பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியது தவறு: இரு உரிமை மீறல் மனுக்கள் பெப்ரவரி 7 இல் பரிசீலனைக்கு

0 570

மஹிந்த ராஜபக்ஷவை  கடந்த வருடம் பிர­த­ம­ராக நிய­மித்­தமை சட்­டத்­திற்கு எதி­ரா­னது எனவும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து அகற்­றி­யமை மற்றும் அமைச்­ச­ர­வையை நீக்­கி­யமை ஆகி­யன சட்­ட­வி­ரோதம் எனவும் உத்­த­ர­வி­டு­மாறு கோரி தாக்கல் செய்­யப்­பட்ட  இரு அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களை எதிர்­வரும் பெப்­ர­வரி  7 ஆம் திகதி பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்ள உயர் நீதி­மன்றம் நேற்று தீர்­மா­னித்­தது. அன்­றைய தினம் பொறுப்புக் கூறத்­தக்க தரப்­புக்கு அறி­வித்தல் விடுக்­கவும் இதன்­போது தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

தம்­பர அமில தேரர் மற்றும் ஜனா­தி­பதி ஊடகப் பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்­பா­ள­ரான ஓசல ஹேரத் ஆகி­யோரால் தாக்கல் செய்­யப்­பட்ட அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களே இவ்­வாறு பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. குறித்த மனுக்கள் நேற்று  உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­க­ளான பிர­சன்ன ஜய­வர்­தன மற்றும் எல்.பி.டி. தெஹி­தெ­னிய ஆகியோர் முன் பரி­சீ­லிக்­கப்­பட்­ட­போதே இவ்­வாறு ஒத்தி வைக்­கப்­பட்­டன.

மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக ரணில் விக்­கி­ர­ம­சிங்க, மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்கள், சட்­டமா அதிபர்  உள்­ளிட்ட 53 பேர் பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­விட்டு மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக நிய­மிக்க ஜனா­தி­பதி எடுத்த தீர்­மானம் 19ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­திற்கு எதி­ரா­னது என்று மனு­தா­ரர்கள் தமது மனுக்­களில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.  ஜனாதிபதியின் இந்த செயற்பாடு தமது அடிப்படை உரிமையை மீறியிருப்பதாக உத்தரவிடுமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றைக் கோருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.