­றியை நோக்கி வழி­ந­டத்த வருங்­கா­லத்தில் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­வ­தாக ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன தெரி­வித்தார். லக்­கல, புதிய பசுமை நக­ரத்தை நேற்­று­முன்­தினம் மக்­க­ளிடம் கைய­ளித்­ததன் பின்னர் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்­பின்­போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன்­போது அவர் மேலும் தெரி­விக்­கையில்,

மக்­களின் ஜன­நா­யகம், சுதந்­திரம் ஆகி­ய­வற்றை உறு­தி­செய்து சகல இன மக்­களும் அச்­சமும் சந்­தே­க­மு­மின்றி வாழக்­கூ­டிய சூழலைக் கட்­டி­யெ­ழுப்­பவும் ஊடக சுதந்­திரம், நீதி­மன்­றத்தின் சுயா­தீனத் தன்மை, பக்­கச்­சார்­பற்ற அரச சேவை ஆகி­ய­வற்றை கட்­டி­யெ­ழுப்­பவும் தேசிய பொரு­ளா­தா­ரத்தை பலப்­ப­டுத்­தவும் கடந்த நான்கு வருட காலத்தில் பல முக்­கி­ய­மான தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு முக்­கிய சவா­லாகக் காணப்­படும் இலஞ்சம், ஊழல், மோசடி ஆகி­ய­வற்றை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு கடந்த நான்கு வரு­ட­கா­லத்தில் சிறப்­பான அர்ப்­ப­ணிப்பை செய்­த­தோடு, அத­னூ­டாகப் பெற்­றுக்­கொண்ட அனு­ப­வங்­களை ஆசிர்­வா­த­மாக கருதி ஊழல், மோச­டியை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கான வலு­வான வேலைத்­திட்­டத்­துடன் கைகோர்த்­துக்­கொள்ள அனைத்து மக்­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கிறேன்.

கட்சி வேறு­பா­டு­க­ளுடன் அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக தனிப்­பட்ட அர­சியல் நிகழ்ச்சி நிர­லுக்­க­மைய செயற்­ப­டு­ப­வர்­க­ளன்றி பொது­வான நிகழ்ச்சி நிர­லுக்­க­மைய நாட்டின் நலன்­க­ருதி சிந்­தித்து செய­லாற்­று­ப­வர்­களே தற்­போது நாட்­டுக்கு அவ­சி­ய­மாகும். புதிய எண்­ணங்­க­ளோடு, புதி­தாக திட்­ட­மிட்டு, புதிய பய­ண­மொன்றை மேற்­கொள்ள ஒன்­றி­ணைய வேண்டும்.

ரஜ­ரட்ட மக்­களின் நீர் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணு­மு­க­மாக மொர­க­ஹ­கந்த – களு­கங்கை பாரிய நீர்ப்­பா­சனத் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டதைப் போன்று வடக்கு மக்­களின் நீர்ப் பிரச்­சி­னைக்கும் உரிய தீர்­வொன்­றினை பெற்­றுக்­கொ­டுக்கும் தினத்­தி­லேயே தன்னால் உண்­மை­யான மகிழ்ச்­சியை உணர முடியும்.

சுதந்­திரம், ஜன­நா­யகம், பொரு­ளா­தார சுபீட்சம் மற்றும் மக்கள் அச்­சமும் சந்­தே­க­மு­மின்றி வாழக்­கூ­டிய சூழலைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான விரி­வான செயற்­ப­ணி­களை நிறை­வேற்றும் அதே­வேளை, இனங்­க­ளுக்­கி­டையே சமா­தா­னத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு தேவை­யான சகல நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­படும் என்றும் அவர் தெரி­வித்தார்.

பொது­மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்றி, அமை­தி­யா­ன­தொரு தேசத்­தையும் பேண்­தகு அபி­வி­ருத்­தி­யையும் கட்­டி­யெ­ழுப்பும் நோக்­குடன் 2015 ஜன­வரி 08ஆம் திகதி இந்த நாட்டின் 62 இலட்­சத்­துக்கும் அதி­க­மான மக்­களின் வாக்­கு­களின் மூலம் ஜனா­தி­பதி பத­விக்கு தெரி­வு­செய்­யப்­பட்ட ஜனா­தி­பதி மைத்­ரி­பால சிறி­சேன  பத­விக்கு தெரி­வு­செய்­யப்­பட்டு நேற்று முன்­தி­னத்­துடன் நான்கு ஆண்­டுகள் நிறை­வ­டைந்­தன.

