வளைகுடா நெருக்கடிக்கு தீர்வுகாண நியமிக்கப்பட்ட அமெரிக்கத் தூதுவர் இராஜினாமா

0 671

பிராந்­தியத் தலை­வர்கள் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­டு­வ­தற்கு விரும்­ப­வில்லை எனத் தெரி­வித்து கட்­டா­ருக்கும் அதன் வளை­குடா அரபு அயல்­நா­டு­க­ளுக்கும் இடை­யே­யான இரா­ஜ­தந்­திர நெருக்­க­டியைத் தீர்த்து வைப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த அமெ­ரிக்கத் தூதுவர் தனது பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­துள்ளார்.

பயங்­க­ர­வா­தத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாகத் தெரி­வித்து கட்­டா­ரு­ட­னான இரா­ஜ­தந்­திர மற்றும் போக்­கு­வ­ரத்துத் தொடர்­பு­களை நான்கு அரபு நாடுகள் துண்­டித்த நிகழ்வு இடம்­பெற்று 18 மாதங்கள் கடந்­துள்ள நிலையில் தன்னால் வளை­குடா நெருக்­க­டிக்குத் தீர்­வு­காண முடி­யாது என்­பதை உணர்ந்து கொண்­ட­தை­ய­டுத்து அமெ­ரிக்கத் தூது­வ­ரான ஓய்­வு­பெற்ற கடற்­படை ஜென­ர­லான அந்­தோனி ஸின்னி தனது பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­த­தாக அமெ­ரிக்­காவைத் தள­மாகக் கொண்ட ஊடக நிறு­வ­ன­மொன்று கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தது.

பயங்­க­ர­வா­தத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாகத் தெரி­விக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுக்­களை கட்டார் மறுத்­துள்­ளது.

நடந்­து­கொள்ள வேண்­டிய விதம் அல்­லது நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக நாம் முன்­வைத்த திட்­டங்­களை பிராந்­தியத் தலை­வர்கள் ஏற்­றுக்­கொள்ள விருப்பம் தெரி­விக்­கா­த­த­னா­லேயே தான் பதவி விலக வேண்­டி­யேற்­பட்­ட­தாக அமெ­ரிக்க மத்­திய கட்­ட­ளை­ய­கத்தின் முன்னாள் தள­ப­தி­யான ஸின்னி தெரி­வித்தார்.

அந்­தோனி ஸின்னி தனது பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­துள்ளார் என்­பதை அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் பேச்­சாளர் ஒருவர் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால் ட்ரம்பின் நிரு­வாகம்  பிராந்­தியத் தலை­வர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யாடல் உள்­ள­டங்­க­லான ஸின்­னிக்கு ஒப்­ப­டைக்­கப்­பட்டு அவர் விட்ட இடத்­தி­லி­ருந்து பணி­களைத் தொடரும் என ரொபர்ட் பல்­லா­டினோ தெரி­வித்தார்.

கடந்த ஒக்­டோபர் அமெ­ரிக்­காவின் மத்­தி­யஸ்­தத்­துடன் வொஷிங்­டனில் இடம்­பெ­ற­வி­ருந்த வளை­குடா நெருக்­க­டியைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி துருக்கியின் இஸ்தான்பூலிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில் வைத்துக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அனைத்தும் தலைகீழாக மாறியதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.