ஹஜ் யாத்திரை – 2019 உப முகவர், தரகர்களிடம் பணத்தை கொடுக்காதீர்கள்

கடவுச் சீட்டையும் கையளிக்காதீர் என்கிறது ஹஜ் குழு

0 577

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை மேற்­கொள்ளத் திட்டமிட்­டி­ருப்­ப­வர்கள்  தங்­க­ளது கடவுச் சீட்­டுக்­க­ளையோ, பணத்­தி­னையோ  உப­மு­க­வர்­க­ளிடம்  அல்­லது  தர­கர்­க­ளிடம் வழங்க வேண்­டா­மென அரச ஹஜ் குழு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால்  இவ்­வ­ருடம்  நிய­மனம்  வழங்­கப்­பட்­டுள்ள ஹஜ்  முக­வர்­க­ளையே  ஹஜ்  கட­மைக்­காக   தொடர்பு  கொள்ளும்படியும்  வேண்­டி­யுள்­ளது.

இவ்­வ­ரு­டத்­துக்­கான  ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் அரச ஹஜ் குழுவின்  தலைவர்  கலா­நிதி எம்.ரி.சியாத் ஊட­கங்­க­ளுக்குக் கருத்துத் தெரி­விக்­கை­யிலே  இவ்­வாறு  கூறினார்.  அவர் தொடர்ந்தும்  கருத்து  தெரி­விக்­கையில், “இவ்­வ­ரு­டத்­துக்­கான  ஹஜ்  ஏற்­பா­டு­க­ளுக்­காக  முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால்  92 ஹஜ்  முக­வர்கள்  நிய­மனம்  பெற்­றுள்­ளார்கள்.  அவர்­க­ளது பெயர் விப­ரங்கள்  விரைவில் பத்­தி­ரி­கைகள்  வாயி­லாக  அறி­விக்­கப்­படும்.

ஒருசில  உப­மு­க­வர்கள்  ஹஜ் கட­மைக்கு  திட்­ட­மிட்­டுள்­ள­வர்­க­ளிடம் கடவுச்சீட்­டுக்­க­ளையும், முற்­ப­ணங்­க­ளையும்  பெற்று வரு­வ­தாக  புகார்கள் கிடைத்­துள்­ளன. இந்­நி­லையில்  திணைக்­க­ளத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள  முகவர்  நிலை­யங்­களைத் தவிர   வேறு  எவ­ருக்­கேனும்  முற்­பணம், கட­வுச்­சீட்­டுகள் வழங்­கப்­பட்டால் அதற்கு  திணைக்­க­ளமோ  அரச ஹஜ்­கு­ழுவோ  பொறுப்­பேற்க மாட்­டாது.

அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள  ஹஜ் முகவர் நிலை­யங்­களின்  பெயர்  விபரங்களுடன் அவர்களது  ஹஜ் கட்டணம்  என்பன விளம்பரப்படுத்தப்படும்.  ஹஜ்  பயணிகள்  தாங்கள் விரும்பிய  முகவர் நிலையங்களைத்  தெரிவு செய்துகொள்ளலாம் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.