அதனை முன்­னிட்டு ஜனா­தி­ப­திக்கு ஆசி­வேண்டி பல்­வேறு இடங்­களில் சமய கிரி­யைகள் இடம்­பெற்­ற­துடன், நேற்று முன்­தினம் இரவு ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்தில் பிரித் பாரா­ய­ணமும் இடம்­பெற்­றது.

அத்­துடன் மகா சங்­கத்­தி­ன­ருக்­கான அன்­ன­தான நிகழ்­வொன்றும் இடம்­பெற்­றது.

இதே­வேளை, ‘மைத்­திரி ஆட்சி – பேண்­தகு யுகம்’ பொரு­ளா­தார, கலா­சார மறு­ம­லர்ச்­சியின் ஐந்­தாண்டு பிர­வே­சத்தை முன்­னிட்டு மொர­க­ஹ­கந்த – களு­கங்கை திட்­டத்­தினால் நீரில் மூழ்­கிய லக்­கல நக­ரத்­திற்குப் பதி­லாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள லக்­கல புதிய பசுமை நக­ரத்தை மக்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்வில் ஜனா­தி­பதி  கலந்­து­கொண்டார்.

மொர­க­ஹ­கந்த நீர்த்­தேக்­கத்­துடன் தொடர்­பு­படும் அடுத்த பாரிய நீர்த்­தேக்­க­மான களு­கங்கை நீர்த்­தேக்­கத்­தையும் ஜனா­தி­பதி  மக்­க­ளிடம் கைய­ளித்தார்.

மொர­க­ஹ­கந்த – களு­கங்கை திட்­டத்தின் மூலம் இடம்­பெ­யர்ந்த 3.000 குடும்­பங்­களின் தேவை­களை நிறை­வேற்றி களு­கங்கை நீர்த்­தேக்­கத்­தினால் நீரில் மூழ்­கிய லக்­கல நக­ரத்­திற்குப் பதி­லாக களு­கங்கை நீர்த்­தேக்கத் திட்­டத்­திற்கு அண்­மித்­த­தாக புதிய லக்­கல நகரம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. எதிர்­கால தேவை­களை கருத்­திற்­கொண்டு புதிய நகர எண்­ணக்­க­ரு­வான பூங்கா நகர எண்­ணக்­க­ரு­விற்கு அமைய இந்த நகரம் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­துடன் இதற்­காக மொத்­த­மாக 4500 மில்­லியன் ரூபா முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

லக்­கல புதிய நக­ரத்தில் 26 அரச நிறு­வ­னங்­க­ளுக்­கான கட்­டி­டங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ள­துடன், மக்­க­ளுக்கு சேவையை வழங்கும் அந்த அனைத்து நிறு­வ­னங்­களும் ஒன்­று­ட­னொன்று தொடர்­பு­ப­டக்­கூ­டிய வகையில் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இந்த வகையில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள லக்­கல புதிய பிர­தேச வைத்­தி­ய­சா­லையை மக்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்வும் பல்­லே­கம மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்தின் நிர்­வாக கட்­டி­டத்தை மாண­வர்­க­ளிடம் கைய­ளிக்கும் நிகழ்வும் ஜனா­தி­ப­தி­யினால் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

மேலும் புதிய நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், பிரதேச செயலாளர் அலுவலகம், பொலிஸ் நிலையம், விளையாட்டு மைதானம், சந்தை, பஸ் தரிப்பிடம், தபால் அலுவலகம், சுகாதார மத்திய நிலையம், நெடுஞ்சாலைகள் முறைமை உள்ளிட்ட அரச சேவைகள் மற்றும் மக்கள் உட்கட்டமைப்பு வசதிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகள் அமைச்சர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, பி.ஹரிஸன், சந்திராணி பண்டார, எம்.எச்.ஏ.ஹலீம், ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.